எலுமிச்சை ஊறுகாய்

தேதி: September 8, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

எலுமிச்சம்பழம் - 1/2 கி
மிளகாய் பொடி - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்


 

முதலில் எலுமிச்சம்பழத்தை குக்கரில் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி 3 விசில் வர விடவும்
பிறகு எலுமிச்சம்பழத்தை எடுத்து நான்காகவோ அல்லது 8 ஆகவோ வெட்டி வேகவைத்த தண்ணீருடன் போட்டு அதில் மிளகாய் பொடி, உப்பு போட்டு கலக்கி வைத்து கொள்ளவும்
பிறகு வேறொரு வாணலியில் கடுகை போட்டு பொரித்து அதனுடன் பெருங்காயத்தையும் போட்டு பொரித்து எலுமிச்சம்பழத்தையும் பொட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விடலாம்
இந்த ஊறுகாய் 1 மாதம் வரை கெடாமல் இருக்கும் அவ்வபொழுது வெயிலில் வைத்து எடுத்து வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்


இந்த முறையில் செய்யும்பொழுது மிளகாய் பொடி, உப்பின் அளவு அவரவர் விருப்பபடி கூட்டி போட்டுக்கொள்ளலாம்.
உப்பும் உரைப்பும் அதிகம் இருந்தால் ஊறுகாயின் சுவை அதிகமாக இருக்கும். விரைவில் கெட்டும் போகாது
எண்ணெய் சேர்க்க விரும்புபவர்கள் கடுகையும் பெருங்காயத்தையும் எண்ணெயில் பொரித்தும் செய்யலாம்
எப்படி செய்தாலும் வெய்யிலில் வைத்து எடுத்தால் நன்றாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

முத்துமாரி,
ஊறுகாய் நல்லா இருக்கே...
வெய்யிலில் வைக்காம போட முடியுமா?

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவி
ஊறுகாயை வெய்யிலில் வைக்காமல் ஃபிரிட்ஜில் வைத்தும் உபயொகிக்கலாம் கட்டாயம் வெயிலில் வைக்க வேண்டும் என்றில்லை வெய்யிலில் வைத்தால் ஃபிரிட்ஜில் வைக்காமல் பயன்படுத்தலாம் அவ்வளவுதான்

அன்புடன்
முத்துமாரி

எலுமிச்சை ஊறுகாய் குறிப்பு மிகவும் நல்லா இருக்கு.