சர்க்கரைவள்ளிக்கிழங்கு பாயசம்

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - ஒரு லிட்டர்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - கால் கிலோ
சர்க்கரை- முக்கால் கப்
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
ஜாதிக்காய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
பொடியாக நறுக்கின முந்திரிப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கின பிஸ்தா - ஒரு மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கின சாரைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி


 

பாலைக் கொதிக்க விடவும். அந்த நேரத்தில் கிழங்கைத் தோல் சீவித் துருவவும்.
துருவி நீண்ட நேரம் வைத்து இருந்தால் கறுத்து விடும். எனவே பாலைக் கொதிக்க வைக்கும் போது துருவினால் நல்லது.
கொதிக்கும் பாலில் கிழங்குத் துருவலைக் கலந்து வேக விடவும். இது சீக்கிரம் வெந்து விடும்.
சர்க்கரை சேர்த்து, அடுப்பில் தீயின் அளவைக் குறைத்து, சர்க்கரை கரைந்தவுடன் இறக்கி விடவும்.
சர்க்கரை கரைந்ததும், ஏலப்பொடி, ஜாதிக்காய்ப் பொடி போட்டுக் கலந்து இறக்கவும்.
பொடியாக நறுக்கின முந்திரிப் பருப்பு, பிஸ்தா, சாரைப்பருப்பு முதலியவற்றைத் தூவவும்.
நைவேத்தியம் செய்தபின், குளிரவைத்துப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்