சுவையும் சத்தும் மிக்க கீரை சோறு

தேதி: September 9, 2010

பரிமாறும் அளவு: இரண்டு பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

பாசுமதி அரிசி - 200 மில்லி
கீரை (பாலக், ஸ்பினச்) - 100 கிராம்
உப்பு தேவையான அளவு

அரைக்க :-

காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய வெங்காயம் - 2 மேஜைக்கரண்டி
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1/2 அங்குலம்
புளிப் பேஸ்ட் 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 மேஜைக்கரண்டி

தாளிக்க :-

காய்ந்த மிளகாய் - 1
கடுகு - 1 தேக்கரண்டி
ஜீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது - 1 மேஜைக்கரண்டி
பூண்டு (இரண்டாக நறுக்கியது) - 6 பல்
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி


 

* சாதத்தை உதிரியான பதத்தில் வடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* பின்னர் 1/2 தேக்கரண்டி எண்ணெயில் கீரையை வதக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு 1 தேக்கரண்டி எண்ணெயில், அரைக்க வேண்டிய பொருட்களை பொன்னிறமாக வறுத்து, மிக்சியில் நீர் சேர்க்காமல் அரைத்து, அதனுடன் வதக்கிய கீரை, புளிப்பேஸ்ட் இவைகளை சேர்த்து, தேவையான உப்பு கலந்து கொண்டு, மறுபடியும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* கடாயில் மீதமுள்ள எண்ணெயில் நறுக்கிய பூண்டு பொன்னிறமாய் வறுத்து, தாளிப்பு செய்து, அரைத்த விழுதை கலந்து, லேசாக வதக்கிய பின்னர் உப்பு போட்டு வடித்த சாததையும் நன்கு கலந்து சுவையுடன் பரிமாறி மகிழ்க!


முந்திரி, திராட்சை,பாதம், வேர்க்கடலை தேவையெனில் வறுத்து சேர்க்கலாம்.
வெண்ணெய் சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கீரைச்சோறு நல்லா இருக்கும்மா. இதுபோல இன்னும் நல்ல குறிப்புகள்
கொடுத்துவரவும்.

Yours ideas are gud in cooking.

I am habiba begum from saudi