சுக்கு காப்பி

தேதி: September 9, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (6 votes)

 

சுக்கு - ஒரு துண்டு
மிளகு - ஒரு தேக்கரண்டி
இலவங்கம் - 3
பனைவெல்லம் - ஒரு கட்டி (சுவைக்கேற்ப)
துளசி இலை - ஒரு கைப்பிடி
காபிப்பொடி - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - 2 கப்


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். சுக்கை தட்டி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் சுக்கு, மிளகு, லவங்கம் இவற்றை போட்டு கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
பின்னர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து கொதிக்க வைக்கவும். கொதித்ததும் காபிப்பொடி, அரைத்தபொடி இரண்டையும் போடவும்.
அதன் பிறகு பனைவெல்லத்தை உடைத்து அதில் போடவும்.
பிறகு துளசி இலைகளை போடவும்.
நன்கு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி வைக்கவும்.
சுவையான சுக்கு காபி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இளவரசி மேடம், உங்க குறிப்பு பாத்ததுமே செய்யனும்னு ஆசையா ஆகிடுச்சு. ஆனா கைவசம் அனைத்து பொருட்களும் இல்ல. கண்டிப்பா செய்து பார்த்துட்டு பின்னுாட்டம் கொடுக்கறேன்.அப்பறம் காபி பொடி என்று குறிப்பிட்டுள்ளீா்களே அது இன்ஸ்டன்ட் காபி பொடியா அல்லது பில்டர் காபி பொடியா?

என்னோட அம்மா வேற மாதிரி போடுவாங்க. எப்படி பண்ணுவாங்கனு கேட்டு குறிப்பு போடுறேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இப்பதான் உங்களுக்கு பின்னூட்டம் கொடுத்துட்டு வந்தேன்..பார்த்தா நீங்க எனக்கு கொடுத்துருக்கீங்க..:-
நான் இன்ஸ்டண்ட் பொடிதான் போட்டிருக்கேன்..உங்கள் குறிப்பையும் போடுங்க..
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி......பேர் சொல்லியே அழையுங்கள் :-)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இந்த எளிய குறிப்பையும் வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு நன்றி

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இலவங்கம் என்றால் கிராம்பு தானே? please reply

shagila

ஆமாம்பா கிராம்பு தான்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி மேடம்,
இந்த முறையில் டீ மட்டுமே செய்து இருக்கேன்..
பால் சேர்க்கலாமா?(என்னால் குடிக்க முடியாது:-(()

என்றும் அன்புடன்,
கவிதா

இளவரசி,
சுக்கு காபி,கலக்கலா இருக்கு.வாழ்த்துக்கள். இங்கு துளசி கிடைக்காது. துளசி இல்லாமல்,வெறும் வெல்லம் சேர்த்து செய்யலாமா?

இளவரசி நானோ சுக்குக் காப்பி பிரியை. ஆனால் இங்கே பனைவெல்லம் கிடைக்காது :(. என்னையை இப்படி சுக்கு காப்பியை பார்த்து ஜொள்ளு விட வச்சுட்டீங்களே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பொதுவா சுக்கு காபி சும்மாவே குடிக்கலான்னாலும் ,இருமல்,ஜலதோஷத்திற்கு நல்லது.தொண்டை சரியில்லாமல் குடிக்கும்போது பால் சார்ந்த பொருட்கள் சேர்க்க வேண்டாம்பாங்க.....அதோட இதுமாதிரி காபியெல்லாம் பால் சேர்க்காம சாப்பிட்டாதான் சுவை...முழுப்பலன் இருக்கும்...பால் சேர்த்தா அதன் சுவை முழுசா கிடைக்காது.
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி...பேர் சொல்லியே கூப்பிடுங்க..:-)
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

என் தோட்டத்தில் துளசி சோலையே இருக்கு..பார்சல் அனுப்பவா?:-

துளசி சேர்த்தா ஜல்தோசத்திற்கு நல்ல பலன் இருக்கும்...சேர்க்காமலும் குடிக்கலாம்.கிடைக்கும்போது சேருங்க

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி மேடம் சுக்கு காபி எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா வித்தியாசமான செய்முறையாக உள்ளது. இது எளிய குறிப்பா இருந்தாலும் உள்ள விஷயம் இருக்குல. காபி பொடியை தவிர நீங்க சேர்த்து இருக்கறது எல்லாமே மருந்து பொருட்கள் தான். பார்க்க கஷாயம் போல் இருக்கு. பால் சேர்த்து குடிக்கலாமா. தனியா, சுக்கு, ஏலக்காய், வெல்லம் அல்லது ஜீனி, பால் இந்த பொருட்கள் பயன்படுத்திதான் எங்க வீட்டுல சுக்கு காபி செய்வாங்க. நீங்க இந்த மாதிரி செய்து குடித்ததுண்டா.

நீங்க ஜிமெயில் அதிகம் பார்க்கமாட்டிங்களா...அதான் மெயிலுக்கு பதில் போட முடிவதில்லை என நினைத்து கொண்டு அதிகம் மெயில் அனுப்புவதில்லை..
அப்பாவும் அறுசுவை பார்க்கறாங்கபோல..மகிழ்ச்சி..

பாம் சுகர் ன்னு மலேசியால நிறைய கிடைத்தது..சிங்கப்பூர்ல நிறைய கிடைக்குமே..எங்க்கும் இங்கே அதிகமா கிடைக்காது கவி..

இந்தியால இருந்து வரும்போது நிறைய கொண்டு வருவேன்

உங்கள் குடும்பத்திற்கு என் அன்பு...உங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றி :-

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

என் பாட்டி ஒரு மாதிரி செய்வாங்க..என் மாமியார் ஒரு மாதிரி செய்வாங்க..நான் இரண்டு முறையும் கலந்து இதுமாதிரி செய்கிறேன்.
தனியா குளிர்ச்சி ங்கறதால ஜலதோசம் ,இருமலுக்கு ன்னு வச்சு குடிக்கும்போது சேர்க்கறதில்ல..மேலும் மல்லி காபின்னு அந்த சுவைக்கு தனியா வச்சு குடிப்போமில்ல..அதனால இதுல சேர்க்கறதில்ல...

உங்க பின்னூட்டத்திற்கு நன்றி வினோஜா..உங்க பேர் நல்லா இருக்கு :-)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி மெயில் அனுப்பியிருக்கேன் பாருங்க. அப்பாவும் டெய்லி விசிட் அடிக்கறாங்க :).

நீங்கள் சொல்வது குலா மெலாக்கா தானே. ஆனால் அது கருப்பட்டி போல் சுவை தர மாட்டேங்குது :(. ஆனால் பாயாசத்துக்கு யூஸ் பண்ணுவேன் நல்லா இருக்கும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இளவரசி, உங்கள் குறிப்பு நன்றாக இருக்கிறது. நாங்கள் இதில் தனியா, சிறிது கருஞ்சீரகம், திப்பிலி, சேர்த்து காய்ச்சி பாலுடன் கலந்து அருந்துவோம். இதை செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் அளிக்கிறேன். வாழ்த்துக்கள்.

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நான் இதுவரை சுக்கு காபியில் பால் சேர்த்ததில்லை..நீங்கள் சொல்லும் கருஞ்சீரகம் ஓமமா?என் மாமி ஓமம்,திப்பிலி எல்லாம் சேர்ப்பாங்க..
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

romba nalla irukkuthu super sukku coffe

ஆமாம், இளவரசி. கருஞ்சீரகம் என்பது ஓமம் தான்.
எனது பின்னூட்டத்தை பார்வை இட்டதற்கு நன்றி.
உங்கள் பணி தொடரட்டும்.

ரங்கலஷ்மி லோகேஷ்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நிஷா நன்றி..குடிச்சு பார்த்துட்டு சொல்லுங்க:-

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

முதல் முறையா அறுசுவையில் என்னுடைய கேள்விக்கு பதில் அளித்த உங்களுக்கு நன்றி

shagila

சுக்குக்காபி பால் சேர்க்காம செம டேஸ்டா இருக்கு.

செய்து பார்த்துட்டு பின்னூட்டம் தந்ததற்கு நன்றி சித்ரா :-)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி மெயில் அனுப்பினேன் பார்த்தீங்களா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரங்க்லஷ்மி அவங்க பதிவில் கருஞ்சீரகம்தான் ஓமம் என்று சொல்லி இருந்தாங்க.
எனக்குத்தெரிந்தவரை ஓமம் அஜ்வைன்னு சொல்வாங்க. கருஞ்சீரகம் கலோஞ்சி
நு சொல்வாங்க.

புது மெயில் ஐடி கொடுத்து இருந்தீங்க இல்ல ..பார்த்தேன்...கவி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அஜ்வை,கலோஞ்சி வார்த்தைகளை இப்போதுதான் கேட்கிறேன்...தங்கள் பதிவிற்கு நன்றி....சித்ரா

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

சித்ரா கலோஞ்சின்னா அது வெங்காய விதைகள் தானே அது பெங்காலி சமையலில் அதிகம் பயன் படுத்துவார்கள்.
கலோஞ்சி= வெங்காய விதை= கருஞ்சீரகம் எல்லாமே ஒண்ணுதான்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி நீங்க சொன்னபடி கலோஞ்சி வெங்காய விதைதான் கருப்பு ஜீரகம்,
கலோஞ்சின்னு பேர், பொடிசா இருக்குமே அது ஷாஜீரா, .பெருஞ்சீரகம் படீசோம்ப்
அதாவது சோம்பு. சாதாவா நம்ம சமையலில் பயன் படுத்துவது ஜீரகம்.
பெங்காலிக்காரங்க நிரைய சமையலில் கருஞ்சீரகம் தான் சேர்ப்பாங்க.

நானும் சிங்கபூர் முஸ்தாபாவில் ஜொவார் மாவு பாத்திருக்கேன். நீங்களும்
அதுபற்றி விளக்கமாக சொன்னது ரொம்ப சந்தோஷம் சோள்த்திலும் வெரைட்டிகள் உண்டே இல்லியா?

சித்ரா, நீங்கள் குறிப்பிட்டது போலவே கருஞ்சீரகம் என்றால் வெங்காய விதை தான். நான் பெருஞ்சீரகத்தைத் தான் கருஞ்சீரகம் என எழுதி விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

என்னங்க இது மன்னிக்க என்று பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு
யாருக்கு என்ன சந்தேகம் என்றாலும் ஓடிவந்து தீர்த்துவைக்க எவ்வளவு
விஷயம் தெரிந்த தோழிகள் ஹெல்ப் பண்ராங்க.

சித்ரா, நன்றி. உங்களுடைய புல்கா ரொட்டி அருமை. இன்னும் செய்து பார்க்கவில்லை, என் கணவர் செய்து தரச்சொன்னார், இனிமேதான் செய்யனும்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

உடனே செய்து பாருங்க. மறக்காம நல்லா வந்ததான்னு சொல்லுங்க. ஓ. கே. வா

கண்டிப்பாக அன்புத் தோழி சித்ரா, இன்னும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.
எனது கணவருக்கு இந்த மாதிரி ஐட்டம்ஸ் ரொம்ப பிடிக்கும். அதிலும் டிஃபரண்ட்டா செஞ்சா என் பொண்ணுக்கும் ரொம்ப பிடிக்கும்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நாம ரெண்டு பேரும் புல்கா ரொட்டியை விட்டுட்டு சுக்குகாபி பகுதில
பேசிண்டு இருக்கோமே? யாரானும் வந்து கேகரதுக்கு முன்பே அங்க
போயிடலாமா?

nice recipe

பாத்திமா,உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உடம்புக்கு நல்ல காப்பிதான் இது இளவரசி பனைவெல்லம் இல்லை அதனால்
சாதாவெல்லம் சேர்த்து செய்தேன் நன்றாக காரமாக இருந்தது நல்ல
அருமையான குறிப்புகளை தந்த உங்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்..

வாழு, வாழவிடு..

ச.அ க்காக என்னுடைய நிறைய குறிப்புகள் முயற்சி செய்ததில் மகிழ்ச்சி
மிக்க நன்றி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் இளவரசி,எப்படி இருக்கீங்க?

சாரி பிரின்சஸ்,உங்களோட குறிப்பில் நான் முதன்முதலாக செய்தது சுக்கு காபிதான்.அதுக்கு பதிவு போடாம விட்டிருக்கேன்.இப்பதான் கவனிச்சேன்.சாரி.

எங்க வீட்ல தினமும் சுக்கு காபிதான்.ஆனா,மிளகு,லவங்கம் எல்லாம் சேர்த்ததில்லை.உங்களோடது பார்த்து செஞ்சேன்,சூப்பர் டேஸ்ட்.இப்பெல்லாம் எங்க வீட்ல உங்க சுக்கு காபிதான்.நன்றி இளவரசி.

அன்புடன்
நித்திலா