அக்கி - வீட்டு வைத்தியம்

என் அப்பாவிற்கு 75 வயது ஆகிறது. அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதிகளில் அக்கி வந்துள்ளது. இதற்கு எதாவது வீட்டு வைத்தியம் உள்ளதா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்.

அக்கிக்கு வீட்டு வைத்தியம் என்றால் பழைய ஓடு உரசி போடுவாங்க. சந்தனம் தேய்ங்க.

நிறையா தண்ணீர்,ஜூஸ் கொடுங்க. சரியாயிடும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி ஆமினா.
அக்கி சூட்டினால் வருவது தானே? அல்லது தோல் வியாதியா?
இதற்கு சிகிச்சை எடுத்தவர்கள் அனுபவத்தை சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.

ஹாய் ஜிஜு அக்கி என்பதை ஆங்கிலத்தில் ஹெர்பிஸ்(HERPES) என்பார்கள். அது ஒருவகை வைரசால் வருவது. அதற்கு ஆங்கில மருத்துவத்தில் ஸ்ட்ராங் ஆண்டிபயாட்டில் மருந்துகளும் ஆயின்மெண்டும் கொடுப்பார்கள். பொதுவாக இந்த வைரஸ் நம் உடல் பலவீனமடையும் போது தலைதூக்கும். சரியான தூக்கமின்மை, ஸ்ட்ரெஸ், சிறிய காய்ச்சல், ஜலதோஷம், இருமல் இவை இருக்கும் போது உடல் பலவீனமாகும் அப்போது இந்த வைரஸ் தன் வேலையை காட்டும். மருந்துகள் எடுத்துக் கொண்டால் குணமாகி விடும். ஆனால் எப்போதும் உடலை ஆரோக்கியமக வைத்திருப்பது நல்லது. எனக்கு இது வந்த போது என் மருத்துவர் எனக்கு சொன்னது இது. குணமாகி விடும். மீண்டும் வராமல் இருப்பது நம் கையில்தான் இருக்கிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி சொன்னது போல் வைரஸாக இருக்கலாம். சரியாக தெரியவில்லை. சூட்டினால் வருவதாக தான் என் மாமியார் சொல்லுவாங்க. அம்மை போன்றது தான். சோ வைரஸ் பரவல் ஆகத்தான் இருக்கும்.

எங்கள் வீட்டில் உறவினர் மகனுக்கு வந்தது. ஓடு தான் அரைத்து போட்டார்கள். சின்ன குழந்தைக்கு வந்த போது லாக்டோ கேலமைன் விடாமல் தடவினார்கள். சரியானது. கவலப்படுவதற்கொன்றும் இல்லை.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி கவிசிவா & ஆமினா. குயவனிடம் சென்று முதுகில் படம் வரைந்து வந்தார்கள். அலோபதி மருந்துகளும் எடுத்து வருகிறார்.

சிறந்த தோல் (அல்லோபதி) மருத்துவரை அணுகவும்.ஒரு இன்ஜெக்க்ஷன் போடுவார்கள். உடன் காய்ந்து விடும்.

மேலும் சில பதிவுகள்