IDLY

DEAR,
THERE IS NO GRINDER IN MY HOME.
ONLY MIXIE.
I LOVE IDLY
PLEASE TELL ME HOW TO MAKE SOFT IDLY

ஹாய் மஞ்சு
அரிசி ரவை/இட்லிரவை- 2 தம்ளர்
உளுந்து- 1 தம்ளர்
உளுந்தை 8 மணி நேரம் ஊற வைகவும் இட்லிரவையை மூடும் அளவு தண்ணீர் விட்டு 4 மணி நேரம் ஊற் வைக்கவும் உளுந்தை மிக்ஸியில் போட்டு பந்து பதத்துக்கு அரைத்து அரிசி ரவையுடன் சேர்க்கவும்

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

DEAR MEERA,
THANK YOU,
THERE IS NO TAMIL VERSION IN MY COMPUTER.
PLEASE TELL ME WHAT RICE I HAVE TO USE.
RAW RICE OR BOILED RICE.

இட்லிக்கு மீரா பதில் சொல்லுவாங்க;-)

கீழே தமிழ் எழுத்துதவி இருக்கும் பாருங்க அதுல போயி தமிழ் டைப் பண்ணலாம்:-).

Don't Worry Be Happy.

இட்லி

தாராளமா மிக்ஸியில் அரைக்கலாமே!

புழுங்கல் அரிசியில் கால்பாகம் பச்சரிசி ,உளுந்து ஊற வைத்து தனி தனியா அரைக்கனும். அரைக்கும் போது நல்லா குளிர்ந்த தண்ணீரை ஊற்றி அரைக்கனும். அப்ப தான் மோட்டர் சூடு மாவை தாக்காது. நல்லாவும் வரும்.

அரிசியை ரவை மாறி அரைச்சா போதும். ஆனா உளுந்து மட்டும் நல்லா அரைச்சுடுங்க. பொங்க பொங்க நல்லா அரைச்சா தான் இட்லி நல்லா சாப்ட்டா வரும்.

சாதம் கூட கால் கப் சேர்க்கலாம்.

நான் அப்படி தான் செய்வேன். நான் இருக்கும் இடத்தில் கிரண்டர் என்றால் என்னவென்றே தெரியாதாம் :(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்