ராஜ்மா சுண்டல்

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ராஜ்மா எனும் சிவப்பு நிறப் பயறு - ஒரு கப்
குறிப்பில் உள்ள பொடி ருசிக்கு ஏற்ப
புளி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
தாளிப்பதற்கு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு


 

ராஜ்மாவை, குறிப்பில் சொன்ன முறையில் ஊற வைத்து எடுத்துக் கொண்டு, பிரஷர் பானில் 4 விஸில் வரை வேக வைக்கவும்.
குக்கரைத் திறந்து எடுத்து, நீரை வடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பயறைக் கொட்டி, புளியை 1/2 கப் தண்ணீரில் கரைத்து விடவும்.
உப்பு, மஞ்சள் பொடி போட்டு, கொதித்து சேர்ந்து வந்ததும், பொடியைத் தூவிக் கலந்து இறக்கவும்.
இறக்கினதும் நறுக்கின கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்.


கடலைபருப்பு, பாசிப்பருப்பு முதலியவற்றைத் தவிர மற்ற பயறுகள் அனைத்தையும், ஒரு கப் பயறுக்கு அரை தேக்கரண்டி சமையல் சோடா என்ற அளவில் போட்டு குறைந்தது 10 மணி நேரம் ஊற வைக்கவும்.
வேகவைப்பதற்கு முன்பு, நன்கு சோடா போகக் கழுவி விட்டு, பயறு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு பிரஷர் குக்கரில் வேகவிடவும்.
6 மிளகாய் வற்றல், 2 மேசை கரண்டி தனியா, 1 தேக்கரண்டி காயம் மூன்றையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடி பண்ணி வைத்து கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்