ஸ்டஃப்ட் பேன்கேக்

தேதி: September 9, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் ஸ்லைசெஸ் - 6
முட்டை - 2
வெங்காயம் நறுக்கியது - 1
மல்லி இலை நறுக்கியது - 3 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
டொமடோ கெச்சப் - 1 ஸ்பூன்
சோய் சாஸ் - 1 ஸ்பூன்

ஃபில்லிங்கிற்கு
===========
சாசேஜ் - 8 வில்லைகளாக நறுக்கியது
வெங்காயம் - 1
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு நறுக்கியது


 

முதலில் ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி ப்ரெட் மற்றும் முட்டையை நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்..அதில் கெச்சப் மற்றும் சோய் சாசை கலந்து வைத்துக் கொள்ளவும்
ஃபில்லிங்கிற்கு கொடுத்துள்ளவற்றை 1 ஸ்பூன் எண்ணையில் ஒன்றாக வதக்கிக் கொள்ளவும்
பின் ஒரு பெரிய பரந்த பேனில் லேசாக எண்ணை விட்டு நறுக்கிய வெங்காயம் மல்லி இலை தூவவும்.அதன் மேல் உடனே அரைத்த ப்ரெட் கலவையை பாதியளவு பரவலாக தோசை போல் ஊற்றவும்.
அதன் மேல் வதக்கிய சாசேஜ் கலவையை பரவலாக தூவவும்
பின் அதன் மேல் மீதமுள்ள ப்ரெட் கலவையையும் ஊற்றவும்.பின்பு திரும்ப அதன் மேல் நறுக்கிய வெங்காயம் மல்லி இலை தூவவும்
மூடி இட்டு குறைந்த தீயில் வேக விடவும்
இருபக்கமும் வெந்தபின் திருப்பி இட்டு சுட்டெடுக்கவும்
சரியாக திருப்ப வரவில்லிஅயெனில் அதை விட ஒரு பெரிய பேனிற்கு கவிழ்த்து இட்டு சுடவும்
நன்கு வெந்தபின் வெட்டி எடுத்து சூடாக பரிமாறவும்.சைவ விரும்பிகள் காய்கறி கலவையை வைக்கலாம்


இதனை டீ டைம் ஸ்னேக்காக உண்ணலாம்..பொதுவாக நோன்பு காலத்தில் நோன்பு திறக்க தான் இதனை இஸ்லாமிய இல்லங்களில் செய்வோம்

இதற்கு சாசேஜ் ஃபில்லிங்கை எளிமிக்காக கொடுத்திருக்கிறேன்..பொதுவாக சிக்கன்,மட்டன் ஃபில்லிங்கில் தான் செய்வோம்.சமோசாவிற்கு வைக்கும் ஃபில்லிங்குகள் இதற்கும் வைக்கலாம்..இன்னும் சுவையாக இருக்கும்
ஒரு வித்யாசமான உணவு ரெடி

மேலும் சில குறிப்புகள்


Comments

அருமையான குறிப்பு. கட்டாயம் செய்து பார்த்துவிட்டு சொல்றேன்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வித்தியாசமான குறிப்பு. ;)

‍- இமா க்றிஸ்

நிச்சயம் செய்து பார்ப்பேன்.பிள்ளைகளுக்கு இது மாதிரி என்றால் மிகவும் பிடிக்கும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.