திண்டுக்கல் பிரியாணி சமையல் குறிப்பு - 16282 | அறுசுவை


திண்டுக்கல் பிரியாணி

food image
வழங்கியவர் : ஆமினா
தேதி : ஞாயிறு, 12/09/2010 - 16:00
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு : 6 நபர்கள்

 

 • பாஸ்மதி அரிசி -4 டம்ளர் (1 கிலோ)
 • கோழி-1 கிலோ
 • தேங்காய் பால்-2 டம்ளர்
 • தண்ணீர்-5 டம்ளர்
 • நாட்டு தக்காளி- 4(நான்கு நான்காக நறுக்கவும்)
 • வெங்காயம்-2
 • சின்ன வெங்காயம் விழுது- 1/2 கப்
 • இஞ்சி,பூடு விழுது-4 ஸ்பூன்
 • புதினா-1 கட்டு
 • கொத்தமல்லி-1 கட்டு
 • பச்சை மிளகாய்-6
 • நெய்- 100 கிராம்
 • தயிர்- 1/2 கப்
 • எலுமிச்சை-3
 • தரமான மிளகாய் தூள்-3 ஸ்பூன்
 • பட்டை,ஏலக்காய்,கிராம்பு(வாசனை தூள்)-1 ஸ்பூன்
 • முந்திரி-10
 • உப்பு-தேவைக்கு
 • வாசனை பொருட்கள்:-
 • பட்டை-1
 • ஏலக்காய்-2
 • கிராம்பு-3
 • பிரிஞ்சி-2
 • அன்னாசி பூ-2

 

 • சட்டியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் வாசனை பொருட்கள் சேர்த்து கிளறவும்.
 • பின் கொத்தமல்லி,புதினா, மிளகாய் சேர்த்து சுருங்கியதும் வெங்காயம் சேர்க்கவும்.
 • பொன்னிறமாக வந்ததும் இஞ்சி,பூடு விழுது மற்றும் வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
 • மிளகாய் தூள் மற்றும் வாசனை தூள் சேர்க்கவும்.
 • தக்காளி சேர்த்து வதங்கியதும் தயிர் சேர்த்து கிளறி பின் கோழியை சேர்க்கவும்.
 • கோழியில் மசாலா ஒட்டும்படி பிரட்டி 5 நிமிடத்தில் தேங்காய் பால், தண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
 • கோழி அரைவேக்காடாக வெந்ததும் கழுவிய அரிசியை சேர்க்கவும்.
 • கால்வாசி தண்ணீர் இருக்கும் போதே எலுமிச்சை சாறு சேர்த்து அனைத்தும் ஒன்று சேர்ந்தார் போல் ஒரு முறை கிளறிவிடவும்.
 • தம்மில் போட, கீழே சூடு காட்டிய தோசைகல்லும் மூடியின் மேல் ஆவி போகாத அளவு கனமான பாத்திரமும் அல்லது தண்ணீர் நிரப்பிய பாத்திரவும் அல்லது நெருப்பு கங்கும் வைத்து சிறுதீயில் 15 நிமிடம் வைக்கவும்.
 • 15 நிமிடங்கள் கழிந்ததும் தீயை அணைத்து தேவைபடும் போது பரிமாறலாம்.
சுருள் பட்டை விட நேர்பட்டை வாசம் கொடுக்கும். நாட்டு தக்காளி நல்ல புளிப்பு சுவை கொடுக்கும். கிடைக்கவில்லை என்றால் பெங்க்ளூர் தக்காளி 1 அல்லது 2 அதிகமாக சேர்க்கவும். பச்சை மிளகாயை நறுக்க தேவையில்லை. காம்பு மட்டும் உரித்து சேர்க்க வேண்டும். இதற்கு எந்த ஒரு கலரும் சேர்க்காததால் மிளகாய் பொடி மற்றும் வாசனை பொடியின் கலரே போதுமானது. அதனால் தான் நல்ல தரமான மிளகாய் தூளை குறிப்பிட்டுள்ளேன். காஷ்மீர் மிளகாய் தூள் அல்லது சக்தி மிளகாய் தூள் உபயோகிக்கலாம். நெய் தவிர வேறேதும் சேர்க்காததால் அந்த அளவு கொடுத்தேன். நெய் அதிகம் சேர்க்க விருப்பம் இல்லை என்றால் குறைத்துக்கொள்ளலாம். அல்லது பாதி ரீபைண்ட் ஆயில் சேர்க்கலாம். டால்டா தேவையில்லை. எலுமிச்சையை அதிகமாக பிழிய கூடாது. லேசாக சாறு வரும்வரை மட்டும் பிழியவும். ஏனென்றால் கசப்பை ஏற்படுத்தும். வெறும் கொத்தமல்லி இலை, புதினா இலை மட்டும் எடுக்காமல் தண்டும் சேர்க்கவும். அதாவது கொத்தமல்லி (வேரை தவிர),புதினா (கடினமான தண்டு தவிர) கடைசி வரை ஆய்ந்து உபயோகிக்கவும். தண்டும் வாசனை கொடுக்கும் என்பதால்.


ஆமினா

ஏற்கனவே சிக்கன்பிரியாணி வாசனையைத்தூக்கும், இதுல தேங்காய்பால் வேற சேர்த்து ம்ம்ம்ம் நல்லா மூக்கத்துளைக்குது, இந்த வாரம் கண்டிப்பா செஞ்சுடறேன். விருப்பப்பட்டியிலும் சேர்த்தாச்சு;)

Don't Worry Be Happy.

ஆமி

ஆமி... படிக்கும் போதே நாவில் எச்சில் ஊறுது :). விருப்பப் பட்டியலில் சேர்த்துட்டேன். முடிந்தால் இந்தவாரம் செய்துவிட வேண்டியதுதான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ஜெயா

நேத்து ரம்ஜானுக்கு இதை தான் செய்து அசத்தினேன் ஜெயா. இங்கே யாருக்கும் அவ்வளவா பிரியாணி செய்ய தெரியாது. கடையிலும் கூட நல்லா இருக்காது. ஐதரபாத் பிரியாணின்னு சொன்னதும் சந்தோஷத்துல சாப்பிட்டாங்க மிச்சம் வைக்காம. நீங்களும் செய்து பாருங்க. சுவைக்கு நான் கேரண்டி :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி கவிசிவா

கண்டிப்பா செய்து பாருங்க கவி. சுவையா இருக்கும். இது திண்டுக்கலில் செய்யும் முறை. திண்டுக்கல் தலைப்பாகட்டு பிரியாணின்னு தான் தலைப்பு போட போனேன். என்னவர் அங்கே கம்பெடுத்துட்டு வந்துட்டார். அதான் அடக்கமா போட்டேன் :)

விசேஷங்கள், திருமணங்களின் போதும் இதே முறையில் தான் அங்கே செய்கிறார்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா

ஆமினா,
பிரியாணி நல்லா இருக்கே!
தம் போட தீக்கங்கு கிட்டாது ஓவனில் வைத்து தான் எடுப்பேன்
செய்து பார்கிறேன்
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

நன்றி கவிதா

எனக்கு ஓவன் முறை தெரியாது.செய்துட்டு சொல்லுங்க.

நன்றி கவிதா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

திண்டுக்கல் பிரியாணி

சூப்பர்.செய்து பார்க்கணும்.நெய் மட்டும் என்றால் 100 கிராம் மட்டும் போதுமா?விளக்கம் அருமை.பாராட்டுக்கள்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆமி

ஆமி

ஆஹா.. திண்டுக்கல் பிரியாணி என்றதும் உடனே இந்த பக்கத்திற்கு வந்துவிட்டேன். ;)

விருப்ப பட்டியலிலும் சேர்த்துவிட்டேன். ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் ரம்யா கார்த்திக்

விருப்பமான பதிவை விருப்ப பட்டியலில் சேர்ப்பது எப்படி...

விருப்பப் பட்டியல்

ஒவ்வொரு குறிப்பின் கீழேயும் கமெண்டுகளுக்கு மேலே விருப்பப் பட்டியலில் சேர் னு ஒரு லின்க் இருக்கும். அதை க்ளிக் பண்ணினா வேலை முடிஞ்சுது :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!