இறந்தவர்கள் ஆவியாய் நேரில் வந்தால்!!

அனந்தபுரத்து வீடு படத்தில் இறந்துபோன நாயகனின் அம்மா,அப்பா ஆவியாய் வருவதாய் காட்டியிருப்பாங்க. பேரக் குழந்தையுடன் அவர்கள் விளையாடுவதும், மகன் மருமகளை அடித்துவிட்டான் என்று அப்பா தடியால் மகனை அடிப்பதும், அதை அம்மா தடுத்து, இரவில் அடிபட்ட மகனுக்கு பத்து போடுவதும் என்று நெகிழ வைத்திருப்பார்கள். நம் வாழ்க்கையில் இப்படி நடக்க ஒரு சான்ஸ் கிடைச்சா யார் ஆவியா வரணும்னு நினைப்பீங்க. என்ன கேப்பீங்க, என்ன சொல்லுவீங்க...

ரங்ஸ் அதெல்லாம் சும்மாப்பா. ஆவியெல்லாம் ஒன்ன்னும் கிடையாது. சிலர் ஆவி அது இதுன்னு சொல்றதெல்லாம் உள்மனசுல உள்ள பயங்கள் மற்றும் விருப்பங்களின் வெளிப்பாடு அவ்வளவுதான்.

பவி இப்படியெல்லாம் பயப்படக் கூடாது.(இதை மட்டும் எங்கப்பா பார்த்தாங்கன்னா அதை நீ சொல்றியான்னு கேட்பாங்க :D). நானும் உங்களை மாதிரிதான் இந்திராகாந்தி போட்டோவைப் பார்த்தே பயந்த சூப்பர் தைரியசாலியாக்கும் நான். இப்பவும் தனியா தூங்கனும்னா விடிய விடிய லைட்டும் ரேடியோவும் ஆன் ஆகித்தான் இருக்கும் :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி
நிஜ்மா ரொம்ப பயமா இருக்கும். தெருவில் யாராவது இறந்துட்டா கூட அவ்வளவுதான் போங்க

அன்புடன்
பவித்ரா

பவி ஹா ஹா என்னை மாதிரியே இருக்கீங்களே! செலிப்ரிட்டிஸ் இறந்துட்டாலும் நான் பயப்படுவேன் :(. அதெல்லாம் முன்னாடி. இப்போ கொஞ்சம் தைரியசாலியாயிட்டேன் :).

ரொம்ப பயமா இருந்தா கந்தசஷ்டி கவசம் படியுங்க. தைரியம் வரும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பவிக்காக இதோட இந்த டாபிக்க விட்டுலாம்.போதுமா. பயப்படாதீங்க பவி தனியா இருக்கும்போது நீங்க தையரிமா இருக்கனும். சும்மா ஜாலியா பேசிக்கிட்டு இருக்கலாம் என்றுதான் இப்படி ஒரு கேள்வி. நாம இதப்பத்தி நினைச்சுட்டு இருக்கறதுதான் நம்மள ரொம்ப பலவீனமா ஆக்கிடும்.

ஒய்ஜா போர்ட் na eanna pa?

nan en mamavai koopduven.... yena nan en mamavai vittu pirinju iruken... en mamava nan pakanum..
nan chinna pillaila irunthu en mama than enna valathanga... aana ipa yarum enna paka matangurranga.. athanala en mamavathan nan kopduven....

மேலும் சில பதிவுகள்