எள் கத்தரிக்காய் கிரேவி (பிரியாணிக்கு)

தேதி: September 12, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (7 votes)

 

கத்தரிக்காய்- 4
கருப்பு எள்-50 கிராம்
நிலக்கடலை- 50 கிராம்
புளி- பெரிய நெல்லிக்காய் அளவு
சின்னவெங்காய விழுது- கால் கப்
தக்காளி விழுது- கால் கப்
பெரிய வெங்காயம்-2
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
சீரகத்தூள் -1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் -1
கடுகு- 1/4 ஸ்பூன்
உளுந்து -சிறிதளவு
கறிவேப்பிலை- சிறிது
எண்ணெய்- 2


 

நிலக்கடலையையும், எள்ளையும் தனி தனியாக வறுத்துக்கொள்ளவும்.

நிலக்கடலை தோலுரித்து இரண்டையும் பொடி பண்ணவும்.

கத்தரிக்காயை நீளவாக்கில் இரண்டாக வெட்டி ஒவ்வொரு துண்டிலும் மேலிருந்து கீழாக பாதி வரை 2 முறை கீறவும் (வேகவும், மசாலா இறங்கவும் வசதியாக இருக்க).

வறுத்து அரைத்த பொடியுடன் சிறிது தண்ணீர் தெளித்து கத்தரிக்காயில் சேர்த்து அரை மணிநேரம் ஊறவிடவும்.

எண்ணெயில் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

மஞ்சள் தூள்,மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து கிளறி கத்திரிக்காய் கலவையை சேர்த்து வதக்கவும்.

பின் புளி கரைசல், உப்பு, சின்னவெங்காய விழுது, தக்காளி விழுது சேர்த்து மிதமான தீயிலேயே வைத்து கத்திரிக்காய் வெந்ததும் பரிமாறலாம்.


நிலக்கடலை,எள் இருப்பதால் அதிக தீயில் வைத்தால் அடி பிடிக்கும். கிரேவி பதத்தில் வரவேண்டும். அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம். அவ்வாறு ஒரு வேளை தண்ணீர் அதிகமானால் சோள மாவு சேர்க்கலாம். பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆமினா இந்த கிரேவி எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனா எப்படி செய்றதுனு தெரியாது. இந்தக் குறிப்பு வெளியிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ். உங்க பிரியாணிக்கூட இந்த ரெசிப்பியும் செய்யப்போறேன்;)

Don't Worry Be Happy.

நன்றி ஜெயா
கண்டிப்பா செய்துடுங்க. அருமையா இருக்கும். மறக்காம ரிசல்ட் சொல்லிடுங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தக்காளி,& Onion வ்தகக்னுமா pls tel me

Manimekalai

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

ஹாய் மணிமேகலை....

நறுக்கிய பெரிய வெங்காயம் தான் பா எண்ணெயில் வதக்க வேண்டும். ஆனால் தக்காளி விழுதையோ,சின்ன வெங்காய விழுதையோ வதக்க தேவையில்லை. அதிக நேரம் தீயில் இருப்பதால் அதிலேயே பச்சை வாசனை போய்விடும். உங்களுக்கு பிடிகவில்லை என்றால் பிரச்சனை இல்லை. வெங்காயம் வதக்கும் போதே இரு விழுதையும் சேர்த்து வதக்குங்கள்...

செய்து பார்த்துட்டு மறக்காம சொல்லுங்க!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இன்று உங்க எள் கத்தரிக்காய் செய்தேன் பா ரொம்ப அருமையா இருந்தது. பிரியாணியுடன் அருமை அருமை

Manimekalai

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

மணிமேகலை
செய்தாச்சா? மறக்காம பின்னூட்டமிட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சி. இனி அடிக்கடி செய்து அசத்துங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் ஆமினா குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு பா நான் இது கேள்வி பட்டது இல்லை கண்டிப்பா செய்து விட்டு சொல்லுறன்

நான் கூட கல்யாணத்திற்கு முன் இந்த குறிப்பு கேள்விபட்டது இல்லை. எங்கள் ஊரில் பிரியாணிக்கு ரெய்தா மட்டுமே. திண்டுக்கல்லில் இதை ஒரு திருமணத்தில் சாப்பிட்டேன். புதுசா இருக்கேன்னு டேஸ்ட் பண்ணேன். அதன் பிறகு அந்த ஊரில் விருந்து விசேஷங்களில் பிரியாணிக்கு கட்டாயமாக அதை சேர்த்து வைத்தனர். இந்த ஊரில் மட்டும் தான் எள்கத்திரிக்காய் பேமஸ் போலன்னு நெனச்சுட்டு இருந்தேன். சென்னையிலும் திருமண விஷேஷங்கள், மற்றும் சில ஓட்டல்களில் தந்தனர். நமக்கு மட்டும் தான் இவ்வளவு நாளா இந்த ரெசிபி தெரியல அப்படின்னு நெனச்சுட்டு இருந்துட்டேன். அப்பறமா திண்டுக்கல்லில் உள்ள என் கணவரின் அண்ணன் மனைவியிடம் கற்றுக்கொண்டேன். இப்போது இது இல்லாமல் பிரியாணி இல்லை :)

நீங்களூம் செய்து பாருங்க :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமீனா, கிரேவி செய்முறை நன்றாக இருந்தது.
இதை வெஜ். பிரியாணிக்கு பயன்படுத்தலாமா?
சரி என்றால், சீக்கிரமே செய்து விடுவேன்.

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

எல்லாவற்றிற்கும் செய்யலாம் ரங்கா. குஸ்கா, வெஜ் பிரியாணி, தேங்காய் சாதம், நெய் சாதம், மஞ்சள் சோறு என எல்லாவற்றிற்கும் அருமையாக இருக்கும். சீக்கிரம் செய்து பாருங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா இதுவும் எனக்கு பிடிக்கும்.ஒரு சிறிய மாற்றம் சொல்லலாமா?.கத்தரிக்காயை கீறி அதில் மசாலா தூள்களை சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போல செய்து உள்ளேstuff செய்யலாம். கடைசியில் அரைத்து வைத்துள்ள எள்ளு கடலை விழுது சேர்த்தால் அடி பிடிக்கும் பிரச்சனை இருக்காது.

ஆந்திராவில் இருக்கும் என் மச்சி(நாத்தனார்) நீங்கள் சொன்ன முறையில் தான் செய்வார்கள். ஆனால் அந்த முறையில் செய்து பார்த்தது இல்லை. எள்ளும்,நிலக்கடலை வாசனையும் போக வேண்டும் என்றால் முதலில் தானே சேர்க்க வேண்டும்.கடைசியில் சேர்ப்பதால் பச்சை வாசம் போகுமா என தெரியவில்லை. அடிபிடித்தல் என்பது ஓரளவுக்கு தான் இருக்குமே தவிர (அவ்வப்போது கிளறினால் மட்டும் போதும்) பிரச்சனையாக இருக்காது இல்லையா ரீம்.எப்போதும் நான் இந்த முறையில் தான் செய்கிறேன்

என் நாத்தனாரும் இது பற்றிபேசும் போது அக்கா(மச்சானின் மனைவி) புளி நீரில் காய்கள் வேக நேரம் எடுக்கும் என்றார். அப்படி இருந்தால் நேரம் அதிகமானால் அதில் அதிகமாக கவனம் வேண்டும் இல்லையா?

கண்டிப்பாக அடுத்த முறை செய்து பார்த்துட்டு சரியான பக்குவத்தில் வந்தால் விளக்கப்பட குறிப்பு அனுப்பும் போது நீங்கள் சொன்ன முறையில் செய்து அனுப்புகிறேன் :) நன்றி ரீம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எள்ளும் கடலையும் வறுத்து பொடிசெய்வதால் பச்சைவாசனை அடிக்காது.அதேபோல் கத்திரிக்காய் வெங்காயம்,தக்காளி விழுதோடு வதக்கி முக்கால் வெந்தவுடன் புளி சேர்க்கலாம்.இறுதியில் எள்ளுவிழுதை சேர்க்கலாம். தாளிக்கும் போது மிளகு சேர்ப்பார்கள். எனக்கு ஒரு ஹைதராபாத் தோழி தான் சொல்லிகொடுத்தார்.

உங்கள் தோழியின் செய்முறையை கண்டிப்பாக ஒரு நாள் செய்து பார்க்கிறேன். நன்றி ரீம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா,
இந்த க்ராவியை ரொம்ப நாளா தேடிக்கொண்டே இருந்தேன்
நன்றி...
வெள்ளை எள்ளில் செய்யலாமா?
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா

வெள்ளை எள்ளிலும் செய்யலாம் கருப்பு எள் கிடைக்காத பட்சத்தில். ஆனால் கருப்பு எள்ளில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும். ஒரு முறை வெள்ளை எள்ளிலும் செய்தேன். அதிக வித்தியாசம் தெரியவில்லை.

முயற்சித்துப்பாருங்கள். செய்து பார்த்துட்டு சொல்லுங்க
மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எள், கத்தரிக்காய் க்ரேவி நல்லா வந்தது. நானும் வெள்ளை எள்ளுதான் யூஸ்
பண்ணினேன்.

செய்துட்டு பின்னூடமிட்டதுக்கு மிக்க நன்றி கோமு

வெள்ளை எள்ளா? அடுத்த முறை செய்யும் போது கண்டிப்பா இனி வெள்ளையெள்ளை முயற்சிக்கிறேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி.. படிக்கும்போதே நாக்குல எச்சி ஊறுதே... நல்லாருக்கும் போலவே.. நான் நிலக்கடலை மட்டும் சேர்த்து கறி பண்ணும்போது போடுவேன். ஆனா எள்ளும் சேர்த்து கிரேவி மாதிரி பண்ணியதுகிடையாது. நல்ல குறிப்பு. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்றேன்.. விருப்பப்பட்டியலில் சேர்த்துட்டேன்

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆமி,ராதா
நேத்து ராதாவோட fried riceசும் இந்த கத்திரிக்காய் கிரேவியும் செய்தேன் என்னவர் அசந்துட்டார் hotel fried riceச விட சூப்பர் இந்த கிரேவியை ரொம்ப நல்லா இருக்குனு fullல சாப்ட்டார்
நன்றி ஆமி,ராதா

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

தேங்ஸ் மீரா.. செய்து பார்த்துட்டு பின்னுாட்டம் கொடுத்ததற்கு..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மீரா மிக்க நன்றி!!! சந்தோஷமா இருக்கு உங்க பின்னூட்டத்தை பார்க்கும் போது

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நம்மூர் பக்கம்லாம் இன்னும் பலருக்கு இது தெரியாது பா. கல்யாணத்துல கூட இந்த டிஷ் இருக்காது. ஆனா எல்லா ஊர்லையும் இருக்கு.

செய்துட்டு மறக்காம சொல்லுங்க ராதா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அஸ்லாமுஅலைக்கும் ஆமினா எள் கத்திரிக்காய் செய்துபார்து சொல்றேன்

வ அலைக்கும் சலாம் வரஹ்.....
பாத்திமா நல்லா இருக்கீங்களா? செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இன்று உங்க எள் கத்தரிக்காய் செய்தேன் பா ரொம்ப அருமையா இருந்தது உங்க திண்டுக்கல் பிரியாணியுடன் அருமை அருமை

எள் கத்திரிக்காய் பிரியாணியுடனா? பேஸ் பேஸ்.......

நஸ்ரின் மிக்க நன்றி செய்து பார்த்து மறக்காம பின்னூட்டமிட்டதற்கு.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா 2 நாள் முன் பார்ட்டிக்கு பிரியாணி கூட இதை செய்தேன்... ரொம்ப ரொம்ப அருமைங்க. எல்லாரிடமும் பலத்த பாராட்டு வாங்கி தந்தது. மிக்க நன்றி சுவையான குறிப்புகள் பல தந்தமைக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா
மிக்க நன்றி செய்து பார்த்து மறக்காம பின்னூட்டமிட்டதற்கு.

விருந்துக்கு நான் வராம போய்ட்டேனே :(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் ஆமினா
உங்களோட எள், கத்தரிக்காய் கிரேவி இன்னைக்கு சாம்பார் சாதத்துக்கு செய்தேன். ரெம்ப அருமையா இருந்தது. என் ரெம்ப நல்லா வித்தியாசமா இருக்குனு சொன்னார். இரவு சப்பாத்திக்கும் அதையே தொட்டுக்கிட்டார். சூப்பரா இருந்தது.

ஆமினா மேடம்,

உங்களுடைய எண்ணெய் கத்திரிக்காய் செய்து விட்டோம்.அபார சுவையுடன் இருந்தது,அனைத்தும் உடனே காலி.இஸ்லாமிய இல்ல திருமணங்களில் சுவைத்ததை விட இது மிகவும் சுவையுள்ளதாக இருந்தது.என் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது.My friends conveyed their thanks to you.சாப்பிட்ட அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுத் தந்தது,அனைத்தும் உங்களையே சாரும்.என் சார்பாகவும்,என் நண்பர்கள் சார்பாகவும் உங்களுக்கு நன்றியும்,வாழ்த்துதல்களும்.

அடுத்த வார இறுதியில் உங்கள் குஸ்கா recipe செய்து பார்க்க விரும்புகிறோம்.குஸ்கா குறிப்பின் கீழ் சில சந்தேகங்கள் கேட்டுள்ளோம்.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தெளிவுபடுத்தி தருவீங்களா.நன்றி.