மெகந்தி டிசைன் - 4

தேதி: September 13, 2010

2
Average: 2 (5 votes)

 

சாட் பேப்பர்
கருப்பு ஸ்கெட்ச் பென்

 

சாட் பேப்பரில் கையின் வடிவத்தை வரைந்து கொள்ளவும். இப்போது மணிக்கட்டு கீழுள்ள பகுதியில் நடுவில் ஒரு மாங்காய் டிசைனை வரையவும். அதன் கூரிய முனையின் ஓரத்தை சுற்றி மயிலின் கழுத்து, மூக்கு பகுதியை வரையவும். படத்திலுள்ளது போல் மயிலின் தோகை போன்று வரைந்து அதனுள்ளே கோடுகளும், புள்ளிகள், முத்து போன்ற டிசைனையும் ஒவ்வொரு வரியாக மாறி மாறி வரைந்து கொள்ளவும். இந்த மயில் டிசைனுக்கு மேல் மூன்று இதழ்களுடைய பூவொன்றை வரைந்து அந்த பூவின் இடைவெளியிலிருந்து இதயம் வடிவில் சின்ன சின்னதாக வரைந்து கொண்டு வந்து அந்த பகுதியின் ஒரம் வரைக்கும் முடிக்கவும்.
இந்த மயில் டிசைனுக்கு கீழ் ஓரளவு இடைவெளி விட்டு கட்டைவிரலுக்கு அடியில் முக்கால் வட்டம் வரையவும். அந்த வட்டத்தின் மேல் மயில் தோகை வரைந்தது போல் இரண்டு தோகை வரைந்து கொள்ளவும். வட்டத்திற்கு, மயில் தோகைக்கு நடுவில் அரைவட்டம் வரைந்து அதனுள்ளே கட்டங்கள் வரையவும். பின்னர் வட்டத்திலும், மயில் தோகை டிசைனிலும் படத்திலுள்ள டிசைனை வரைந்து கொள்ளவும்.
அரைவட்டத்தின் நடுப்பகுதிக்கு சற்று கீழ் இறக்கி, அதன் மேலே மயில் தோகை வரைந்தது போன்று வரைந்து உள்ளே டிசைன் வரைந்து கொள்ளவும். இப்போது அரைவட்டம், மயில் தோகை இரண்டிற்கும் நடுவே ஒரு சிறிய அளவில் மாங்காய் டிசைன் வரையவும். மாங்காய் டிசைனில் கூர்ய முனையில் எதிர்புறத்தில் மூன்று இதழ் உடைய பூவொன்றை வரைந்து முடிக்கவும்.
வரைந்த பூ டிசைனுக்கு சற்று தள்ளி மாங்காய் டிசைன் ஓரத்திலிருந்து பூவின் இரண்டாவது இதழ் முடிய மீண்டும் ஒரு மயில் தோகை டிசைனை வரைந்து முடிக்கவும். இந்த மயில் தோகை டிசைனுக்கு அடியில் முன்பு வரைந்த அதே பூ டிசைனை வரையவும். ஆள்காட்டி விரல் பக்கம் இருக்கும் இதழ் மேலே சிறிய மாங்காய் டிசைனை வரைந்து, அதன் பக்கத்திலே ஒரு சிறிய மயில் தோகை வரைந்து அதன் உள்ளே படத்தில் இருப்பது போல் டிசைனை வரைந்துக் கொள்ளவும். மீதமுள்ள இடைவெளியில் இதயம் டிசைனை வரையவும்.
இதே போல் கட்டைவிரலை தவிர படத்தில் உள்ளது போல் நான்கு விரல்களுக்கும் இதயம் டிசைனை வரையவும். விரல் நுனிகளில் பாதியளவு கலர் செய்து விடவும். விரல் நுனிகளுக்கும், இதயம் டிசைனுக்கு நடுவில் உள்ள இடைவெளியில் சின்ன சின்ன பூஇதழ் டிசைனை வரைந்து முடிக்கவும்.
எளிமையான, அழகான அரபிக் மெகந்தி டிசைன் இது. இந்த டிசைனை கையில் மருதாணியாக போட்டு முடித்ததும் ஒவ்வொரு இதயம் டிசைனில் நடுவில் ஸ்டோன் பொட்டு வைத்து அலங்கரிக்கலாம். இந்த மெகந்தி டிசைனை அறுசுவை நேயர்களுக்காக வரைந்து காட்டியவர் திருமதி. அனுஷா அவர்கள்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

கலக்கீடீங்க!!!!!!!!!!!! ரொம்ப அழகா வந்து இருக்கு........ரொம்ப அழகா, நலினமான டிசைன்....

அட்மின் அண்ணா-க்கு ஒரு சின்ன வேண்டுகோள். கொஞ்ஜம் designs பெருசா இருந்தா, இன்னும் கொஞ்ஜம் நல்லா இருக்கும்.....எங்களுக்கும் பழக ஈசியா இருக்கும் அண்ணா......

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மெஹந்தி டிசைன் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

Romba azaga irukku nanum poda kattukiren thanks

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta