க்ரில்ட் மத்தி மீன்

தேதி: September 14, 2010

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மத்தி மீன் - 1 கிலோ
மிளகு தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்


 

மீனை நன்கு சிதல் போக சுத்தம் செய்து கழுகி வைக்கவும்.பொடிகளை கலந்து 1 மணிநேரம் வைக்கவும்
பின்பு க்ரில்லர் அவனில் 15 நிமிடங்கள் க்ரில் செய்து எடுக்கவும்


இதற்கு எண்ணை தேவையேயில்லை என்பது தான் இதன் சிறப்பு..இதனை சுவைத்தால் எண்ணை இல்லையென்பதை நம்பவே முடியாது அவ்வளவு சுவையாக இருக்கும்...பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் சாப்பிடக் கூடிய மீன் மத்தி மீன்...இதற்கு வேக வைத்த அல்லது சுட்ட மரவள்ளி கிழங்கு தான் காம்பினேஷன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தளிகா

அழகான குறிப்பு. பெரியவங்களுக்கும் ஏற்றது இல்லையா? சிம்பிளான குறிப்பு. செய்துட்டு சொல்கிறேன், வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தளி என்ன இது மத்தி, கிழங்குன்னு ஆசையை கூட்டறீங்க. மத்தி இருக்கு ஆனா கிழங்கு கைவசம் இல்லை :(. இப்போதைக்கு க்ரில்ல்ட் மத்தி மட்டும் செய்துக்கறேன் :(

ஒரு சின்ன சந்தேகம். ஒருகிலோ மீனுக்கு இந்த அளவு காரம் போதுமா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ஆமினா..நிச்சயம் எல்லோரும் சாப்பிடலாம்.கவி தேவைக்கு கூட்டி குறைத்துக் கொள்ளலாம்..நான் நெறைய வாரி போடுவேன்:-D
இங்கு வீட்டில் வாசம் வருமே என்று செய்வதில்லை..வெளியில் பார்பிகியூ க்ரில் செய்வோம்..கூடவே சுட்ட கிழங்கு ..உம்ம்ம்ம்