புடலங்காய் சட்னி

தேதி: September 15, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (7 votes)

 

புடலங்காய் - சிறிது
உளுந்து - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவைக்கு ஏற்ப
காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க


 

புடலங்காய் மற்றும் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பருப்பு, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பொன்னிறம் ஆனதும் வெங்காயம் மற்றும் புடலங்காய் சேர்த்து வதக்கி ஆற வைத்து, உப்பு சேர்த்து அரைக்கவும்
பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
சட்னியில் தாளித்தவற்றை சேர்த்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

புடலங்காயில் சட்னியா? எப்படி தான் யோசிக்கிறீங்களோ? செய்துட்டு சொல்றேன் கவிதா. புடலங்காய் எனக்கு மிகவும் பிடிக்கும். சட்னியும் சுவையாகவே இருக்கும். வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வித்தியாசமா இருக்கு கவிதா. கண்டிப்பா உங்க குறிப்பாச்சே நல்ல சுவையாதான் இருக்கும். வாழ்த்துக்கள். தினமும் சமைப்பதை குறிப்பா கொடுத்திடறீங்க, தினமும் ஒரு குறிப்பு வந்துவிடுகிறது, அதுதான் கேட்டேன். வாழ்த்துக்கள் கவி

அன்புடன்
பவித்ரா

என் அண்ணியும் புடலங்காய் சட்னி செய்வாங்க ஆனா அது வேறுமுறை....
நேரம் வரும்போது போடணும்னு நினைச்சேன்..அதுக்குள்ள உங்க குறிப்பு வந்திருச்சு...:-
நல்ல நல்ல குறிப்புகள் கொடுக்கும் கவிதாவுக்கு பாராட்டுக்கள்..வாஆஆஆஆழ்த்துக்கள்........:-)

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

படலங்கா சட்னி ஜோரா இருக்கு. புளிப்புச்சுவை வேனும்னா எல்மிச்சம்
பழமோ, புளியோ சேர்த்துக்கலாமா?

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஆமினா,
இதை அம்மா பண்ணுவாங்க எங்கள் வீட்டிலேயே வளரும்
செய்து பாருங்க உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பவி ,
தினம் ஒரு குறிப்பு இல்லை செய்யும் போது புகைப்படம் எடுப்பேன் மொத்தமாக அறுசுவைக்கு அனுப்புவேன் அவ்வளவு தான்
செய்து பாருங்க உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

இளவரசி மேடம்,,(நீங்க என்னை விட பெரியவங்க எப்படி பெயர் சொல்லி கூப்பிட? அக்கானு கூப்பிட்டா அடிப்பீங்களா?)
உங்கள் குறிப்பை நானும் ஆவலோடு எதிர்பார்கிறேன்
செய்து பாருங்க உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சித்ரா மேடம்,
புளி வேண்டுமானால் சேர்க்கலாம் எலுமிச்சை சேர்த்து செய்தால் கசப்பு எடுக்க வாய்ப்பு இருக்கு
செய்து பாருங்க உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவி
புடலங்காய் சட்னி பாக்கவே ரொம்ப அழகா இருக்கு. நான் வெங்காயம் சேர்த்து செய்தது கிடையாது. இது கொஞ்சம் புதுமையா இருக்கு. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்றேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கவிதா,
புடலங்காய்ல புது குறிப்பு கொடுத்து இருக்கீங்க. புடலங்காய் வாங்கியதும், கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

புடலங்காயில் சட்னியா? புதுசு, புத்சா என்னன்னமோ குறிப்பெல்லாம் கொடுத்திட்டே
இருக்கீங்கப்பா.

ராதா அக்கா,

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி ,

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கோமு மேடம் ,

புதுசு இல்லை இது பழையது செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் கவிதா நலமா? உங்க புடலங்காய் சட்னி செய்தேன் ரொம்ப அருமைய இருந்ததுப்பா நான் புளி கொஞ்சம் சேர்த்தேன் தளிக்கும் பொது சீரகம் பெருங்காயம் சேர்கள கடுகும் கருவேப்பிலை மட்டும் சேர்த்தேன் இது போல் தேங்காய் இல்லாமல் நிறைய சட்னி குறிப்பு தாங்கபா

கவிதா, புடலங்காய் சட்னி சூப்பர் பா. தினமும் ஒரே மாதிரி சட்னி சாப்பிட்டு நாக்கு செத்து போச்சு. இது வித்தியாசமா இருக்கு. கிடைக்கும் போது பண்ணிட வேண்டியதுதான். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

nasreen ,
நான் நலம்..நீங்க நலமா?
செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் தந்தற்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கல்பனா,
செய்து பார்த்து சொல்லுங்க..
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா