கலத்துப் பொடி அல்லது பருப்பு பொடி

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

துவரம் பருப்பு - கால் கப்
பாசிப் பருப்பு - கால் கப்
பொட்டுக்கடலை - கால் கப்
கடலைப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
வெள்ளை எள் - ஒரு மேசைக்கரண்டி
கொள்ளு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
மிளகு - ஒரு தேக்கரண்டி
சுக்கு - 2 துண்டு
உப்பு - தேவையான அளவு


 

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றாமல் வெறும் வாணலியில், மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
நன்கு மணம் வரும் வரை வறுக்கவும். பொட்டுக்கடலையை லேசாக வறுத்தால் போதுமானது. உப்பையும் லேசாக பிரட்டிக் கொள்ளவும்.
பிறகு அனைத்தையும் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
தேவையானால் சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்து வறுத்து அரைத்துக் கொள்ளலாம்.
சூடான சாதத்துடன் இப்பொடியைச் சேர்த்து, நெய் ஊற்றி கலந்து சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்