குயில்லிங் பேப்பரைக் கொண்டு தோடு செய்வது எப்படி?

தேதி: September 17, 2010

4
Average: 4 (14 votes)

 

குயில்லிங் பேப்பர் - விரும்பிய நிறத்தில்
குயில்லிங் டூல்
தோடு கொக்கிகள் - 2
சிறிய வளையம் - 4
பெவிக்கால்
வெள்ளைநிற முத்துமணி - 2
சில்வர்நிற பெரிய சம்கி - 2

 

தோடு செய்ய தேவையானப் பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.
குயில்லிங் டூல்லில் விரும்பியநிற குயில்லிங் பேப்பரை சொருகி கொள்ளவும்.
பின்னர் பேப்பரை குயில்லிங் டூல்லில் ஐந்து முறை சுற்றவும்.
சுற்றிய பேப்பரின் எதிரெதிர் பக்கங்களைப் பிடித்து லேசாக அமுத்தவும். மீதி பேப்பரை நறுக்கிவிட்டு பெவிக்கால் தடவி ஒட்டவும்.
இப்போது இரு பக்கமும் கூரான இதழ் வடிவம் கிடைக்கும். இதே அளவில் மொத்தம் 14 இதழ்கள் செய்து வைக்கவும். குயில்லிங் டூல்லில் பேப்பரை 8 முறை சுற்றி இரண்டு இதழ்கள் செய்யவும். மற்ற இதழ்களை விட இந்த 2 இதழ்கள் பெரியதாக இருக்க வேண்டும்.
சில்வர்நிற சம்கியில் ஓரத்தின் பாதியளவிலிருந்து இந்த இதழ்களை வரிசையாக ஒட்டிக் கொண்டு வரவேண்டும். முதலில் பெரிய இதழை வைத்து ஒட்டிவிட்டு மற்ற ஏழு இதழ்களை ஒட்டவும்.
ஒரு சில்வர்நிற சம்கிக்கு மொத்தம் எட்டு இதழ்கள் ஒட்டி முடித்ததும், நடுவில் பெவிக்கால் வைத்து ஒரு வெள்ளைநிற முத்துமணியை வைத்து ஒட்டவும்.
இதேப் போல் மற்றொரு தோடையும் செய்து வைக்கவும்.
இப்போது பெரிய இதழ் ஒட்டிருக்கும் அந்த பேப்பரின் துளையில் ஒரு வளையத்தை கோர்த்து குரடால் நெருக்கி விடவும். அந்த வளையத்தில் மற்றொரு வளையத்தை கோர்த்து தோடுக்கான கொக்கியையும் கோர்த்து வளையத்தை நெருக்கி விடவும்.
குயில்லிங் பேப்பரை கொண்டு அழகாக, எளிமையாக செய்யவிடக்கூடிய தோடு தயார். நீங்கள் உடுத்தும் உடைக்கேற்ப விதவிதமாக செய்து அணிந்துக் கொள்ளலாம். சம்கியின் அளவை பொருத்து தோடுகளை சின்னது, பெரியது என்று வடிவமைக்கலாம்.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த தோடு செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

செண்பகா அழகான தோடு.... சுலபமான செய்முறை.. எனக்கு ஒரு சந்தேகம். இது மிகவும் பெரிதாக இருக்காதா?... நவினா குட்டிக்கு இது மாதிரியே செய்து கொடுத்து அண்ணாவும் நீங்களும் மிச்சம் பிடிக்காதீங்க.. குட்டி, அப்பா அம்மா கிட்ட பிறந்த நாள் பரிச பெருசா கேளு....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆஹா! அழகு செண்பகா. ;)
ம்... இந்தக் குறிப்புக் கீழே இதே தோடு போட்ட செண்பகா படம் போட வேணும். ;)

‍- இமா க்றிஸ்

செண்பகா

தோடு ரொம்ப அழகு. எனக்கு இதே மாதிரி ஒன்னு செய்து கொடுங்க.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தோடு மட்டுமல்ல உங்கள் புன்னகையும் அழகாக இருக்கிறது.
அன்புடன் செபா.

பாப்பி எப்படி இருக்கீங்க. பாபு அண்ணா, நவீனா குட்டி எல்லோரும் நலமா? கம்மல் மிக அருமையாக செய்து இருக்கீங்க. நல்ல பொறுமை உங்களுக்கு, நீட்டாக ப்ரசண்ட் பண்ணியிருக்கீங்க. நவீனா குட்டி இதெல்லாம் உங்களை செய்ய விடுறாங்களா. பாபு அண்ணாவிடம் விசாரித்ததாக சொல்லவும்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ரங்கநாதன் தெருவில் கிராப்ட் கடைகளில் இது போலவே செய்து செட்டாக(தோடு,நெக்லஸ், ப்ரேஸ்லெட், செயினுக்கு டாலர்) வைத்திருக்கிறார்கள். ஆசையா இருந்தது. விலை கேட்க்க போனால் 450 ரூபாயாம். அதன் பிறகு அந்த பக்கமே திரும்பல.

இப்ப செய்யவே தெரிஞ்சுடுச்சு. செய்திட வேண்டியது தான்.

அழகா செய்து காட்டியிருக்கீங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

செண்பகா மேடம் ரொம்ப அருமை. ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. பாராட்டுக்கள் மேடம்

செண்பகா சூப்பர்! உங்களுக்கு தெரியாத கைவேலையே கிடையாது போல இருக்கே! இந்தோனேசியாவுக்கு ஒரு செட் அனுப்பி வச்சுடுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சட்டென்று வேண்டுகோளை நிறைவேற்றியதற்கு நன்றி போட்டோக்ராஃபர். ;))))))))))))
இப்போ பாருங்க, தோடு அழகா! காது அழகா! இரண்டுக்கும் சொந்தக்காரர் அழகா! ;))

செபாதான் பாவம். ;(

‍- இமா க்றிஸ்

என்ன இது, இங்கு பட்டிமன்றமா நடக்குது. அறுசுவை தோழிகளே இது பட்டிமன்றம் அல்லா இமா மேடம் செய்யும் சேட்டை:-)
எப்படி இருக்கீங்க அம்மா?

senbagababu

உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி. உங்களுடன் பேசி ரொம்ப நாளாகுது எப்படி இருக்கீங்க? பையன் எப்படி இருக்கார்? //குட்டி, அப்பா அம்மா கிட்ட பிறந்த நாள் பரிச பெருசா கேளு....// இப்ப அவளுக்கு ஒன்னும் தெரியாது நாங்க வாங்கி கொடுக்கறதுதான். இன்னும் கொஞ்சம் நாளாகனும். பேப்பரில் செய்ததுதான் வெய்ட்டா இருக்காது.

senbagababu

ரம்யா நலமா? பாராட்டிற்கு நன்றி. உங்க அட்ரஸ் கொடுங்க அனுப்பிடுவோம்:-)

செபா அம்மா எப்படி இருக்கீங்க? உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

யாருப்பா இந்த தனிஷா எனக்கு தெரியவே தெரியாது. நான் ரொம்ப கோவமா இருக்கேன் உங்க மேல். என்ன ஆச்சு உங்களுக்கு. மெயில் போட்டா பதில் இல்லை. மெயில் பாக்கிறீங்களா? இல்லையா? எங்கள மறந்துட்டீங்களா? அஃப்ரா குட்டி எப்படி இருக்காங்க? இதுக்கு அப்பறமும் உங்களிடம் இருந்து மெயில் வரலைனா பாருங்க நாங்களே அங்க வந்துடுவோம்:-)

senbagababu

ரொம்ப நன்றி ஆமினா. ரொம்ப ஈசி செய்து பாருங்க.

நன்றி கெளரி.

ஹாய் கவிசிவா ரொம்ப நன்றி. நானே உங்களை பாராட்டனும் என்று இருந்தேன். நேரம் கிடைக்கவில்லை சாரி ரொம்ப லேட்டா வந்து பாராட்டுறேன். கவி அரசிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

senbagababu

பாருடா

இமா சொன்னதும் போட்டோ மாறி இருக்கு. இது யாரோட காது?:) செண்பகா தானே?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

செண்பகா,
நலமா?
தோடு அழகா இருக்கு!!
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

தோடு ரொம்ப நல்லா இருக்கு . இந்த குயில்லிங் பேப்பர் கிராப்ட் கடைகளில் கிடைக்குமா ??? விலை மிக அதிகமா??

இந்த பேப்பர் க்ராப்ட் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். மேலே முதல் படத்தில் உள்ள அளவிலான பேப்பர்ஸ், பெவிக்கால், பேப்பர் சுற்றுவதற்கான டூல் எல்லாம் சேர்த்து செட் ஆக 75 ரூபாய்.

அக்கா, கம்மல் சூப்பர். ஆனால் குயில்லிங் பேப்பர் என்றால் என்ன? அது எங்கு கிடைக்கும்???

வரலக்ஷ்மி

True Love Never Fails.

பதில் அளிததற்கு நன்றி அட்மின்

அழகான காது, அய்யய்யோ அழகான தோடு. ரொம்ப அழகா செய்திருக்கீங்க. செய்ய முயற்சி பண்றேன். எனக்கு பொறுமை இருக்காது, இனிமே எது செய்தாலும் ஒரு பார்சல் அனுப்பிடுங்க, செண்பா போட்டுக்கு பதிலா எனக்கு போட்டு நான் ஒரு போட்டோ அனுப்பறேன், அதை தான் இங்கு போடணும் ஓகேவா:)))))))))))))

வாழ்த்துக்கள் செண்பா.

அன்புடன்
பவித்ரா

இந்த இரண்டு தோடு செய்வதற்கு எத்தனை பேப்பர் வாங்க வேண்டும் ??? கூறினால் நன்றாக இருக்கும் ...

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta