Document Registration

ஹாய் Friends....என்னக்கு ஒரு சந்தேகம் யராது தீர்த்து வைங்கப்பா..என்னோட Friend அப்பா அவள் பெயருக்கு ஒரு நிலத்தை தான கிரயம் செஞ்சு வச்சார் இப்ப Doubt என்னனா Family குல மட்டும் தான் இந்த மாதிரி தான செட்டில்மென்ட் செஞ்சுக முடியுமா இல்ல Blood relation இல்லென்னா கூடா பன்னலாமா?

Ennoda Doubt ku yarathu reply panungapa pls....

வெயிட் பண்ணுங்க கெளசி, நம்ப தோழிகள் யாராவது கண்டிப்பா வருவாங்க..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நானும் அதுக்குதான் wait பன்னரேன் பாக்கலாம்

எந்த உறவுன்னு தெரியல. அதை சொன்னா வசதியா இருக்கும்.

அக்கா தன் தங்கைக்கு செய்து கொடுக்கலாம். தன் தம்பியின் குழந்தைகள் நலனை கருதி அண்ணன் கொடுக்கலாம், தம்பி மனைவிக்கு கொடுக்கலாம், இப்படிலாம் இன்னும் நிறையா இருக்கு.

“இரக்கத்தின் பேரில் என் பெயரில் உள்ள இந்த சொத்தை இன்னார் பெயருக்கு தானமாக தருகிறேன்” என குறிப்பிடப்பட்டிருக்கும். அதனால் கொடுக்கலாம் என தான் நினைக்கிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் கௌசி உங்க டவுட் என்னானு எனக்கு சரியா புரியலை. சொத்தை தானமா கொடுக்கறதைப் பத்தி கேட்கறீங்கன்னா எனக்குத் தெரிந்த விஷயங்களை சொல்றேன்.

ஒருவருடைய சுய சம்பாத்திய சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் அவர் தானமாக கொடுக்கலாம். ஆனால் அதே சொத்து பரம்பரை சொத்தாக இருந்தால் அந்த சொத்துக்கு உரிமைப்பட்டவர்கள் அனைவருடைய ஒப்புதலும் வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு தன் அப்பா அம்மா அல்லது முன்னோர் மூலமாக கிடைத்த சொத்தில் அவரது எல்லா பிள்ளைகளுக்கும் உரிமை உண்டு. அந்த சொத்து அவருடைய பெயரில் இருந்தால் கூட அவருடைய பிள்ளைகளின் ஒப்புதலும் அவசியம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி
பத்திரப்பதிவுகளில் இதுவும் ஒரு வகை.
தான செட்டில்மெண்ட் பத்திரம் என சொல்லுவார்கள். என் அம்மாவிற்கு அவர் பெரியம்மா தன் சொத்தை தானமாக வழங்க இந்த முறையில் தான் செய்தார்கள். 5000 ரூபாய்க்குள் எல்லா செலவும் முடிந்துவிடும். ஆனால் சொத்தில் எந்த வில்லங்கமும் இருக்க கூடாது. வாரிசுகள் இருப்பின் அவர்களின் ஒப்புதல் வேண்டும்.

உறவினர் ஒருவர் அண்ணன் தங்கைக்குள் சம்மந்தம் பண்ண சீதனமாக கொடுக்க தன் தங்கைக்கு தன் சொந்த வீட்டை இந்த முறையில் தான் கொடுத்தார்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி தோழிகளே................ நான் கேட்ப்பது இரத்த சம்பந்தம் இல்லாத ஒருவருக்கு தான செட்டில்மென்ட் செய்ய முடியுமா For Example: என்னோட கணவரின் அக்காவிருக்கு நான் தான கிரயம் செய்து கொடுக்க முடியுமா

நாளை அப்பாவிடம் கேட்டு விட்டு சொல்கிறேன்பா. அதற்கு முன் வேறு அனுபவம் உள்ள தோழிகளும் சொல்வார்கள்.

எனக்கு இது பிற்காலத்தில் பிரச்சினை ஏற்படுத்துமோன்னு சின்ன டவுட் இருக்கு. க்ளியர் பண்ணிட்டு சொல்றேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மறக்காமல் பதில் அனுப்பவும்

மேலும் சில பதிவுகள்