பட்டை அவரை பொரியல்

தேதி: September 17, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

பட்டை அவரைக்காய் - 250 கிராம்
சின்ன வெங்காயம் - எட்டு
துவரம் பருப்பு - 3 மேசைக்கரண்டி
தேங்காய் - ஒரு கப்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை - சிறிதளவு
தாளிக்க:
கடுகு - தேவைக்கு
உளுத்தம் பருப்பு - தேவைக்கு


 

சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைக்கவும். துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அவரைக்காயை சிறியதாக நறுக்கவும்.
அவரைக்காய் மற்றும் துவரம் பருப்பை குக்கரில் வைத்து சிறிது தண்ணீர் விட்டு மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பொன்னிறமானதும் வேக வைத்த அவரைக்காயை போட்டு தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.
தண்ணீர் வற்றியதும் உப்பு, தேவைக்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்.
பின்பு வேக வைத்த துவரம் பருப்பை அதில் சேர்க்கவும்.
தேங்காய் துருவல் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை மெதுவாக வதக்கவும்.
கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான பட்டை அவரைக்காய் பொரியல் ரெடி. இது சாம்பார், ரசத்துடன் சுவையாக இருக்கும். சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் பவி எங்கள் வீட்டிலும் இதே செய்முறைதான். எனக்கு இந்த பொரியல் ரொம்ப பிடிக்கும். ரசத்துடன் சாப்பிட நல்ல காமினேஷன். இதே முறைப்படி பீன்ஸ், கொத்தவரங்காய், அத்திக்காய்ல செய்வாங்க.

பவி பட்டை அவரை பொரியல் சூப்பரா இருக்கே. கைவசம் அந்தக்காய்
இல்லை.பண்ணிப்பாத்துட்டுச் சொல்ரேன்.

பவி,
அவரைக்காய் பொரியல் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. நான் பருப்பும், தேங்காயும் சேர்த்து செய்தது கிடையாது. உங்க ரெசிப்பி பார்த்ததும் ஆசையா இருக்கு, செய்து பார்த்துட்டு சொல்றேன். குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

பவி இன்னிக்கு எல்லாரும் என்னை ஜொள்ளு விட வைக்கணும்னு முடிவே பண்ணிட்டீங்களா?! பின்னே என்னா முகப்பில் இருக்கும் ஒரு ஐட்டத்துக்கான காய் கூட எனக்கு இங்க கிடைக்காது. எனக்கு இப்பவே அவரைக்காய் பொரியல் பார்சல் பண்ணிடுங்க. இல்லேன்னா உங்க எல்லாருக்கும் வயிறு வலிக்கும் சொல்லிட்டேன் :)

கிடைக்கும் போது செய்து பார்க்கறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனக்கு மிகவும் பிடித்த ஐட்டம்பா இது. சூப்பர்பா. நாளைக்கு செய்து சாப்பிடனும். நன்றி.

அன்புடன்
THAVAM

பவி,
பட்டை அவரையெல்லாம் கிட்டாது பாத்துகிட்டே இருக்க வேண்டியது தான்
மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்
பவித்ரா

வினோ
உங்க பின்னூட்டதிற்கு நன்றி. அட நீங்களும் இப்படிதான் செய்வீங்களா, நான் பீன்ஸ், கொத்தவரங்காய் சாப்பிட்டிருக்கேன், ஆனா அத்திக்காய் இல்லை.

சித்து
நன்றி சித்து, வாங்கி செய்துட்டு சொல்லுங்க.

அன்பரசி
உங்க பாராட்டுக்கு நன்றி. நானும் முன்னாடி இப்படி செய்ய மாட்டேன். ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு பிடித்து போக அப்படியே புடிச்சிக்கிட்டேன்ப்பா.

கவி
உங்க வாழ்த்துக்கு நன்றி. நான் பண்ணும் போதே உங்களுக்கு பார்சல் பண்ணிட்டேன்ப்பா, இன்னும் வரலையா.

தவமணி அண்ணா
நன்றி அண்ணா. செஞ்சாச்சா, சாப்பிட்டு சொல்லுங்க.எனக்கு இது ரொம்ப பிடிக்கும் அண்ணா

கவிதா
உங்க வாழ்த்துக்கு நன்றி. வினோ சொன்ன மாதிரி பீன்ஸ் கூட நல்லாருக்கும் கவி. பீன்ஸ்ல ட்ரை பண்ணி பாருங்க. நன்றி.

அன்புடன்
பவித்ரா

பவ்ஸ், ராவா தோசை, பட்டை அவரைக்காய் என்ன, எல்லாம் சரக்கு பேரா இருக்கு? என்ன விஷயம். குறிப்பு நல்லா இருக்கு பவ்ஸ். குறிப்பை பார்க்கும்போதே உண்ட திருப்தி. எனக்கும் இங்கே அவரை கிடைக்காது :( நீ வேண்ணா ஒரு கிலோ பட்டை அவரைக்காய் பார்சல் பண்ணி விடு. தொடர்ந்து குறிப்புகளை அள்ளி விடு பவ்ஸ். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

முதல்ல உங்க வாழ்த்துக்கு நன்றி. பட்டை நியாபகத்தில் இருக்கீங்க போல, அவரை பார்சல் இல்ல பொறியலையே பார்சல் பண்ணிட்டா போச்சு. தொடர்ந்து பின்னூட்டம் போடுவதற்கு நன்றி.

அன்புடன்
பவித்ரா

அட பவி நீதானா இது... நல்லாருக்கே பாக்கவே.... ஹைய்யா எனக்கு இங்க இந்த அவரைக்காய் கிடைக்குமே.. நான் செய்து பார்த்துடுவேனே..(யாருக்கெல்லாம் கிடைக்காதோ அவுங்களுக்கு எல்லாம் வெவ்வவ்வெவ்வே...) பவி குறிப்பு நல்லாருக்கு. பார்க்கும்போதே டேஸ்டா இருக்கும்னு தோணுது. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்றேன்டா....
(தலைப்பைப்பார்த்ததும் பட்டை சேர்த்து செய்யனும்போலனு நினச்சேன்.. )

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

உங்க வாழ்த்துக்கு நன்றி. அவரை என்று தான் போடலாம் என்றிருந்தேன், ஆனால் பட்டை அவரையில் செய்தால்தான் ருசி அதிகமா இருக்கும், அதான் அப்படியே போட்டுட்டேன், நீங்களாவது பட்டை சேர்த்து செய்யணுமானு கேட்டிருக்கீங்க, கல்ப்ஸ் பட்டைனு சொன்னதும் ராவா அடிச்சிட்டாங்க போல. செய்து பாருங்க ரொம்ப நன்னாருக்கும், எனக்கு ரொம்ப பிடிக்கும், என் தோழியும் நான் இதை செய்தால் மிக விரும்பி சாப்பிடுவாள்.

அன்புடன்
பவித்ரா

பவி,
துவரம் பருப்பும்,தேங்காயும் சேர்த்து பொரியல் செய்துட்டேன்.நல்லா வந்தது. பட்டை அவரைக்காய் கிடைக்கல.பீன்ஸ் போட்டு செய்தேன்.இப்ப தான் செய்து முடிச்சேன்,லன்ச்சுக்கு.உடனே பதிவு போட்டுட்டேன்.குறிப்புக்கு நன்றி.

செய்திட்டீங்களா! தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும், மிக்க நன்றி.நானும் பீன்ஸில் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.

அன்புடன்
பவித்ரா

பவி,
நான்,பீன்ஸ் பொரியல் மிளகாய் கிள்ளி போட்டு,தேங்காய் போட்டு செய்வேன்.என்னவர் சாப்பிடவே மாட்டார்.இம்முறையில் விரும்பி சாப்பிட்டார்.தயிர் சாததுக்கும் நல்லா இருந்தது.எனக்கும் ரொம்ப பிடிச்சது.பொரியல் ஒரு வேளைக்கே காலி ஆயிடுச்சு.இனி,பீன்ஸோ,அவரைக்காயோ இம்முறையில் தான் செய்வேன்.குறிப்புக்கு நன்றி.இதே போல நல்ல குறிப்புகள் அனுப்புங்க.வாழ்த்துக்கள்.

உங்க குறிப்பை பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் பீன்ஸ் புளி ஊத்தி செய்வேன், முடிந்தால் அந்த குறிப்பும் அனுப்பறேன். ரொம்ப சந்தோஷம், நன்றி.

அன்புடன்
பவித்ரா

பவி, எப்படி இருக்கீங்க? நானும் பீன்ஸில்தான் செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. இன்னும் நிறைய குறிப்புகள் குடுக்க வாழ்த்துக்கள்.

ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சுபா;-) துவரம்பருப்பு சேர்த்ததுமே பட்டை அவரையோட டேஸ்டே மாறிடுச்சு, நல்ல டேஸ்ட் ;-) டேஸ்டான ரெஸிப்பி கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.