புரோட்டா சால்னா

தேதி: September 17, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (16 votes)

 

கோழி- 1/2 கிலோ
வெங்காயம்- 3
தக்காளி-2
தேங்காய்- 1/2 மூடி
நிலக்கடலை- 1 கைப்பிடி
பொட்டுக்கடலை- 1/2 கைப்பிடி
முந்திரி-10 பல்
கசகசா-1 1/2 ஸ்பூன்
சோம்பு- 1/4 ஸ்பூன்
புதினா- சிறிதளவு
கொத்தமல்லி- சிறிதளவு
பச்சை மிளகாய் -1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
இஞ்சி,பூடு விழுது- 2 ஸ்பூன்
பட்டை-1
ஏலக்காய்-2
அன்னாசி பூ- 2
பிரிஞ்சி இலை-1
உப்பு -தேவைக்கு
எண்ணெய்- தாளிக்க தகுந்த அளவு
தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்


 

தேங்காய், நிலக்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை அரைக்கவும்.

கசகசா,சோம்பு,முந்திரி சேர்த்து அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய்,தேங்காய் எண்ணெய் சேர்த்து பட்டை, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி போடவும்.

பின்னர் நீளவாக்கில் வெட்டிய வெங்காயம்,உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அதில் புதினா,கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்னர் இஞ்சி,பூடு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிவிட்டு தக்காளி சேர்க்கவும்.

முந்திரி விழுதை சேர்த்து கிளறவும்.

அதில் மஞ்சள் தூளும், மிளகாய்த் தூளும் சேர்த்து தேவைப்பட்டால் சிறிது நீர் தெளித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை விடாமல் வதக்கவும்.

பின் கோழியை சேர்த்து மசாலா ஒட்டும் வரை கிளறிவிட்டு பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு நன்கு கொதித்ததும் (கோழி வெந்ததும்) கீழே இறக்கி 5 நிமிடம் வைக்கவும்.

இப்போது லீமாவை கரண்டியால் கவனமாக எடுத்து தனியாக வைக்கவும்.

பின்னர் தேங்காய் விழுது சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.


லீமா- எண்ணெய் உடன் சேர்ந்து மேலே வரும் காரம்.இது கடைகளில் கிடைக்கும் சால்னாவின் செய்முறை. அவர்கள் காரம் அதிகம் சேர்ப்பதால் லீமாவை தனியே பிரித்தெடுத்து காரம் தேவைப்படுவோர்க்கு மட்டும் சால்னாவில் சேர்த்து கொடுப்பார்கள். அதை எடுக்கும் போது பக்குவமாக மெதுவாக எடுக்க வேண்டும். இல்லை என்றால் முறிந்துவிடும். இது 4 பேருக்குள்ள அளவு என்பதால் தேவைக்கு மட்டும் மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளலாம். விசேஷங்களின் போது தனியாக பிரித்தெடுத்தால் குழந்தைகளுக்கு கொடுக்க வசதியாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆமினா,
கமகம குறிப்பு!
இப்படி தான் செய்வாங்களா? கிராஸ் பண்ணும் போதே முக்கை துளைக்கும் இல்ல..
இந்த சண்டே இது தான் மேலும் பல நல்ல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்,
கவிதா

ஏன் கேக்குறீங்க கவிதா...
எங்கள் ஊரில் சின்னதா,பெருஷா 200க்கும் மேல கடை இருக்கு. எந்த பக்கம் போனாலும் புரோட்டா கடை பாக்காம போக முடியாது. சாயங்காலம் 5 மணி ஆனதும் தெருவே வாசனை மூக்கை துளைக்கும் (வீட்டில், சமைக்கும் இடத்திலிருந்து வண்டியில் மாலை 5 மணிக்கு தான் கொண்டு வருவார்கள்).
என் தம்பி பல நாள் புரோட்டாகடையில் வேலை பார்த்ததால் அது பத்தி நிறைய விஷயம் தெரியும். விஷேஷங்களில் என்னவரும்,தம்பியும் தான் செய்வார்கள்.
செய்துட்டு பாருங்க. மறக்காம சொல்லிடுங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
இந்த இரண்டு பொருட்களை சேர்க்க வேண்டாமா?விடுபட்டுப்போச்சு.சேர்த்துடுங்க ஆமீனா.

ரீமாஷா

புதிய உறுப்பினர் வருகைக்கு நன்றி. தவறை சுட்டிகாண்பித்தமைக்கு மிக்க மிக்க நன்றி....
நான் சரியாக கவனிக்கல. இப்ப மாத்திட்டேன்..
அழகான பெயர் உங்களுக்கு.புரோபைல்ல எந்த தகவலும் இல்லையே.. விருப்பம் இல்லையா....
அடிக்கடி அறுசுவைக்கு வாங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பொட்டுகடலை, நிலக்கடலை எதுக்கு சேர்க்கிறீங்கன்னு சொல்ல முடியுமா? இதுவரைக்கும் கேள்வி பட்டது இல்லை அதான்.
ஹாய், ரீமாஷா நீங்க எங்க இருக்கீங்க,வெல்கம் டு அறுசுவை.

சுவைக்காகவும், சால்னாவின் கெட்டி தன்மைக்கும் சேர்க்கப்படுவது ரீம்

சென்னையில் என் உறவினர் கடையில் முந்திரியும் தேங்காயும் மட்டுமே சேர்ப்பார்கள். ஆனால் பொட்டுக்கடலையும் நிலக்கடலையும் சேர்த்து செய்வது தான் எங்கள் ஊரில் வழக்கம்.

இம்முறையில் முயற்சித்துப்பாருங்கள். உங்களுக்கும் பிடித்துப்போகும்.

சமையலில் உங்களுக்கு அதிக ஆர்வம்+ அதை பற்றிய திறன்,அறிவு இருக்கிறது. நீங்களும் சமையல் குறிப்பு அனுப்பலாமே அறுசுவைக்கு....
விரைவில் ரீம் குறிப்பை எதுர்பார்க்கிறேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி ஆமினா உங்க கிட்ட எனக்கு மிகவும் பிடித்த பண்பு எல்லாரையும் ஊக்கப்படுத்துவது. கதை &சமையல் எல்லாவற்றிலும் எல்லாரையும் பாராட்டுறீங்க பெரியமனசு உங்களுக்கு.நிச்சயமா குறிப்பு குடுக்கணும் என்ற ஆசை இருக்கு.எனக்கு டெஸ்ஸ்ர்ட் மற்றும் ஸ்வீட்ஸ் தான் நல்லா தெரியும்.

ரீம்

என்னை சார்ந்த என் தோழிகளும் எல்லா பகுதிகளில் பங்களிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. அதனால் தான் எல்லோரையும் ஊக்கப்படுத்துகிறேன்.

சிலருக்கு ஆசையே இல்லாமல் இருக்கும்.யாராவது ஊக்கப்படுத்தினால் உடனே பங்களிக்க விரும்புவர்.
இன்னும் சிலர் ஆசை இருக்கும். ஆனால் எப்படி செயல்படுத்துவது என தெரியாமல் இருப்பர். அப்படி இருந்தா உதவி செய்ய தான் நான் கேட்பது.

//எனக்கு டெஸ்ஸ்ர்ட் மற்றும் ஸ்வீட்ஸ் தான் நல்லா தெரியும்//-------அது போதுமே!!
செய்து அசத்துங்க. எனக்கு ஸ்வீட் ரொம்ப பிடிக்கும். ஆனா செய்ய தெரிந்தது குறைவே:( நீங்க கத்துகொடுங்க. நாங்களும் செய்றோம்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

டியர் ஆமினா
ரொம்ப நன்ட்ரி...ரொம்ப நால் ட்ரை பனெஅன் இன்த குர்மா எப்டி சைரதுனு தெரின்சிக.இனைகுதான் பார்தெஅன்.உடனே சைது பர்தேன்.னானும் சமயல இப்டி அருமயா சமைக்ரது உஙல போன்ர தோழிகலால்தான்.னான் சமயலுகும் அருசுவைகும் புதிது.

ஹாய் கலிமா! எப்படி இருக்கீங்க? உங்க பதிவு கண்டு மகிழ்ச்சி. செய்து பார்த்து மறக்காம பின்னூட்டமின்னதற்கு மிக்க நன்றி. அடிக்கடி வாங்க அறுசுவைக்கு. பிறகு சமையலில் எக்ஸ்பெர்ட் ஆகிடலாம் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தேங்காய்,பொட்டுக்கடலை,நிலக்கடலை+கசகசா,முந்திரி இவை எல்லாம் சேர்த்தாலே சுவை வந்துவிடும்.Aamina thank u for this nice recepie.will try this and give my feedback soon

மிக்க மகிழ்ச்சி உங்கள் உற்சாகமூட்டும் இந்த பதிவிற்கு!!

//தேங்காய்,பொட்டுக்கடலை,நிலக்கடலை+கசகசா,முந்திரி// உண்மையாகவே இவையெல்லாம் சேர்ந்து ஸ்பெஷல் சுவை கொடுக்கும். கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க.

விரைவிலேயே உங்கள் அடுத்த பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறேன்;)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

it is possible to make salna without chicken ,tell how to prepare vegitable salna

புது வரவுக்கு வாழ்த்துக்கள்!
அடுத்த முறை தமிழில் எழுதுங்க:)

வெஜ் என்றால் உருளை, காலிப்ளவர், மீல் மேக்கர்,காளான் போடலாம்.

செய்துட்டு சொல்லுங்க
மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹெல்லொ ஆமினா மேடம் நான் அருசுவைகு புதிது. உங்கள் குறிப்பு அருமை. அவசியம் செய்து பார்க்கிரேன்

அறுசுவையின் புதுவரவு சுகிராமிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...

நன்றி பா. அவசியம் செய்துட்டு சொல்லுங்க. அடிக்கடி வாங்க:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

unga parrota saluna padika pothe super ra iruku

ரினோஸ்

அப்ப செய்து பாத்துடுங்க:) மிக்க நன்றி உங்க பதிவுக்கு.

செய்துட்டு மறக்காம சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா அவ்ர்களுக்கு உங்கள் குறிப்பு நன்றாக உள்ளது நன்றி

I love jesus

மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு:) அடிக்கடி செய்யுங்க இனி....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி இன்னிக்கு இதுதான் செய்தேன், விளக்கப்பட குறிப்பா அனுப்பலாம்னு நினைத்தேன், ஆனா முடியலை ஆமி. ஆனா நல்ல சுவையா இருந்தது, அம்மா சாப்பிட்டு விட்டு கடையில் செய்த டேஸ்ட் விட நல்லா இருக்குனு சொன்னாங்க. கோழிக்கு பதிலாக உருளைக்கிழங்கில் செய்தேன் ஆமி. ரொம்ப நன்றி ஆம்ஸ். வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

பவி செய்தாச்சா? நீங்க சைவமாச்சே. அதான் ஆலு சால்னா பண்ணேளா?

மிக்க நன்றி பா மறக்காம சொன்னதுக்கு.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்பு ஆமினா,
உங்களுடை புரோட்டா சால்னாவை பார்த்ததும் எனக்கு எங்க ஊர் ஞாபகம் வந்திடுச்சு.இன்று நான் இதை செய்ய போகிறேன்.குறிப்பிற்கு நன்றி.
அன்புடன்
நீமா

ரொம்ப நன்றி நீமா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Barotta chalnavai naan ithuvarai 5,6 murayavathua seithueruppen suvai migavum arumai!!! Naan ippo than puthiya varugai athanalthan inthamurai Seivatharku mun koorivitten naalai kalai thirumbavum ungal chalnavai than seiya erukren but chicken illamal vegetable lil seithu paarka pogiren elimayana migavum suvayana kuripirku nanri...!!!

பரோட்டா சால்னா சிச்கன் இல்லாமல் கடைகளில் plain ஆக கிடைக்கிரது அல்லவா அதுமாதிரி யப்படி பன்னுவது யென சொல்லுஙக

http://www.arusuvai.com/tamil/node/11301 இந்த லிங்க் பாருங்க நீங்க கேட்ட ப்ளையின் சால்னா குறிப்பு இது.