எலுமிச்சை சாதம் சமையல் குறிப்பு - 16348 | அறுசுவை


எலுமிச்சை சாதம்

food image
வழங்கியவர் : n.jayalakshmi
தேதி : Sat, 18/09/2010 - 10:58
ஆயத்த நேரம் : 5 நிமிடம்
சமைக்கும் நேரம் : 15 நிமிடம்
பரிமாறும் அளவு : 2 நபர்

 

 • பச்சரிசி - 1 கப்
 • பால் - ½ கப்
 • தண்ணீர் - 1 ½ கப்
 • எழுமிச்சைப்பழம் – ½ மூடி
 • இஞ்சி - ஒரு துண்டு
 • பச்சை மிளகாய் - 1
 • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
 • நிலக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
 • கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
 • கருவேப்பிலை - 1 கொத்து
 • கடுகு - தாளிக்க
 • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
 • உப்பு தேவையான அளவு

 

 • அரிசியைக் கலைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
 • இஞ்சி, பச்சைமிளகாயைய் மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தவும்.
 • எழுமிச்சைபழத்தை பிழிந்து கொட்டை நீக்கி வைக்கவும்.
 • அரிசியைய் பால், தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கி ஒரு தட்டில் போட்டு உதிரியாக்கி வைக்கவும்.
 • வாணலியில் எண்ணெய் ஊற்றிக்காய்ந்ததும், கடுகு, கருவேப்பிலை, கடலைப்பருப்பு, நிலக்கடலை, அரைத்து வைத்த இஞ்சி, பச்சைமிளகாய் , மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு உடனே இறக்கவும்.
 • இதில் சாதத்தைப் போட்டு கிளறினால் சுவையான எலுமிச்சை சாதம் தயார்.
கூடுதலாக காரம் விரும்புபவர்கள் தாளிக்கும் பொழுது வரமிளகாய் சேர்த்துக் கொள்ளலாம.


ஜெயா கலக்கிட்டீங்க

ஜெயா கலக்கிட்டீங்க... எலுமிச்சை சாதம் சூப்பர்... சாதத்தில் பால் ஊற்றி செய்ததில்லை.. டிபரண்டா இருக்கு.... நாளையே செய்து பாக்கறேன்.... தூள் கிளப்புங்க...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நன்றி ரங்ஸ்

ரங்ஸ் சுவையும் நல்லா இருக்கும் செய்துபாத்துட்டு எப்படி இருந்துச்சுனு சொல்லுங்க.

Don't Worry Be Happy.

ஜெயலக்ஷ்மி,

ஜெயலக்ஷ்மி,
சமையல் குறிப்பிலும் அசத்துறீங்க. எலுமிச்சை சாதம் நல்லா இருக்கும் போல இருக்கே, செய்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள்.

எலுமிச்சை சாதம்

தேங்காய் பாலா? பசும் பாலா? ஜெயா......

இதுபோல் அரிசியை பாலில் வேகவைக்க நான் கேள்விப்பட்டது இல்லை. கண்டிப்பா பால் சேர்த்தா அருமையா வரும். வாசனையும் நல்லா இருக்கும் இல்லையா?!!

செய்துட்டு சொல்கிறேன். மேலும் பல குறிப்புக்கள் தர வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹர்ஷா!

ஹர்ஷா எனக்கு ரொம்ப பிடிச்ச சாதம். நல்லாயிருக்கும் செஞ்சுபாத்துட்டு மறக்காம சொல்லுங்க. வாழ்த்துக்கு நன்றி.

Don't Worry Be Happy.

ஆமினா

பசும் பால்தான், பால் வாசம் வராது பட் டேஸ்ட் ரொம்ப நல்லாயிருக்கும். செய்து பாத்துட்டு எப்படி இருந்துச்சுனு சொல்லுங்க. உங்கள் ஊக்கத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஆமினா.

Don't Worry Be Happy.

n.jayalakshmi -

இப்ப தான் செய்துட்டு சாப்பிட்டுட்டு வரேன் ஜெயா. சூப்பரா இருந்தது. கூடவே உருளைகிழங்குடன் சூப்பர் நல்ல காம்பினேஷன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா

சமைத்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு ரொம்ப நன்றி. நானும் உருளைகிழங்கு வறுவலோடுதான் சாப்பிடுவேன்.;)

Don't Worry Be Happy.

ஜெயா

ஜெயா நீங்க எப்பலேர்ந்து ரெசிப்பி கொடுக்க ஆரம்பிச்சிங்க. இதான் முதல் குறிப்பா.
லெமன் ரைஸ் வித் உருளைக்கிழங்கு வறுவல் சூப்பர் காமினேஷ்ன். நாளைக்கு தம்பி காலேஜ்க்கு எடுத்து போறதுக்கு இந்த ரெசிப்பிய தான் லன்ச்சா செஞ்சு தரபோறேன். இதுல பால் சேர்க்கறது சாதம் நல்ல ஒயிட்டா வரத்துக்கு தானே ஜெயா.

வினோ

பால் சேர்த்து செய்யும்போது கொஞ்சம் சாதம் பசையா இருக்கும் நல்ல டேஸ்ட் கொடுக்கும். செய்து பாத்துட்டு எப்படி இருந்துச்சுனு சொல்லுங்கபா;)

பிரட் பஜ்ஜி, ஈசிக் களி நான் கொடுத்த குறிப்புதான். எல்லாரும் வேகமா ஓடறாங்க. நான் கொஞ்சம் மெதுவா போலான்னு இருக்கேன்;)

Don't Worry Be Happy.