இஞ்சி தொக்கு

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இஞ்சி - 100 கிராம் இளசாக
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய்வற்றல் - 25 அல்லது 30
கல் உப்பு - கால் கப் (குவித்து எடுக்கவும்)
வெல்லம் - 100 கிராம் (பொடி பண்ணவும்)
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 50 மில்லி


 

வெல்லம் தவிர அனைத்துப் பொருட்களையும், மிக சிறிய அளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து கொள்ளவும்.
பிறகு அத்துடன் பொடித்த வெல்லத்தையும் சேர்த்து கலக்கவும். வாணலியில் 50 மில்லி நல்லெண்ணெய் காய விட்டு கடுகு, பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும்.
அத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்து, குறைந்த தீயில் நன்கு சுருளக் கிளறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

anbudan

inji thokku kurippil inji ilasaga than irukka venduma,
ingu enakku mutriya inji than kidaikkiradhu,
enave adhil seidhal nanraga irukkuma, vellam serkaamal seidhal nanraga varuma?
snadehgathhai pokkavum.

Vidyavasudevan.

anbudan