பால் + டேட் சிரப்!!!

பாலுடன் டேட் சிரப் சேர்த்து அருந்தலாமா. இதனால அயர்ன் சத்து அப்சர்வ் ஆகுமா. கால்சியமும் அயர்னும் சேர்த்து சாப்பிடக்கூடாதுனு கேள்விப்பட்டிருக்கேன் அதனால கேட்கிறேன்.

ஜெயலஷ்மி... இது உண்மையா என்ன.. அப்படி என்றால் விளம்பரத்தில் பாலுக்கு சர்க்கரையே உபயோகிப்பதில்லை.. டேட்ஸ் சிரப் தான் உபயோகிக்கறேன்னு சொல்லுறாங்க..

நான் கூட மில்க் ஷேக் பண்ணும்போது ஆப்பிள் அல்லது வாழைப்பழம் இது கூட பேரிச்சம்பழம் போட்டு தான் மில்க்ஷேக் பண்ணுவேன். அப்படி செய்தால் தவறா?...
தெரிந்தவர்கள் வந்து பதில் போடுங்கப்பா....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இரும்பு சத்துக்கு கூடவே வைட்டமின் சி எடுத்துக் கொள்ளனும் என்பார்கள்..ஆரஞ் சாப்பிடுங்க

Sure u can drink the dates syrub with milk. Dates syrub bottle having the direction how to use with milk. Everybody forgive me today my keyboard having some problem so i cannot type in tamil. i don't know how to solve. later i will try to type in tamil.

Try and try again until you reach the target.

Anitha

அயர்ன் சத்து அப்சர்வ் ஆக விட்டமின் சி தேவை அதில் அஸ்கார்பிக் அமிலம் இருப்பதால் இரும்புசத்து முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.ஆரஞ்சு,எலுமிச்சை, போன்ற புளிப்பு சுவையுள்ள பழங்கலில் சி அதிகம் இருக்கிற்து.கால்சியமும் அயர்னும் சேர்த்து சாப்பிடலாம் தவறில்லை

ஜெயலக்ஷ்மி,
உங்கள் சந்தேகம் எனக்கும் இருக்கு.கீரையுடன் தயிரோ,முட்டையோ சாப்பிடக் கூடாது என்பதற்கும் இதே காரணம் தான்.ஆனால் பாலுடன் டேட்ஸ் சிரப் கலந்து குடிப்பது பற்றி குழப்பமாக உள்ளது.இது பற்றி தெரிந்த தோழிகள் வந்து பதில் சொல்லுவார்கள்.எனக்கும் அயர்ன் குறைவாக தான் உள்ளது.

NAM ETHARKKAGA DATES SIRUP EDUKKIROM,IRON CONTENT BODYLA MAINTAIN AAGAVUM ATHU HAEMOGLOBIN LEVAL-LA BLOOD-LA MAINTAIN PANNAVUME.ANY IRON CONTENT SHOULD BE TAKEN ONLY WITH VIT-C LIKE APPLE JUICE,WHICH WILL HELP THE INTESTINES TO OBSERVE THE IRON NICELY.WE SHOULD NEVER TAKE MILK ATLEAST ONE HOUR BEFORE OR TWO HOURS AFTER TAKING THE IRON PILL OR SIRUP LIKE DATE SIRUP.IF WE TAKE IRON WILL NOT BE OBSORBED INSTEAD WILL BE WASTED.
NAAM PENGAL PIRATHI MATHAM WE LOOSE BLOOD DURING PERIODS.SO WE NEED TO TAKE IRON REGULARLY IN A CORRECT WAY TO MAINTAIN OUR HAEMOGLOBULIN IN BLOOD.

PIN KURIPPU;
SORRY ENAKKU TAMILA TYPE PANNA THERIYATHU.ORU MEDICAL PERSONAGA IRUNTHU KITTU NAM SAGOTHARIGALUDAYA SANTHEGATHTHAI THELIVU PADUTHTHA VENDUM ENBATHARKKAGAVE NAME REGISTER PANNI VANTHEN.ANEGAMAGA SANTHEGAM THEERNTHATHU ENRU NINAIKIREN.ADVERTISEMENT-LA SOLVATHELLAM NAM NAATTAI PORUTHTHAVARAI NAMBA VENDAM.VIRPPANAIYE AVARGALIN AIM.TAMILIL TYPE SEIYA THRINTHAVARGAL YAARAVATHU MUN VANTHU MER SOLLAPPATTA THEORY-I TAMILIL VELI ITTAL ANEGAR PAYAN PERUVAR.NANRI

விவிலியா முதலில் உங்களுக்கு நன்றி, எனது இந்த சந்தேகத்தை தீர்ப்பதற்காகவே பதிவு செய்து வந்தததில் மிக்க மகிழ்ச்சி.

நாம் எதுக்காக டேட் சிரப் எடுத்துக்கிறோம், அய்ர்ன் கண்டண்ட் பாடில மெய்ண்டெய்ன் ஆகவும் அது ஹீமோகுளோபின் லெவல்ல ப்ளட்ல மெய்ட்டெய்ன் பண்ணுவதற்குமே. அப்படி எடுத்துக்கிற அயர்ன் கண்டிப்பா விட்டமின் சி கூட சேர்த்துதான் எடுக்கணும். அப்பதான் அயர்ன் கண்டண்ட் பாடில அப்சர்வ் ஆகும். பால் கூட எந்த வகையான அயர்ன் கண்டண்ட் எடுத்துக்ககூடாது, அதாவது இரும்புசத்து மாத்திரை, டேட் சிரப். அப்படி நாம சாப்பிட்டா அந்த அயர்ன் சத்து அப்சர்வ் ஆகாது வீணாதான் போகும்.

இது மேலே விவிலியா சொன்னத எனக்கு தெரிஞ்சவரையில் தமிழில் எழுத முயற்சித்தேன்.

ராதா, தளிகா,அனிதர்மா,ரீம்,ஹர்ஷா நன்றி பதிலளித்தற்கு நன்றி.

ராதா, ஹர்ஷா உங்களுக்கு மட்டுமில்லை நிறைய பேருக்கு என்னையும் சேர்த்து இந்தக்குழப்பம் கண்டிப்பா இருக்கும். நிறைய பேத்துக்கு விளம்பரத்தைப் பார்த்து சரியா தவறான்னே தெரிஞ்சுக்காமயே அவங்க சொல்றத அப்படியே நம்பி சாப்பிட ஆரம்பிச்சறோம். விவிலியா அவர்கள் சொன்னமாதிரி அவங்க விற்பனைய பெருக்கிக்கொள்வதற்கு இந்த மாதிரி விளம்பரபடுத்தறது அவங்க உத்தி. எவ்வளவோ விஷயங்களை தேடித் தெரிஞ்சுக்கற நாம் இந்த மாதிரி சின்ன விஷயங்களை கண்டுக்காம விட்டுடறோம்.

சரி விஷயத்துக்கு வரேன், நான் முதல் தடவை கன்சீவ்வா இருந்தப்ப இங்க யூ.ஏ.இ லதான் ஒரு ஃபேமஸ் ஃபிரைவேட் டாக்டர்கிட்ட மருத்துவம் பாத்துட்டு இருந்தேன். ஏழு மாதம் வரைக்கும் அவங்க குடுத்த ஃபிரிஸ்கிரிப்சன் படி மாத்திரை எடுத்துக்கிட்டேன். அப்புறம் சார்ஜாவில் இருக்கிற கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டல்ல ஃபைல் ஓபன் பண்ணும்போது அவங்களும் தேவையான செக்கப் மற்றும் டெஸ்ட் எடுத்தாங்க ஃபிரிதான். ஆனா ஒரு மாதம் கழித்து அதாவது எனது எட்டாவது மாதத்தொடக்கத்தில் ரிசல்ட் குடுத்தாங்க. அப்ப அந்த டாக்டர் சொன்னது எனக்கு அதிர்ச்சியைய் கொடுத்தது. கணவர் துணைக்கு இல்லாம தனியாதான் போனேன். அவங்க என்ன சொன்னாங்கனா என் குழந்தைக்கும் எனக்கும் ஹிமோகுளோபின் லெவல் ரொம்ப ரொம்ப லோ. குழந்தை மூவ் பண்ணமுடியாமல் சுருண்டு படுத்துருக்குனு சொன்னாங்க. வெயிட்டும் ரொம்ப கம்மினு சொன்னாங்க. எங்க டெலிவரி பாக்கபோறீங்கனு கேட்டுட்டு நீங்க இந்தியாவுக்கு போறதுதான் நல்லதுன்னு சொன்னாங்க. எதுனால இப்படி ஆச்சுனு நான் என்னோட சந்தேகத்தைக் கேட்டேன். ஃபிரிஸ்கிரிப்சன் பாத்தவங்க இப்படி அயர்ன் கால்சியம் ஒரே சமத்துல எடுக்கக்கூடாதுனாங்க. நான் என்ன பண்ணமுடியும் டாக்டர் எழுதிக்கொடுத்ததை அப்படியே கடைபிடிச்சது தப்பா.
அப்புறம் அங்கிருந்த டயட்டீசியன் எப்படி உணவு எடுத்துக்கணும்னு சொன்னாங்க. காலைல அயர்ன் சாப்பிடறதா இருந்தா மாலைல கால்சியம். இது எல்லா உணவுக்கும் பொருந்தும். நட்ஸ் வகைகளை மாலையும், டேட்ஸ், டிரை ஃபுரூட்ஸ் காலையும் எடுக்கிறதுதான் நல்லது. பால், தயிர், சீஸ்னு சாப்பிடும்போது அயர்ன் சாப்பிட்டு குறைஞ்சது இரண்டுமணி நேரத்துக்கு அப்புறம் எடுக்கிறதுதான் சரி. அப்புறம் அந்த வாரமே ஊருக்கு புக் பண்ணி போயி சாப்பிடறது ஒண்ணே குறிகோளா வச்சு அம்மாக்கு சொல்லவே வேண்டாம் புள்ள ரத்தம் இல்லாம வந்து நிக்கறான்னு தினமும் ஈரலா எடுத்து தள்ளிட்டாங்க ;-)
பயனும் ஆரோக்கியமா 3 1/2கிலோ எடை இருந்தான்.

பிரிஸ்கிரிப்சனில் தவறா எழுதிக் கொடுத்தற்கு டாக்டர் சாரி கூட சொல்லை. எதுக்கு அப்படி சாப்டீங்க உங்களுக்கு இது கூட தெரியாதனு எங்ககிட்டயே கோவிச்சுக்கிட்டாங்க. ம்ம் வயத்துல புள்ளை இருக்கும் போது எதுவும் சொல்லக்கூடாதுனு பேசாம வந்துட்டோம். அவங்க லெட்டரில் ஏழு மாதம்னு போட்டாதான் நான் ஃபிளைட்ல ஏற முடியும்.

குழந்தை பிறந்தவுடன் இதெல்லாம் மறந்தாச்சு. அப்புறம் என் பையன் 3 வயசு இருக்கும்போது பால்ல டேட் சிரப் போட்டாதான் குடிப்பேன்னு அடம்பிடிச்சு நானும் எப்படியாவது பாலைக்குடிச்சா போதும்னு கொடுத்தேன். தயிர் சாதம்தான் அவனுக்கு பிடிச்ச உணவு. எப்படியாவது கீரையை திணிச்சரனும்னு தயிர் சாதத்துல கீரைய மறைச்சு மறைச்சு சாப்பிட வைச்சேன். இங்கிருந்து இரண்டாவது டெலிவரிக்கு ஊருக்கு புறப்பட்டபோது அவனுக்கு ஆரம்பிச்ச ஃபீவர், கோல்ட் இரண்டு மாதமா மருந்து சாப்பிட்டு குணமாகல. அப்புறம் வேற டாக்டர்கிட்ட படை எடுத்தா பிளட் டெஸ்ட் பண்ணுங்கனு சொல்லி ரிசல்ட் பாத்தா ஹீமோகுளோபின் லெவல் வெரி வெரில் லோ. நானும் டாக்டர்கிட்ட எப்படி கம்மி ஆகும் அவன் தினமும் பால்ல டேட்ஸ், சாதத்தில கீரைனு போட்டு சாப்பிடறானேனேன். அவர் நல்லா ஒரு பார்வை பாத்துட்டு. இப்படிக் கொடுக்கக்கூடாதுனு ஏற்கனவே டயட்டீசியன் சொன்னமாதிரி சொல்ல ஆரம்பிச்சாரு. அப்பதான் என்னோட தப்பு நல்லா உறைச்சது.

சோ, இதுனால எல்லாருக்கும் தெரிவிச்சுக்றது என்னன்னா கால்சியம் கூட அயர்ன் சேர்த்து சாப்பிட வேண்டாம்.

விவிலியா நீங்க தமிழ் டைப் பண்ண கீழே தமிழ் எழுத்துதவி இருக்கு பாருங்க அதன் மூலமா தமிழ்ல இங்க எழுதலாம். அடிக்கடி வாங்க ஆனா தமிழ்ல போட்டிங்கனா நீங்க என்ன சொல்ல வரீங்கங்கறது எல்லாருக்கும் தெளிவா புரியும்:-)

Don't Worry Be Happy.

அப்படியா, பிறகு இப்படி ஒரு தவறான கருத்தை விளம்பரத்தில் போட்டு மக்களை ஏன் கெடுக்க வேண்டும். குறிப்பாக அந்த விளம்பரம் வந்த பிறகு அதிக எண்ணிக்கையில் பாலுடன் டேட்ஸ் கலந்து குடிக்கிறாங்க. என் தோழி கூட தினமும் பூஸ்ட் சாப்பிடும் போது அதில் சர்க்கரைக்கு பதிலாக டேட்ஸ் சிரப்தான் போட்டு சாப்பிடுவா!

கீரை, தயிர் சாதம் பற்றியும் தெரியாதுப்பா, இன்னிக்கு காலையில் கூட இதை ரெண்டையும் தான் சேர்த்து சாப்பிட்டு வரேன்.

மருத்துவரை நம்பிதான் போகிறோம், அதுவும் போவதற்கு முன்பு 10 பேரிடம் விசாரித்துதான் செல்கிறோம், அப்படி இருக்கும் போது இப்படியெல்லாம் தப்பான ப்ரிஸ்கிரிப்ஷன் கொடுத்தா என்ன அர்த்தம், இவர்களையெல்லாம் சும்மா விடக்கூடாது, மருத்துவர்கள தெய்வத்திற்கு சமம், உயிரை காப்பாற்ற வேண்டிய தொழில் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டாமா?

அன்புடன்
பவித்ரா

ஜெயலஷ்மி.. உங்க பதிவுப் பார்த்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் கீரையும் தயிரும் கொடுக்கக்கூடாது என்பது புதியதாக உள்ளது எனக்கு.நன்றிப்பா. இனிமேல் அப்படி சாப்பிடமாட்டோம். இரவில் கீரை சாப்பிடக்கூடாதுன்னு சொல்லுவாங்க. இரவில் நெல்லிக்காய் அதே மாதிரி சாப்பிடக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஒரு வேளை நெல்லிக்காயிலும் அயர்ன் அதிகமோ? எனக்கு தெரியவில்லை. பசங்க சாப்டா சரி.. எதாவது உள்ள போனா சரினு அவுங்க கேக்குறத எல்லாம் கொடுக்கறோம். ஆனால் அதுவே அவுங்களுக்கு பிரச்சனையா போனா ரொம்ப கஷ்டம். மிக்க நன்றிப்பா....

விவிலியா உங்க பதிலுக்கும் மிக்க நன்றி... கீழே தமிழ் எழுத்துதவி போய் டைப் பண்ணுங்க அப்படி இல்லை என்றால் உங்க ஸிஸ்டம் ல போய்
http://software.nhm.in/
இந்த லிங்க போய் டவுன் லோட் பண்ணிக்கோங்க... நன்றி........

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

தயிர் சாதம் , கீரை பத்தி இன்னும் தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.

பவி, காசு குடுத்தா சீட்டு கிடைக்குங்கறத நாம கண்டுக்காம விடறோம் இல்லையா அப்ப அதோட விளைவுகளையும் அனுபவிக்கறதுதானே சரி.

ராதா, நெல்லிக்காயில விட்டமின் சி தானே இருக்கு. எனக்கும் இதப்பத்தி டவுட் இருக்கு அதிகம் சாப்பிட்டா சளி பிடிக்கும், த்ரோட் ப்ராபளம் வரும்னு சொல்லுவாங்க. ஆனா மூலிகை மருத்துவ புத்தகத்துல இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு நெல்லிக்காயதான் மருந்தா போட்டிருக்காங்க.

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்