வெஜ் பிரியாணி

தேதி: September 20, 2010

பரிமாறும் அளவு: 8 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

பாஸ்மதி அல்லது சீரகசம்பா அரிசி- 4 டம்ளர்
தேங்காய் பால்+நீர் -4 டம்ளர்+4 டம்ளர்
காளிப்ளவர்- 50 கிராம்
கேரட்,பட்டாணி,பீன்ஸ்,பீட்ரூட்,குடைமிளகாய்-ஒவ்வொன்றும் 25 கிராம்
வெங்காயம்-3
தக்காளி-2
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
கொத்தமல்லி,புதினா- அரை கப்(இரண்டும் சேர்த்து)
பச்சை மிளகாய்-2
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
கேசரி பவுடர்- சிறிதளவு
தயிர்- 1/2 கப்
எலுமிச்சை-2
முந்திரி-10
கிஸ்மிஸ்-4
ஏலக்காய்-3
பட்டை-1
கிராம்பு-3
அன்னாசி பூ-2
பிரிஞ்சி-1
நெய்-50 கிராம்
ரீபைண்ட் ஆயில்- 2 மேசை கரண்டி


 

பாத்திரத்தில் நெய்,எண்ணெய் ஊற்றி பட்டை,ஏலக்காய்,கிராம்பு,பிரிஞ்சி,அன்னாசி போடவும்.

பின்னர் முந்திரி,கிஸ்மிஸ், பச்சை மிளகாய் சேர்க்கவும்.

வெங்காயம்,உப்பு சேர்ந்து வதக்கி புதினா,கொத்தமல்லி சேர்க்கவும்.

அதில் இஞ்சி,பூடு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கி பின் தக்காளி சேர்க்கவும்.

பின்னர் எல்லா காய்கறிகளையும் சேர்த்து கிளறி மிளகாய் தூள் சேர்க்கவும்.

மசாலா ஒட்டிய பின் தயிர் சேர்த்து கால் பாகம் வேகும் வரை வதக்கவும்.

பின்னர் தேங்காய் பால்,நீர், கேசரி பவுடர் சேர்த்து அரை பதம் வெந்ததும் அரிசியை சேர்க்கவும்.

கொதித்து நீர் வற்றுவதற்கு முன்பே தம்மில் 15 நிமிடங்கள் போடவும்.

பின்னர் இறக்கி வேறு ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி அத்துடன் எலுமிச்சை சாற்றை விதை இல்லாமல் பிழிந்து எல்லா இடத்திலும் படும்படி கரண்டியால் கிளறி பின் பரிமாறலாம்.


எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் என்றால் வெந்த பின் மசாலா மேலே படிந்து இருக்கும். கீழே மங்கலான கலரிலும் இருக்கும்.அதனால் வேறு பாத்திரத்தில் கொட்டி மசாலா எல்லா இடத்திலும் படும்படி கிளறி சாறு ஊற்றி மீண்டும் 5 நிமிடம் தம்மில் போடலாம். சாதரணமாக அடுப்பில் செய்வதென்றால் மேலே சொன்ன செய்முறையே போதுமானது. வேண்டிய காய்கறிகள் சேர்த்துக்கொள்ளலாம். பீட்ரூட் போடுவதால் தான் கலர் பொடி கண்டிப்பாக சேர்க்க வேண்டும்(இல்லையேல் பீட்ரூட் கலரில் சாதம் இருக்கும்). கடைசியில் தான் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அப்போது தான் இதன் சுவை கிடைக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ஆமினா அக்கா,,,,
உங்கள் பெயரை நிறைய இடங்களில் பார்த்து உள்ளேன்.
இப்பொழுது தான் பேசும் வாய்ய்பு கிடைதுள்ளது..
என் அம்மாவும் இப்படி தான் vegetable biriyani செய்வர்கள்.ஆனால் தேங்காய் பால் சேர்க்க மாட்டர்கள்.உங்கள் டிஷ் செய்து பார்த்து விட்டு பின்னோட்டம் அனுப்புகிறேன்.

வெஜ் பிரியாணி செய்முறை பாத்தோடனே செய்து பாக்கனும்னு இருக்கு. இன்னிக்கு

டைம் இல்லை. நாளை கண்டிப்பா செய்து பார்த்துவிடரேன்.

சித்ரா நாளைக்கு நைட் 12 மணி ஆனாலும் பரவாயில்ல. உங்க பின்னூட்டத்திற்கு காத்திருப்பேன். ஏமாத்துனீங்க ம.பி க்கே ராப்தி சாகர் ட்ரெயின்ல வந்து உங்க வீட்டுல 1 மாசம் டேரா போடுவேன் (சும்மா விளையாட்டுக்கு. பயப்படாதிங்க:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நிஷா பரீத்

எனக்கும் நிஷா என்ற தோழியும், பரீத் என்ற தோழனும் இருக்கிறார்கள். உங்கள் பெயரை புதிய உறுப்பினர்கள் பெயரிலேயே பார்த்தேன்.

அக்கா லாம் சொல்லாதீங்க. ஆமினா போதும். உங்களிடம் பேசியதில் மிக்க மகிழ்ச்சி.

மற்ற பிரியாணி செய்யும் போது நான் பால் சேர்க்க மாட்டேன். ரம்ஜான் நேரத்தில் என் அத்தா (அப்பா-இப்ப இறந்துட்டார்) செய்வாங்க. சிலோன்ல அதிகமா தேங்காய் சேத்து தான் செய்வாங்க அப்படின்னு சொன்னார்.ஆனா இது சிலோன் ல செய்யும் முறையான்னு கேக்கப்படாது. எனக்கு சரியா தெரியாது.

அப்போ நான் பார்த்துட்டே இருப்பேன். கல்யாணம் ஆனபிறகு செய்ய ஆரம்பிச்சேன். என் பையனுக்கு இப்படி செய்து கொடுத்தா சாப்பாடும் உள்ள போன மாறி இருக்கும். காய்கறியும் கொடுத்த மாறி இருக்கும். எங்க வீட்டு பிள்ளைகள் கலர்கலரா இருப்பதை பார்த்தே சாப்பிட்டுவிடுவார்கள். நீங்களும் செய்து பாருங்க. செய்துட்டு ரிஷல்ட் சொல்லுங்க. அடிக்கடி அறுசுவைக்கு வாங்க... முடிந்தால் அரட்டையில் பேசலாம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமீனா, ரொம்ப நாள் ஆனை வெஜ் பிரியாணி சாப்புடனும்னு ஒரு கல்யாணத்துல சாப்டது.... ஆனா அப்பா, அம்மா கூட இருக்க்றவர சாப்பிடமுடியல...... கல்யாணம் ஆனதுக்கு அப்புரம் பிரன்டு ஒரு முரை செய்முரை சொல்லி செஞ்சேன்... பிரியாணி மாதிரியே இல்ல..... இப்பத்தான் குரிப்பு பாத்தேன் சீக்கிரமா செஞ்சு பாக்கறேன்..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ரங்கா

இந்த முறையில் செய்து பாருங்க. உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்
செய்து பார்த்துட்டு சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இது போல தான் நானும் செய்வேன். பிரட் 3or 4 slices சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து கடைசியில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.tryபண்ணி பாருங்க

ரீம்

நான் ப்ரைட் ரைஸ்க்கும் பிரட் தான் சேர்ப்பேன். ஆனா இதுல தான் ஏற்கனவே நிறைய காய்கறிகள் சேர்க்கிறோமே.. அதான் போடுவது இல்லை. சோயா கூட சேர்க்கலாம்....
ஒரு குறிப்பில் கூட பிரட் போட்டு சொல்லியிருக்கேன்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா வெஜ்பிரியாணியும் அருமை சுலபமாகவே உள்ளது காய்கறிகளை சிறிதாக நறுக்கி செர்த்தால் விரைவில் வேந்துவிடுமா? குடைமிளகாய் இதுவரையில் உபயோகித்ததில்லை அதை இப்படி நறுக்கி செர்ப்பது? ஆமி நிறைய கேள்வி கேட்டுட்டேன் கண்டிப்பா செய்வேன் பதில் வேண்டும். நன்றி, வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்யா

வதங்கிவிடும் நித்யா. அதற்காக தானே அவ்வப்போது நேரம் ஒதுக்குகிறோம். முதலில் வதங்கவும், பிறகு தண்ணீர் ஊற்றிய பிறகு வதங்கவும் செய்யும். அப்பறம் தம்மில் வேற போடுறோம். அதுனால வெந்துடும்.

குடைமிளகாய் சதுர சதுரமாக நறுக்கலாம் நித்யா.இல்லையேல் ப்ரைட் ரைஸுக்கு வதக்குவது போலவும் நறுக்கலாம். நம் இஷ்ட்டம் தான்.

கொஞ்சமா தான் கேள்வி கேட்டுருகீங்க. என்ன சந்தேகமோ கேளுங்க. சொல்றேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா,
கம கம பிரியாணி
வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா

மிக்க நன்றி உங்கள் பதிவுக்கு
செய்து பார்த்துட்டு சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி இன்னைக்கு உங்க ரெசிப்பி தான் வீட்ல. வெஜ் பிரியாணி அண்ட் எள் கத்திரிக்காய் கிரேவி. நன்றாக இருந்தது. இன்னும் சாப்பிடல. டேஸ்ட் மட்டும் பாத்திருக்கேன். அதுவே நல்லாருந்தது. தேங்ஸ் பா....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ராதா
அப்படியே எனக்கும் ஒரு பார்சல் அனுப்புங்க. செய்து பார்த்து உடனே சொன்னதுக்கு மிக்க நன்றி. நேற்றுதான் நினைத்தேன் ராதா ஏன் முன் போல் வருவதில்லைன்னு. கெட்டூ கெதர் க்கு போனதுனால வரமுடியலையா?

மிக்க நன்றி ராதா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹய் ஆமினா பிரியாணி அருமை! கண்டிப்பாக coming sunday பிரியாணி spacial than.குறிப்பு பார்க்கும்போது நாக்கு ஊறுது ட

என்று நீ ஒரு உயிர் மீது அளவுகடந்த அன்பு கொள்கிறாயோ அந்த நொடி முதல் நீ மனதால் பலவீனம் அடைகிறாய்-பகவத் கீதை.
அன்புடன்
ஜானகி

ஜானகி

செய்து ஆத்துக்காரரை அசத்துங்க:) நல்லபடியா பக்குவமா செய்யணும் சரியா? இல்லைன்னா உங்க ஹஸ் கிட்ட நான் தான் திட்டு வாங்கணும்:( ஜானகிமேல நம்பிக்கை இருக்கு :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

னான் இன்ட்ரு செஇது பர்தென், என் கனவர் நல்ல திருப்தியாக சாப்பிட்டார். ரொம்ப நன்ர்ரி ஆமினா. உங்கலுடய வேர receipe செஇது பாட்துடு cஒம்மென்ட் பன்ரென்..

சபீகா ரியாஸ்

செய்து அசத்தியாச்சா? மிகுந்த மகிழ்ச்சி....... கண்டிப்பா மற்ற குறிப்புகளையும் பாருங்க. மறக்காம செய்து பார்த்துட்டு சொல்லுங்க........

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

-

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமீனா மேடம்,
இன்னிக்கு உங்க வெஜ் பிரியாணிதான் செய்தேன். இங்கே பயன்கைய குளிர். ஸ்னோ. உங்களோட எள் கத்தரிக்காய் கிரேவியும் வெஜ் பிரியாநியும்தான் செய்தேன். மீதி இருந்ததை என் தோழி எடுத்துச் சென்றுவிட்டாள். இது தெரிந்த இன்னொரு தோழி அவளுக்குத் தெரிவிக்கவில்லை என்று ஒரே சண்டை. அவளுக்காக நாளைக்கு மீண்டும் செய்யப் போகிறேன்.....

ஹ.....ஹா....ஹா.....

ரொம்ப நன்றிங்க...

அடிக்கடி செய்து கொடுங்க ;)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Romba nalla irrundhadhu...
Yennamadhiri samayal arambanilaiyil ullavargalukku romba helpfulla irruku...
Thankyou so much for arusuvai & amina sister

Sujitha