முள்ளங்கி சாம்பார்

தேதி: September 20, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (9 votes)

 

முள்ளங்கி - இரண்டு
சின்ன வெங்காயம் - 6
கொத்தமல்லி தழை - சிறிதளவு
துவரம் பருப்பு - அரை டம்ளர்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
பெருங்காயம்
கடுகு
அரைக்க:
கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
தனியா பொடி
வர மிளகாய் - 2
தேங்காய் - ஒரு கப்


 

முள்ளங்கி மற்றும் சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கவும். பருப்பை அரைமணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
புளியையும் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் போட்டு வறுக்கவும். பருப்பு நிறம் மாறியதும் தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
வறுத்தவற்றை சூடு ஆறிய பின்பு தனியா தூள் சேர்த்து அரைக்கவும்.
உப்பு கலந்த நீரில் நறுக்கிய முள்ளங்கி, வெங்காயத்தையும் சேர்த்து வேக வைக்கவும்.
காய் வெந்த பின்பு புளியை கரைத்து வேக வைத்த காயுடன் கலக்கவும்.
பின்பு, அரைத்த விழுதையும் காயுடன் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து வரும் போது, வேக வைத்த துவரம் பருப்பை நன்கு மசித்து அதில் கலக்கவும்.
பின்பு கடுகு, பெருங்காயம் தாளித்து இறக்கவும். கொத்தமல்லி தழை தூவவும், சுவையான முள்ளங்கி சாம்பார் ரெடி.

தனியா தூளுக்கு பதில், பருப்புகளை வறுக்கும் போது தனியாவை வறுத்து அரைக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முள்ளங்கி சாம்பார் பாக்கும்போதே பசிக்குதெ. நாளைய மெனு அதே.

முள்ளங்கி சாம்பார் தேங்காய் சேர்த்து செஞ்சது கிடையாது பவி. நல்லா இருக்கு ஒரு நாள் செய்துபார்த்துவிட்டு சொல்லுகிறேன். இந்த சாம்பாருக்கு தக்காளி சேர்க்கவேண்டாமா.

பவி முள்ளங்கி சாம்பார் பார்க்கவே வித்தியாசமான கலர்ல அழகா இருக்கு. கண்டிப்பா செய்து பார்த்துவிட்டு சொல்றேன். நன்றி...பொதுவா முள்ளங்கி சாம்பார் நார்மல் சாம்பார் மாதிரி தான் செய்வேன். அல்லது புளிக்குழம்பு மாதரி செய்துவிடுவேன். இப்படி வறுத்து அரைத்து செய்தது கிடையாது. செய்து பாரக்கிறேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

பவி இது என்ன வித்தியாசமான சாம்பார். நாங்கள் அரைத்து செய்தது இல்லை. இட்லி சாம்பார் தான் அரைத்து செய்வோம். நிச்சயம் செய்துட்டு சொல்றேன்.

முள்ளங்கி என்னவருக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆனா இந்த வித்தியாச முறையில் செய்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்.

பவி ஒரு கப் தேங்காய் என்பது ஜாஸ்தியாக இல்லையா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அட்மின்
குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி.

சித்து,
பசிக்குது, அப்படியே சாப்பிடுங்க, செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

வினோ
ட்ரை பண்ணுங்க வினோ, தக்காளி சேர்த்தும் செய்யலாம், நன்னாருக்கும்,

ராதாக்கா
நன்றிக்கா, நன்னாருக்கும், செய்து பாருங்க.

கௌரி
நிச்சயம் சுவையா இருக்கும், எனக்கு மிகவும் பிடிக்கும், செய்து பாருங்க

ஆமி
செய்து அண்ணா சாப்பிட்டாங்களா இல்லையான்னு சொல்லனும், ஒரு கப் என்பது ஒரு அளவு தான் தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். உங்க வருகைக்கு நன்றி.

அன்புடன்
பவித்ரா

ரவா தோசை, ரவா இட்லி, தொட்டுக்க முளங்கி சாம்பார்!

கல்லக்கறே பவி! பேஷ் பேஷ்! ரொம்ப நன்னாருக்கும்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மன்னிச்சுடுங்கோ! தெரியாம 2 தடவை பதிவாயுடுத்து!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

உங்க வாழ்த்துக்கு நன்றி. அது முளங்கி சாம்பார் இல்ல, முள்ளங்கி சாம்பார், புரியறதோ, ஒரு தடவை தான் பதிவாயிருக்கு, அதுக்குள்ள, பாபு அண்ணாட்ட மன்னிப்பு கேட்கிறேன் பேர்வழின்னு இன்னொரு பதிவு போட்டிருக்கேள்

அன்புடன்
பவித்ரா

என்னை பேர் சொல்லி கூபிடரையா! ஓஓஓஓஒ பட்டிக்கு ரிகர்சலா!

ரெண்டுதரம் பதிவாயுடுத்து!

நாந்தான் அதை மாத்தி மன்னிப்பு கேட்டேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

பவி,
முள்ளங்கி சாம்பார் கம,கமக்குது. கல்யாணதுக்கு முன்னாடியே இவ்ளோ சூப்பரா சமைக்கிறீங்களே, வரப் போறவர் கொடுத்து வச்சவர் தான். கல்யாணமாகி நான் சமைக்க கத்துக்கறதுக்குள்ளே என் பையனே பொறந்துட்டான்.

பவ்ஸ், கலக்குறே பவ்ஸ் கலக்குற. ராவா தோசைதான்..... பட்டை....அவரைக்காய் பொரியல் தான்..... முள்ளாங்கி சாம்பார்தான்.... உனக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது இந்த ரெசிப்பி பார்த்து அசந்து போயி வரதட்சணையே வேண்டாம்னு சொல்லிடுவார் பாரேன். தேங்காய் சேர்த்து சாம்பார் நான் சாப்பிடது இல்லைப்பா. செய்து பார்த்து சாப்டுட்டு மறுவாரம் மறக்காம உனக்கு பார்சல் அனுப்பறேன் ;) வாழ்த்துக்கள் பா:)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பரசி, நான் பறந்திட்டு இருக்கேன், என்னவர் கொடுத்து வச்சவர்னு சொன்னதுக்கு நன்றிப்பா, திருமணம் ஆனதும் இந்த குறிப்பை அவருக்கு காட்டுகிறேன். உங்க பின்னூட்டதிற்கு நன்றி.

கல்ப்ஸ், நன்றி கல்ப்ஸ் அண்ணாக்கிட்ட பேசினேன், சொன்னார் 10 நாள் முன்னாடி செய்த சமையல் என்றால் புதுசாமே. அதுக்கும் பழசெலாம் நீங்க போட்டிருக்கீங்க. வாழ்த்துக்கு நன்றி.

மோஹனா

நீங்க தானே யாருமே பேர் சொல்லி கூப்பிடுவதில்லை என்று வருத்தப்பட்டீர்கள், அதான்.

அன்புடன்
பவித்ரா

உங்க சம்பார் செய்ய ஆசையா இருக்கு...
தனியா பொடி or தனியா எத்தனை spoon போடணும்? நன்றி

நட்புடன்,
திவ்யா

Be happy, make others happy

பவி,
முள்ளங்கி சாம்பார் எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று
தேங்காய்,பருப்பு கலவை மட்டும் வித்தியாசமாக சுவை தரும்
தேங்காய் அளவு கொஞ்சம் கம்மி பண்ணலாமா?
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

திவ்யா, என் நெருங்கிய தோழி பேர்க்கூட திவ்யா, தனியா தூளும் சரி, தனியாவும் சரி நமது வசதிக்கும், சுவைக்கும் ஏற்ப தான் நான் சேர்ப்பேன்.உங்க வாழ்த்துக்கு நன்றி.

கவிதா
எனக்கும் ரொம்ப பிடிக்கும் கவிதா. தேங்காய் அளவு நான் ஒரு கை போடுவேன், வசதிக்கேறப போடலாம், பிடிக்கும் என்றால் நிறைய சேர்க்கலாம், கவிதா! வாழ்த்துக்கு நன்றி.

அன்புடன்
பவித்ரா

பவித்ரா, இன்று உங்கள் முள்ளங்கி சாம்பார் செய்தேன் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சும்மா சொல்லப்படாது உங்க முள்ளங்கி சாம்பார் பேக்ஷ் பேக்ஷ் ரொம்ப நன்னாயிருந்தது.. அந்த பருப்பு தனியா அனைத்தயும் அரைத்து எடுத்த மசாலா வாசனையில் நான் மயங்கிட்டேன் போங்கோ.. சூப்பர் பவித்ரா முள்ளங்கி சாம்பார்... நன்றி நன்றி...

வாழு, வாழவிடு..

ரொம்ப சந்தோஷம் ராணி. நன்றி/

அன்புடன்
பவித்ரா

ஆஹா, ஆஹா நான் பறந்திட்டு இருக்கேன்ப்பா. என்னால முடியலை. நானும் இன்னிக்கு இதை தான் செய்தேன். எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் பிடித்ததில் அலாதி இன்பம். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. உங்க பாராட்டில் நான் மயங்கிட்டேன் போங்கோ

அன்புடன்
பவித்ரா