பருப்பு கீரை

தேதி: September 20, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

சிறுகீரை - ஒரு கட்டு
பாசி பருப்பு- 2 கைப்பிடி
தக்காளி-2
வெங்காயம்-1
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்
பட்ட மிளகாய்- 1
வெள்ளை பூடு -8 பல்
எண்ணெய்- 2 மேசைகரண்டி


 

பாசிபருப்பை கழுவி அத்துடன் 2 டம்ளர் நீர் ஊற்றி கால் பதமாக வேக விட வேண்டும்.

பின்னர் அதில் கீரை ,தக்காளி, பூடு, சீரகத்தூள் ,மஞ்சள் தூள் சேர்த்து அரைப்பதமாகும் வரை வேகவிடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்ட மிளகாயும் வெங்காயமும் வதக்கவும்.

பொன்னிறமானதும் வேக வைத்த கீரையை அதில் கொட்டி வதக்கி பின் பரிமாறலாம்.


குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.வெறும் சாதத்திலும் சாப்பிடலாம். ரசம்,கார குழம்பு,புளி குழம்புடன் சாப்பிட அருமையாக இருக்கும்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆமி,
பருப்பு கீரை குறிப்பு நல்லாயிருக்கு. ஆனால், இங்கு சிறுகீரை கிடைக்காது. ஊருக்கு வந்த பின், செய்து பார்க்கனும்.குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

ஹர்ஷா

எல்லாக்கீரைக்கும் இதே முறை தான் (முருங்கையும்,அகத்தியும் தவிர) கிடைக்கும் போது செய்து பாருங்க..

மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா பருப்பு கீரை சுலபமாகவும் அருமையகவும் உள்ளது கண்டிப்பா செய்திட வேண்டியதுதான், சிறுகீரைனா முலைக்கீரையா இல்லை எந்த கீரை வேண்டுமானாலும் போடலாம, கிடையாமலே சாப்பிடலாம் சரியா.

அன்புடன்
நித்யா

முளைக்கீரை தான் சிறுகீரை... எனக்கும் கீரைக்கார அம்மாவுக்கும் இதுல தான் பாதி நாள் வாக்குவாதம் நடக்கும். நான் சிறுகீரை கேட்பேன். அது இல்ல முளைக்கீரை தான் இருக்குன்னு சொல்லும்;)

கீரை கடையாமலேயே அதே சுவையில் கிடைக்கும். செய்து பாருங்க. இதைவிட ஈசியா செய்வேன் பல நேரங்களில்;)

பாசிபருப்பு,தக்காளி,பூடு,சீரகத்தூள், மஞ்சள் தூள் எல்லாத்தையும் 1 விசில் குக்கரில் வைப்பேன். ஆவி போனதும் கீரை வைத்து இன்னொரு விசில் வைப்பேன். உடனே ஆவி போக வைப்பேன். அப்பறம் தாளிச்சு கொட்ட வேண்டியது தான். இரண்டுக்கும் ஒரே சுவை தான். மாற்றமே இருக்காது.

மேலே கொடுத்தது அம்மாவின் குறிப்பு. இது ஆமியின் நொடியில் ரெடி குறிப்பு:)

செய்து பாருங்க நித்யா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நீங்க கொடுத்திருக்கும் கீரைக்குறிப்பைவிட உங்கம்மாவின் செய்முறை இன்னும்
ஈசியா இருக்கும்போல இருக்கே.என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான்.

சித்ரா என் குறிப்பு தான் சுலபம்னு நெனச்சேன். எங்கம்மா செய்வது தான் சுலபமா?

//என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதான்// ஆமாம் ஆமாம். ஆனா எங்கம்மா இதை பார்த்தா சண்டைக்கு வந்துடுவாங்க. அவங்க இன்னும் 25 வயசு பொண்ணு மாறி இருப்பாங்க:)

செய்து பாருங்க சித்ரா.....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்க கீரை உங்கள் முறைப்படி ((அதான் குக்கர்)) செய்தேன்
அடடா என்ன டேஸ்ட் சூப்பர்ப்பா வாழ்த்துக்கள் நன்றி..

வாழு, வாழவிடு..

ஆமினா,
பாசிபருப்பு சேர்த்து கீரை செய்தது இல்லை..அடுத்த முறை கண்டிப்பாக இந்த முறையில் செய்கிறேன்
வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்,
கவிதா

செய்து பாருங்க கவிதா. பாசி பருப்பு தவிர எந்த பருப்பும் இதுவரை கீரைக்கு பயன்படுத்தியது இல்லை:(

வாழ்த்துக்களுக்கு நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா