கட்டா மீடா நிம்பு

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எலுமிச்சம் பழம் - 10
ஊறுகாய் மசாலா - 1 கப்
உப்பு - அரை கப் பொடித்தது
சர்க்கரை - மூன்றே கால் கப்


 

எலுமிச்சம்பழத்தை நறுக்கி விதைகளை முழுவதும் நீக்கிவிட்டு மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.
அதை வெளியில் எடுத்து மேல் கண்ட எல்லா சாமான்களையும் சேர்த்துக் கலக்கவும்.
சர்க்கரை கரையும் அளவுக்கு நன்கு கரண்டியால் கலக்கவும். எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கக் கூடாது.
சர்க்கரை சரியாகக் கரையாவிட்டால் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை நன்கு சுட வைத்து, அதில் ஊறுகாய் பாத்திரத்தை இறக்கி வைத்து கலக்கவும்.
எத்தனை நாளானாலும் இந்த ஊறுகாய் கெடாது.


இது புளிப்பு, இனிப்பு, காரம் கலந்து ருசியான ஊறுகாய், சப்பாத்தி வகைகளுக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்