ஆரஞ்சு பாஸந்தி

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசந்தி - 500 மில்லி நன்கு குளிர்ந்தது
பால் - 200 மில்லி குளிர்ந்தது
கமலா ஆரஞ்சு பழம் - 8
சர்க்கரை - அரை கப்


 

கமலாப் பழத்தில் நான்கினை உரித்து, முத்துக்களாக உதிர்த்துக் கொள்ளவும்.
மீதமுள்ள நான்கினைப் பிழிந்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
பாசந்தியுடன் பால், ஜூஸ், சர்க்கரை முதலியவற்றை நன்கு கலக்கவும்.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கவும்.
பரிமாறும் போது கிண்ணங்களில் நிரப்பி மேல் பழ முத்துக்களை அழகாக வைத்து கொடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்