கேரமல் பாயசம்

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - ஒரு லிட்டர்
மெல்லிய ரக அரிசி - கால் கப் குவித்து எடுக்கவும்
சர்க்கரை - ஒரு கப்


 

அரிசியைக் கழுவி பத்து நிமிடம் ஊற வைக்கவும். இந்த பாயசத்தை பெரிய ப்ரஷர் குக்கரில் செய்வது நல்லது. குக்கரை அடுப்பில் வைத்து நன்கு சூடேற்றவும்.
நல்ல சூடு ஏறியபின் ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை போடவும். கண்டிப்பாகக் கிளறக் கூடாது.
சூட்டில் சர்க்கரை இளகி நிறம் மாற ஆரம்பிக்கும். நல்ல பிரெளன் நிறம் வந்ததும், கீழே இறக்கி வைத்து அரை கப் வெதுவெதுப்பான தண்ணீர் விடவும்.
இதைத் தள்ளி நின்று கொண்டு மேலே தெறிக்காமல் ஜாக்கிரதையாகச் செய்யவும்.
பின் அடுப்பில் வைத்துப் பாலை விட்டுக் கொதித்ததும், நீரை வடித்து அரிசியை போடவும்.
பாலும் அரிசியும் சேர்ந்து கொதிக்க ஆரம்பித்ததும் குக்கரை மூடி வெயிட்டை வைக்கவும்.
உடனே தீயின் அளவைக் குறைத்து சிம்மில் வைக்கவும். விசிலுக்குக் காத்திருக்க வேண்டாம். 25 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.
ப்ரஷர் இறங்கின பின் குக்கரை திறக்கவும். உடனே சர்க்கரையைப் போட்டு நன்கு கலந்து மறுமடியும் மூடி விடவும்.
மீண்டும் அடுப்பில் வைக்க வேண்டாம். சர்க்கரை இளகி நன்றாகக் கலந்து கொள்ளும்.
15 நிமிடங்கள் கழித்துத் திறந்தால் பாயசம் ரெடி.
இது ரோஸ் நிறத்தில், மிகுந்த மணத்துடன் நல்ல ருசியாக இருக்கும். கவனமாகச் செய்ய வேண்டும்.


இது மிகுந்த மணமும் சுவையும் உடைய ஒரு பால் பாயச வகை.

மேலும் சில குறிப்புகள்