மிளகாய் மசியல்

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை மிளகாய் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
குடமிளகாய் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - கால் கப் (பொடியாக நறுக்கியது)
புளி - பெரிய எலுமிச்சை அளவு
வெல்லம் - பெரிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப் தாளிக்க
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரைத் தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - ஒரு தேக்கரண்டி


 

புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயப் பொடி, வெந்தயம், உளுத்தம்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
பின் மிளகாய்களையும், இஞ்சியையும் நன்கு சுருள வதக்கவும். அதன் பிறகு புளியைக் கரைத்து விட்டு உப்பு, மஞ்சள் பொடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.
வெந்ததும் கீழே இறக்கி வைத்து நன்றாக மசித்து விடவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து இருக்க வேண்டும். பிறகு மீண்டும் அடுப்பில் வைத்து வெல்லத்தைப் போடவும்.
வெல்லம் நன்கு கரைந்து சேர்ந்ததும் இறக்கவும். இது தயிர் சாதத்திற்கும், தோசைக்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.


மேலும் சில குறிப்புகள்