முள்ளங்கி பொரியல்

தேதி: September 24, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (11 votes)

 

முள்ளங்கி - 3 கப் (பொடியாக அரிந்தது)
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு ஏற்ப
தேங்காய் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், கடலை பருப்பு, உளுந்து, பெருங்காயம், சீரகம், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க


 

முள்ளங்கி மற்றும் வெங்காயத்தை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டிரண்டாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
முள்ளங்கியுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.
அடுப்பை அணைத்து கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
சுவையான முள்ளங்கி பொரியல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவிதா
நல்ல குறிப்பு.
எனக்கு முள்ளங்கில சாம்பார் மட்டும்தான் பிடிக்கும். அம்மாவும் இப்படிதான் செய்வாங்க. வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவித்ரா

கவிதா,
நான் முள்ளங்கியில் பொரியல் செய்தது கிடையாது.ட்ரை பண்ணி பார்த்துட்டு சொல்றேன்.வித்தியாசமான குறிப்பு.வாழ்த்துக்கள்.(அவல் நேற்று தான் வாங்கிட்டு வந்தேன்.உங்க குறிப்பு செய்துட்டு பதிவு போடுறேன்.)

முள்ளங்கியே சாப்பிடாத ஆட்களை கூட சாப்பிட வச்சுருவீங்க போலையே!

செய்து பார்த்துட்டு சொல்கிறேன் பா.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கவிதா, சும்மாவே இருக்க மாட்டீங்களாப்பா. ஏதாவது செய்து எங்களை உண்டு இல்லைன்னு பண்ணிகிட்டே இருக்கீங்க :)) முள்ளங்கி பொரியல் ரொம்ப நல்லாயிருக்குப்பா. நான் வெறும் சாம்பார் தான் செய்திருக்கிறேன். இனிமேல் முள்ளங்கி சாம்பார்... முள்ளங்கி பொரியல் தான். வாழ்த்துக்கள். தொடர்ந்து தந்துட்டே இருங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பவித்ரா,
செய்து பாருங்க..
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி ,
செய்து பாருங்க..
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஆமினா,
கண்டிப்பா...
என் கணவருக்கு கூட பிடிக்காது இப்போதெல்லாம் வித்தியாசமா செய்யவே சாப்பிடுவார்.
செய்து பாருங்க..
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கல்பனா ,
செய்து பாருங்க..
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

நானும் முள்ளங்கி பொரியல் செய்வேன். சிரிது வித்யாசமாக. வெங்காயத்துடன்
ஒரு தக்காளியையும் சேர்த்து வதக்கி முள்ளங்கியை அதன் கீரையுடன் சின்னதாக
கட்பண்ணி வதக்கினால் அட்டகாசமா இருக்கும்.

இதில் மிளகாய் தூள் சேர்க்கலாமா? reply please

shagila

நீங்க சொன்ன முறையிலும் செய்து பார்க்கிறேன்
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஷகிலா,
இந்த முறையில் மிளகாய் தூள் சேர்த்தால் நன்றாக இருக்காது உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

பாவி, இன்று உங்கள் முள்ளங்கி பொரியல் செய்தேன் நன்றாக வந்தது.

முள்ளங்கியை வாங்கி விட்டேன் எப்படி சமைப்பது என தெரியாமல் இங்கே தேடினேன்.உங்கள் குறிப்பு கிடைத்தது.

உடனே சமைத்து விட்டேன். முள்ளங்கி மனம் எனக்கு பிடிக்காது. ஆனால் இதில் அந்த மனமே தெரியாமல் இருந்தது.நன்றி பாவி.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கவிதா... இன்று உங்க முள்ளங்கி பொரியல் தான் வீட்டில் அருமைன்னு பாராட்டிட்டார் என்னவர். :) மிக்க நன்றி சுவையான குறிப்பு தந்தமைக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முள்ளங்கி பொரியல் சூப்பர் நல்ல டேஸ்டாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி..

வாழு, வாழவிடு..