முருங்கை கீரை பொரியல் | arusuvai


முருங்கை கீரை பொரியல்

food image
வழங்கியவர் : ஆமினா
தேதி : ஞாயிறு, 26/09/2010 - 14:26
ஆயத்த நேரம் : 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15 நிமிடங்கள்
பரிமாறும் அளவு :

 

  • முருங்கை கீரை- 2 கப்
  • வெங்காயம்-3
  • வர மிளகாய்- 2
  • தேங்காய் துருவல்- 1/4 கப்
  • உப்பு- தேவைக்கு
  • எண்ணெய்-2 மேசைகரண்டி

 

  • முருங்கை கீரையை கழுவி நீரில்லாமல் வடிக்கவும்.
  • வாணலியில் கீரை,வெங்காயம்,வர மிளகாய் சேர்த்து சுருங்கும் வரை வதக்கவும்.
  • கீரை சுருங்கியதும் உப்பு கலந்த நீர் சிறிதளவு சேர்த்து எண்ணெயும் ஊற்றி கீரை வதங்கும் வரை வதக்கவும்.
  • கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடம் மட்டும் கிளறி பின் உடனே இறக்கவும்.
சாம்பார்,ரசம், கார புளிக்குழம்புகளுடன் சாப்பிட அருமையாக இருக்கும். முதலிலேயே உப்பு போட்டால் அளவு தெரியாமல் போக வாய்ப்பு உண்டு. அதனால் தான் சுருங்கியது சேர்க்க வேண்டும்.இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..ஆமினா.

உங்க ஒவ்வொரு குறிப்பும் பாத்தோடனே ட்ரை பண்ணத்தோன்றும்.முருங்கைக்
கீரை இங்க கிடைக்காதே. ஆமி நீங்க ஏன் விளக்கப்படங்கள் இணைக்க மட்டிங்க
ரீங்க.

சித்ரா

50 வது குறிப்பை விளக்கபடமா போடுறேன் பா. இப்ப நான் ஊருக்கு போறேன். எப்படியும் வர 1 மாசம் ஆகும். அதான் இப்போதைக்கு எனக்கு தெரிஞ்ச குறிப்புகளை போடுறேன்.

எனக்கும் இங்கே கீரை கிடைப்பது கஷ்ட்டம் பா. பார்க் ல அழகுக்கு வளர்ந்து வச்சுருக்காங்க. என் மகனை விளையாட கூடிட்டு போகும் போது வாட்ச்மேன் கிட்ட 10 ரூபாய் கொடுத்து வாங்கணும்:( நம்ம ஊர்ல 1 ரூபாய்க்கே 2 கட்டு கொடுப்பாங்க:)

கிடைக்கும் போது செய்து பார்த்துட்டு சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,

ஆமி,
எனக்கு காசு கொடுத்தாலும் முருங்கைக்கீரை கிடைக்காது.ஊருக்குப் போனதும் செய்யணும். நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள். எனக்கு கீரைப்பொரியலில் எப்பவும் உப்பு அதிகமாயிடும்.உங்க டிப்ஸ் இனிமே ஃபாலோ பண்ணுவேன்.

ஹர்ஷா...

ஹர்ஷா....

நேத்து தான் பழைய இழை தேடி பிடித்தேன்.

நாம்ம புதுசா வந்தப்ப முருங்கை கீரை எங்கு கிடைக்கும்னு ஒரு பொண்ணு கேட்டுச்சு. அப்ப கூட அது மாசமா இருக்குறதுனால தான் அதிகமா ஆசைபடுவதாக சொல்லுச்சு, என்கிட்ட கூட புது பொண்ணுன்னு பாக்காம நல்லா பேசி என்னை உற்சாகப்படுத்துச்சு அப்படின்னு(இதுக்காகவே) தேடினேன். அது நம்ம ஹர்ஷாவே தான்:)

உங்களுக்கு இந்த கீரை எவ்வளவு பிடிக்கும்னு தெரியுது. சீக்கிரமே கிடைக்கும். கவலை வேண்டாம்.

எனக்கும் கூட உப்புல தான் கீரை சொதப்பும். என் அம்மா இப்படி சொல்லி கொடுத்து இதை பாலோ பண்றேன். அதுமுதல் எல்லா கீரையிலும் வதங்கி சுருங்கிய பிறகு தான் உப்பை சேர்ப்பேன்.

வருகைக்கு மிக்க நன்றி!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி,

ஆமி,
நீங்க சொல்ற இன்சிடென்ட் எனக்கும் நியாபகம் இருக்கு.கொஞ்ச நாள் முன்னாடி தான்,உங்க முருங்கைக்கீரை ஃபிரைட் ரைஸ் குறிப்பு பார்த்ததும் நியாபகம் வந்துடுச்சு.ஆனால்,அந்த இழையை நான் தேடிப்பார்த்தேன்.என் கண்ணில் படவில்லை.அதில்,கவிதா(uk5mca)கூட பதிவு போட்டு இருந்தாங்கனு நினைக்கிறேன்.அது தான் என் முதல் இழை.அந்த ஃபிரண்ட்ஷிப்,உங்க ரெண்டு பேருடனும் இவ்ளோ நாள் தொடரும்னு அப்போ நினைக்கல.நான் 'ஆமினா மொஹம்மது' என்ற பேரப் பார்த்து ஒரு ஆன்ட்டினு நினச்சேன்.அப்புறம்தான் தெரிஞ்சது அது ஒரு குட்டி பொண்ணுனு.