காப்சிகம் சன்னா மசாலா

தேதி: September 27, 2010

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சன்னா - 1 கப் (ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்தது)
குடை மிளகாய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 tsp
மிளகாய் தூள் - 1/2 tsp
தனியா தூள் - 1/2 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
கரம் மசாலா தூள் - 1/4 tsp
கசூரி மேத்தி - 1/2 tsp
ஆம்சூர் பவுடர் - 1/4 tsp
சாட் மசாலா - 2 சிட்டிகை
பிரிஞ்சி இலை - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 tsp


 

குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை தனி தனியாக அரைத்து வைக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்து அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
தக்காளி விழுது சேர்த்து சுருள வதக்கவும்.
இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள குடை மிளகாயை சேர்த்து 3 நிமிடம் வதக்கி எல்லா தூளையும் (சாட் மசாலா தவிர்த்து) சேர்க்கவும்.
5 நிமிடம் வதக்கி 1 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து (ஏற்கனவே கடலையில் உப்பு உள்ளது. ஆகையால் பார்த்து சேர்க்கவும்) மூடி வைக்கவும்.
8 நிமிடம் கழித்து கடலையை சேர்த்து மீண்டும் 7 நிமிடம் திறந்து வேகவிடவும்.
இறக்கி சாட் மசாலா கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

குடை மிளகாய் சேர்த்து செய்தது இல்லை. செய்துட்டு சொல்கிறேன். சாட் மசலாவும் கூட மசாலாவில் சேர்த்தது கிடையாது. இதுபுதுவித குறிப்பா இருக்கு.

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா வாழ்த்துக்கு நன்றி.
கொஞ்சம் வித்தியாசமாக சிறிது புளிப்பு சுவையுடன் இருக்கும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சன்னா பட்டூரா என்னோட பேவரைட்,என்கிட்ட கசூரி மேத்தி இல்லை அதனால் டேஸ்ட் மாறுபடுமா??

கசூரி மேத்தி இல்லாமலும் செய்யலாம். சுவையில் சிறிதளவு மாற்றம் இருக்கும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

mrs.moorthy மேடம்.... காப்சிகம் சேர்த்து செய்வது புதுமையா இருக்கு...... நல்லாவும் இருக்கும்னு நினைக்கிறேன்...கசூரி மேத்தின்னா என்ன?

சீக்கிரமாவே செஞ்சு பாக்கறேன்...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

குடை மிளகாய் சேர்ப்பதால் சிறிதளவு புளிப்பு சுவையுடன் crunchy ஆக இருக்கும். கசூரி மேத்தி என்பது காய்ந்த மேத்தி (வெந்தய) கீரை.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உடனடி பதிலுக்கு நன்றி mrs.moorthy .....டின்னருக்கு சன்னாவை இப்போதே ஊறவைத்து விட்டேன்..... நாளைக்கு மறுபடியும் பின்னூட்டம் அனுப்பறேன்.....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

enakku amsure powder & kasuri methi irandum enna vendru theriyathu yarathu therinthal kurungalen. mudinthal image attach seiyavum please.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.