கோபி புலாவ்

தேதி: September 27, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பாஸ்மதி அரிசி - ஒரு கப்
காலிப்ளவர் - 1 (பெரிதாக உதிர்த்து சுத்தபடுத்தி வைக்கவும்)
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
பூண்டு - 5 பல்
நெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ - தலா 2
பிரிஞ்சி இலை - 2
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப


 

வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவை ஆய்ந்து நறுக்கி வைக்கவும்.
குக்கரில் நெய்யை ஊற்றி சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்க்கவும்.
அவை பொரிந்து வரும் போது வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, புதினா சேர்த்து வதக்கவும். பின்பு காலிப்ளவர் சேர்த்து லேசாக வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்கும் போது உப்பு மற்றும் அரிசி சேர்க்கவும்.
கொதி நன்கு வரும் போது, கொத்தமல்லி சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
ஆவி அடங்கியதும் திறந்து பார்த்தால் புலாவ் தயாராகி விடும். தயிர் பச்சடி, டல்மா, கிராவியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

காலைல தான் நினைத்தேன். அதுக்குள்ளையும் குறிப்பாக கொடுத்து அசத்திட்டீங்க. நானும் இப்படி தான் செய்வேன். ஆனா பொருட்கள் இன்னும் ஜாச்தியா இருக்கும். இந்த முறையில் செய்து பார்க்கிறேன்.

மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கோபி புலாவ் நான் இன்னும் கொஞ்சம் சாமான்கள் கூடச்சேர்த்து செய்வேன்.
இப்ப இங்க குறிப்புப்படி செய்து பாத்து சொல்ரேன்.

கவிதா,
கோபி புலாவ் எளிமையா அழகா இருக்கு.அவசரத்துக்கு உடனே செய்துடலாம். நல்லகுறிப்பு.மேலும் குறிப்புகள் கொடுத்து கலக்குங்க.வாழ்த்துக்கள்.

கவிதா, கோபி புலாவ் பாக்க நல்லாயிருக்கு..... உடனே செஞ்சு பாக்கரேன்.......

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ஆமினா,

நீங்க கம கம சமையல் செய்வதில் எக்ஸ்பெர்ட்..உங்கள் குறிப்பையும் தாங்க..உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சித்ரா ,

எளிமையா செய்து விட முடியும் ..உங்கள் குறிப்பையும் தாங்க..உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

அன்பரசி ,

எளிமையா செய்து விட முடியும் ..உங்கள் குறிப்பையும் தாங்க..உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ரெங்க லக்ஷ்மி,

உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா, கோபி புலாவ் ரொம்ப நல்லாயிருக்குப்பா. நான் இந்த முறையில் காலிபிளவருக்கு பதில் தேங்காயும், புதினாவும் சேர்ப்பேன். உங்கள் சமையல் அனைத்தும் வயிற்றுக்கு கேடு விளைவிக்காமல் மிதமான மசாலாவோடு இருக்கிறது. தொடர்ந்து சமையுங்க. நாங்க சாப்டுட்டே இருக்கோம். வாழ்த்துக்கள் :))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கவிதா கோபி புலாவ் சூப்பர். மசாலா குறைவாக செய்வதற்கு சுலபமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

விடைபெறும் சமயத்தில் அன்போடு பேசி விடைபெறுங்கள்
ஏனெனில் பின்னால் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்

கவிதா ஈஸியான கோபி புலாவ்.. பாக்கவே சாப்பிடத்தோணுது. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

கல்பனா,

செய்து பாருங்க

உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

சங்கரி,

உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ராதா அக்கா ,

உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா