மனதை தொட்ட சினிமா

ஹாய் friends

நேத்து நான் toy story3 பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது. குழந்தைகள் படமா யாருப்பா சொன்னது என்ன ஒரு கதை, கதாபாதிரங்கள்,அதன் முகபாவங்கள், நான் படம் பார்த்து அழுக்கவே ஆரம்பிச்சுட்டேன்

இப்படி உங்க மனதை தொட்ட படம் அது animation movieயோ, ஆங்கிலப் படமோ, தமிழ் படமோ,எந்த language படமோ அதை பற்றி பேசலாம் தோழர், தோழிகளே வாங்க........

நல்ல இளை தான் மீரா. எனக்கு ரொம்ப பிடித்த படம் நிறைய இருந்தாலும் , "சந்தோஷ் சுப்ரமணியம்" படம் ரொம்ப பிடிக்கும். அப்பா, மகன் பாசம் எந்த மாதிரி இருக்கணும் நு ரொம்ப அழகா சொல்லி இருப்பாங்க. ஜெனிலியா நடிப்பு சூப்பர், எல்லாருமே அந்த கதை கு ரொம்ப அழகா மேட்ச் ஆகி இருக்காங்க. ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

மற்றொரு படம், "அபியும் நானும்". அடேகப்பா இப்படி ஒரு பீலிங்க்ஸ் படம் எடுக்க முடிமா நு தெரியல, அவளோ அழகா எடுத்து இருந்தாங்க... அதுல வர ஒரு ஒரு சீன் உம சான்ஸ் லேஸ் ....... நம்ம குழந்தைய வளத்துன்னா அப்படி தான் வளத்துன்னும்......

நம்ம தோழிக கிட்ட இருந்து ரொம்ப different பதில் வரும் பாருங்க.!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மீரா.... டாய் ஸ்டோரி 3 தான் பாத்தீங்களா? அதோட முதல் இரண்டு பார்ட்டுமே சூப்பரா இருக்கும்... என் பெண்ணோட பேவரட் படமும் அது தான்..... குழந்தைக்காக ஒரு லிஸ்ட் அனிமேஷன் படமே நான் வாங்கி வச்சிருக்கேன்...... இதுல இரண்டு நன்மை...முதலாவதாக.... குழந்தைகள் டி.வி. அது இதுன்னு பாத்து கெட்டுப் போகாம இருக்கும்.... குழந்தைக்கு எஜுகேட்டிவ்வாவும் இருக்கும்.... இந்த படங்களப் பார்த்துத் தான் ஓரளவிற்கு... இங்கிலிஸ் நாலேஜ் சின்ன வயதிலே நன்றாக வளர்த்துக்கொண்டால்....

இரண்டாவது நம்மை மாதிரி பெரியவங்களும்.... நல்லா பாக்கலாம்.... இதனால சும்மா டிவி சீரியல் கண்டதுன்னு பாக்கறது தவிர்க்கப்படுது.... எனக்கு டி.வி.சீரியலே புடிக்காது........அதுக்குப்பதிலா நான் பாக்கறது இந்த மாதிரி அனிமேஷன் படங்கள் தான்....

இன்னும் எழுதறேன் படத்தைப் பற்றி...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

டாய் ஸ்டோரி 3யில.... கிளைமேக்ஸ் பாத்து அழுகையே வந்துரும்..... ஆன்டியின் முக பாவம்... அவன் விளையாடின டாய்ஸ் எல்லாத்தையும் விட்டு பிரியற அந்த சோகம்.... அவைகளையும் ஒரு உயிரா மதிக்கிற ஒரு தன்மை....அப்பப்பா...... அந்த படம் பாத்ததிலேர்ந்து என் பொண்ணு கூட ஒரு பொம்மையும் உடைகிறது இல்லை.....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

என் மனதை தொட்ட படம் "3 இடியட்ஸ்".வாழ்க்கைய எந்த எதிர் பார்ப்பும் இல்லாம , சந்தோசமா,சுலபமா எடுத்து கிட்டு வாழ்ற அமீர் கான்.நண்பனை திரும்பி பார்க்கும் ஆர்வம் கொண்ட மாதவன்,ஷார்மன்.பிராக்டிகலா தியரி யை அப்ளை
பண்றதும்,குழந்தை களுக்கு ஹெல்ப் பண்றதும் நல்லா இருந்தது.பெர்பெக்ட் மென் அமீர் சொல்லும் அளவுக்கு இருந்தது.

கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.எல்லோரும் சென்சிடிவே ஆகி ஒரு இடத்தில் அழ வைக்கும் படம்.

சுமதி.....என்னோட தோழிகூட சொன்னா 3 இடியட்ஸ் நல்லா இருக்கு பாருன்னு.... ஆனா என் பொண்ணுக்காக நான் எந்த படத்தையும் பாக்கறது இல்லை.... அனிமேஷன் தவிற..... இப்பத்தான் கொஞ்சம் வளந்துருக்கா..... கடைசியா நாங்க தியேட்டர் போய் பாத்த படம் சிவாஜி.... அப்ப அவ சின்ன குழந்தை வீட்லியே விட்டுட்டு போனோம்....

இப்ப எந்திரனுக்கு தான் ட்ரை பண்ணீகிட்டு இருக்கோம்.... ஆனா ஒரு நாள் பாக்கனும் 3 இடுஇயட்ஸ் படத்தை......

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

பைண்டிங் நீமோ, இதுவும் எனக்கு ரொம்ப பிடித்த படம்..... தந்தை மீன் மகனை தேடி போவதும் மகன் தந்தையை புரிந்து கொள்வதும் உண்மையிலே காமெடி + சென்டிமென்ட்...... எனக்கு மிகவும் பிடித்த படம்...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

கண்டிப்பா பாருங்க ரெங்கா.எனக்கு ஹிந்தி ரொம்ப புரியாது.ஆனா இந்த படம் பார்த்த போது ஒவ்வொருத்தர் பீல் லும் புரிந்தது.இன்னொரு முறை பார்க்க தோணும்.

ஹாய் ரங்கலஷ்மி, 3 idiots படம் ரெம்ப நல்லா இருக்கும் பாருங்க , நானும் சிவாஜி படம் தான் கடைசியா தியேட்டர்ல் பார்த்தது , அடுத்து எந்திரன் எப்படியாவது பார்க்கணும்.

ஹாய் ரங்ஸ் நீங்க சொன்ன படங்களை நான் நினைவில் வைத்திருக்கிறேன் பார்க்கனும் போல இருக்கு.

சமீபத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச படம் அபியும் நானும், அப்படி ஒரு பாச உணர்வுள்ள படம். ராதா மோகன் படம் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும் அவரோட மொழி மற்றும் அழகிய தீயே படமும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

அதற்கும் கொஞ்சம் மாதத்திற்கு முன்பு பார்த்த படம் நாணயம் இதில் ஸ்கிரீன்ப்ளே ரொம்ப நல்லா இருக்கும், ஆனா எடுத்துக் கொண்ட ஸ்கிரிப்ட் தான் அபத்தம். hollywood பிக்சர் பார்த்த ஒரு உணர்வு வரும். bank robbery தான் கதை ஆனா அதையும் பக்கவா கொடுத்து இருப்பாங்க.

இன்னும் நிறைய படங்கள் நினைவில் இருக்கு பிறகு வந்து பகிர்ந்துகிறேன்

கலை, சுமதி கண்டிப்பா பாக்கறேன்..... ஒருனால் பாப்பா ஸ்கூல் போன உடனே தான் பாக்கனும்...... பாத்துட்டு சொல்றேன்..

யாழினி எனக்கும் மொழி படம் பிடிக்கும்....ஆனால் நாணயம் படம்...அது ஒசியன்ஸ் 11 ஹாலிவுட் படத்தை போல் எடுக்க ட்ரை பண்ணி இருக்காங்க.... ஆனா அவளவா நல்லா இல்லை.... ஒசியன்ஸ் 11 படம் அந்த கேசினோவ கொள்ளை அடிக்கற விதத்துலேந்து பாக்க நல்லா இருக்கும்...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

மேலும் சில பதிவுகள்