ஈஸி வாழைக்காய் ஃப்ரை

தேதி: September 28, 2010

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - 1
பெரிய வங்காயம் - 1 நீளவக்கில் நறுக்கியது
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 இன்ச் அளவு
பூண்டு - 6 பல்
உப்பு - தேவையான அளவு
மல்லி இலை,கறிவேப்பிலை


 

வாழைக்காயை நீளவக்கில் பதியாக நறுக்கி,பின் 1/4இன்ச அளவாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் மிளகாய்,இஞ்சி,பூண்டு,மல்லி,கறிவேப்பிலை ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து பின் வெங்காயம் மற்றும் அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பின் வாழைக்காய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடிவைத்து சிம்மில் 10 நிமிடம் வேகவைக்கவும்.
மல்லி இலை தூவி பரிமாறவும்.சுவையான வாழக்காய் ஃப்ரை தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஈசி வாழைக்காய் ஃப்ரை பண்ணிப்பாத்துட்டு எப்படி வந்ததுன்னு சொல்ரேம்மா.

கீதா மேடம்... பாக்க நல்லா இருக்கு ... சீக்கிரமா செஞ்சு பாத்துட்டு சொல்றேன்.... இன்னும் நிறைய குறிப்புகள் தாங்க...

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

கீதா மேடம்... சீக்கிரமா செஞ்சு பாத்துட்டு சொல்றேன்....

Manimekalai

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

GEETHA.HOW TO SENT MY NOTES

HOW R U.HOW TO TYPE TAMIL