வெஜ் நூடுல்ஸ்

தேதி: September 28, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (9 votes)

 

காய்கறிகள் - கோஸ், பீன்ஸ், கேரட், பட்டாணி
மேகி நூடுல்ஸ் - 2 பாக்கெட்
வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 1/4
கொத்தமல்லி - சிறிது
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 3 அல்லது 4 பல்
சோம்பு - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - சில துளிகள்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு


 

காய்களை கழுவி, நறுக்கிக் கொள்ளவும். காய்களுடன் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு, நிறுத்தி விடவும். நீர்க்குழாயின் அடியில் வைத்து தண்ணீர் திறந்து விட்டு, ஆவியை ரிலீஸ் செய்து விடவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறுத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து நீளமாக நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு, சோம்பு, கொத்தமல்லி சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பச்சை வாசனை போன பின், நறுக்கின தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு குழைந்ததும் வேக வைத்துள்ள காய்களை சேர்க்கவும். அதனுடன் மிளகாய் தூளையும் சேர்த்து கிளறவும்.
பின்னர், நூடுல்ஸை சேர்த்து தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். காய்கள் வேக வைத்த நீரும் சேர்த்துக் கொள்ளலாம். தேவையெனில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். நூடுல்ஸ் உதிரி, உதிரியாக வரும்.
நூடுல்ஸை மூடி வைத்து வேக விடவும். இடையிடையே கிளறி விடவும்.
நூடுல்ஸ் வெந்ததும், உப்பு சரிப்பார்த்து டேஸ்ட் மேக்கரை சேர்க்கவும்.
பின் நன்கு கிளறி, மிளகு தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இப்போது, சில துளிகள் எலுமிச்சையை பிழிந்து, பரிமாறலாம்.
வெஜ் நூடுல்ஸ் தயார். தேவையெனில் கோஸின் அளவை அதிகமாக்கலாம். கோஸ் நூடுல்ஸுடன் நன்கு சேரும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பரசி மேடம், நானும் கிட்டதட்ட இப்படித்தான் செய்வேன், உங்கள்குறிப்பு படி செய்துபார்க்கிறேன். நன்றி.

அன்பரசி நானும் இப்படி தான் செய்வேன். ஆனால் சோம்பு,எலுமிச்சை சேர்ப்பதில்லை. மேகியை தனியாக அவித்துக்கொள்வேன். இந்த செய்முறையில் செய்து பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

ரம்யா,
மேடம் எல்லாம் வேண்டாம் பா,அன்பரசி என்றே கூப்பிடலாம்.
ஆம்.இது எல்லோரும் செய்கின்ற ரெசிப்பி தான்.ஆனால்,இதற்கான குறிப்பு யாரும் சமைக்கலாமில் இல்லாததால் அனுப்பினேன்.உங்கள் பதிவுக்கு நன்றி.

ஆமி,
இம்முறையிலும் செய்து பாருங்க.பதிவுக்கு நன்றி.இந்த குறிப்பிலும்,நீங்க சொன்ன மாதிரி ஃபோட்டோக்கள் டல்லா தான் இருக்கு.அடுத்த முறை கண்டிப்பாக தெளிவான படங்கள் அனுப்புகிறேன்.ஆலோசனைக்கு நன்றி.

ஹர்ஷா... சூப்பரா இருக்கு பார்க்கவே!!! செய்து, சாப்ட்டு சொல்றேன் சூப்பர்'னு :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
பதிவுக்கு நன்றி.ஃபோட்டோ சரியா வரல.ஆனால்,சாப்பிட நல்லா இருக்கும்.செய்து பாருங்க.கல்லூரி நாட்களில்,weekendவீட்டுக்கு வரும் போது,எனக்கு கண்டிப்பா இந்த நூடுல்ஸ் இருக்கணும்.இப்போ,எப்பவாவது தான் செய்கிறேன்.

ஹர்ஷா, வெஜ் நூடுல்ஸ் பார்க்க கலர்புல்லா நல்ல சத்துள்ளதாவும் இருக்குப்பா. என் ஆத்துக்காரர் நான் இல்லாமலும் இருந்துவிடுவார். நூடுல்ஸ் இல்லாம இருக்க மாட்டார். இந்த நூடுல்ஸை செய்து கொடுத்து எதாவது கறந்துட வேண்டியது தான் ;)) தெளிவான விளக்கம் + விளக்கப்படங்களுடன் அழகா தந்திருக்கீங்க. வாழ்த்துக்கள். தொடர்ந்து சமையல் அறையிலேயே இருந்து கலக்குங்க :)) நானும் ரொம்ப நாளா அன்பரசிய தேடிட்டு இருந்தேன். அது நீங்கதானா? சொல்லலவே இல்ல........... ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எப்பவுமே நான் விரும்பி சாப்பிடற உணவு இது. இதுல நான் பச்சைமிளகாயும், மேகி பவுடர் மட்டும்தான் சேர்ப்பேன். நூடுல்ஸும் முதல்லயே சுடு தண்ணில போட்டு எடுத்து வைச்சிருவேன். உங்க முறையில பண்ணிப்பாக்குறேன்.
மேலும் குறிப்புகள் தர வாழ்த்துக்கள்;)

Don't Worry Be Happy.

அன்பரசி.. உங்க குறிப்பு மாதிரி தான் நானும்செய்வேன். ஆனா பூண்டு எலுமிச்சம்பழம் சோம்பு இதெல்லாம் சேர்த்து செய்தது கிடையாது. பாக்க ரொம்ப அழகா இருக்கு உங்க குறிப்பு. கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்றேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அழகா இருக்கு, ஆனா நான் எதுவும் அரைத்து சேர்க்க மாட்டேன், மற்றபடி இதே செய்முறைதான்.. வாழ்த்துக்கள். வெங்காயம் பச்சை கலரில் இருக்கே!

அன்புடன்
பவித்ரா

இந்தமுறையில் செய்தது இல்லை,இன்று செய்ய போகிறேன்,நூடுல்ஸ் எனக்கு ஸ்பைஸியா இருந்தால் ரொம்ப இஷ்டம்.

ஹர்ஷா
உங்கள் முறைப்படி வெஜ் நூடுல்ஸ் செய்தேன்.
நன்றாக இருந்தது. சத்தானதும் கூட.
எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள்.
வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கல்ப்ஸ்,
//தொடர்ந்து சமையல் அறையிலேயே இருந்து கலக்குங்க //
சமைச்சு,சாப்பிட்டு,சாப்பிட்டு குண்டா ஆகி வெளிய வர முடியாம உள்ளயே இருக்கணுமா?
//சொல்லலவே இல்ல..// இதுக்கு என்னங்க அர்த்தம்?
என்னை தேடுனீங்களா? சொல்லவே இல்லை...நூடுல்ஸ் செய்து கொடுத்து கறக்கறதுல பாதி,எனக்கு அனுப்பிடுங்க,சரியா?பதிவுக்கு நன்றி.

ராதா,
இம்முறையில் செய்து பாருங்க.இது எனக்கு ரொம்ப பிடிக்கும்.செய்துட்டு சொல்லுங்க.பதிவுக்கு நன்றி.

ஜெயலக்ஷ்மி,
நூடுல்ஸ் காய்கறிகள் மற்றும் இஞ்சி-பூண்டு,மசாலாவுடன் சேர்ந்து வேகும் போது டேஸ்ட் நல்லா இருக்கும்.தனியே வேக வைத்தால்,அந்த சுவை வரல.இந்த முறையிலும் செய்து பாருங்க.பதிவுக்கு நன்றி.

பவி,
அரைத்து சேர்த்து சேர்த்தால் அதன் ருசியும்,மணமும் இன்னும் நல்லா இருக்கும்.வெங்காயம்,இது இங்க கிடைக்கிற yellow onion.வெள்ளையா தான் இருக்கும்.கொத்தமல்லி சேர்த்து அரைத்ததால் வந்த பச்சை கலரை சொல்றீங்களா?

ரீம்,
எப்படி இருக்கீங்க?எனக்கும் இந்த நூடுல்ஸ் ரொம்ப பிடிக்கும்.செய்துட்டு பிடிச்சிருந்ததானு சொல்லுங்க.பதிவுக்கு நன்றி.

யோகராணி,
வெஜ் நூடுல்ஸ் செய்துட்டீங்களா?உங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.உங்கள் பதிவுக்கும் நன்றி.

அன்பரசி,
உங்கள் நூடுல்ஸ் குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு நானும் இதே போல் தான் செய்வேன் same pinch ..
tastemaker ஐ அடுப்பை அணைத்தபின் சேர்த்து கொள்ளணும் இல்லையென்றால் அதில் இருக்கும் disodium ,isocyanate போன்ற செமிகல்ஸ் தன்மை மாறி உடலுக்கு கேடு விளைவிக்குமாம் சமீபத்தில் தளிகா மேடம் குறிப்பில் கூட இந்த விஷயத்தை போட்டு இருந்தாங்க ..

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
உங்க பதிவை இப்போ தான் பார்த்தேன்.உங்க ஆலோசனைக்கு நன்றி.இனிமேல் டேஸ்ட் மேக்கரை அடுப்பை நிறுத்திய பின்னே சேர்க்கிறேன்.தளிகா அவர்கள் சொல்லி இருந்ததை நான் கவனிக்கவில்லை. நினைவூட்டியதற்கு நன்றி.

ஹாய் ஹர்ஷா..,இன்று உங்களுடைய வெஜ் நூடுல்ஸ் செய்து பார்த்தேன்.
நன்றாக இருந்தது.எலுமிச்சை பழம் மட்டும் தவிர்த்துவிட்டேன்.அதன் சுவை அவ்வளவாக என் கணவருக்கு பிடிக்காது என்பதால்.மற்றபடி சுவை நன்றாக இருந்தது.
வாழ்த்துக்கள் ஹர்ஷா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

உங்கள் வெஜ் நூடுல்ஸ் நன்றாக இருந்தது..என் குட்டிக்கு நூடுல்ஸ் ரொம்ப பிடிக்கும்... நன்றி ஹர்க்ஷா..

வாழு, வாழவிடு..

அப்சரா,
உங்களின் பல குறிப்புகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.நீங்க என் வெஜ்நூடுல்ஸ் செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தது மகிழ்ச்சியா இருக்கு.நன்றி.

ருக்சானா,
உங்க குட்டிக்கு நூடுல்ஸ் பிடிச்சதுல சந்தோஷம்.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.