பைனாப்பிள் கொஜ்ஜு (கர்நாடகா வகை)

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அன்னாசி பழத்துண்டங்கள் - ஒரு கப்
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - சிறிது
மிளகாய் வற்றல் - 4
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
வெள்ளை எள் - 2 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - ஒரு மேசைக்கரண்டி


 

மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, வெந்தயம், வெள்ளை எள் ஆகியவற்றை ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்தெடுக்கவும்.
இத்துடன் கொப்பரைத் தேங்காய்த் துருவலையும் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு வறுத்த அனைத்தையும் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
பொடியாக நறுக்கின அன்னாசித் துண்டங்களை அரை கப் தண்ணீர் சேர்த்து, ஒரு விசில் வரும் வரை குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
வெந்த துண்டுகளுடன் அரைத்த விழுது, புளித்தண்ணீர், வெல்லம், உப்பு சேர்த்து மீண்டும் குக்கரில் வைத்து வேக வைக்கவும். ஒரு விசில் வந்தவுடன் இறக்கி விடவும்.


இது கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு வித்தியாசமான பச்சடி வகை.

மேலும் சில குறிப்புகள்