கதம்ப சட்னி

தேதி: October 1, 2010

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சின்ன வெங்காயம் - 20
உளுத்தம் பருப்பு - 2 tsp
தக்காளி - 1
பூண்டு - 10
குடை மிளகாய் - 1 (சிறியது)
புதினா - 1/2 கப்
கொத்தமல்லி - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் துருவல் - 2 tbsp
உப்பு - தேவையான அளவு
எண்ணெய், கடுகு, கருவேப்பிலை - தாளிப்பதற்கு


 

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் முதலில் உளுத்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
அதே வாணலியில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்தெடுக்கவும்.
பின்பு பூண்டு சேர்த்து பாதி வதங்கியதும் வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் குடை மிளகாய் சேர்த்து வதக்கி கடைசியாக குழுவி தண்ணீரை பிழிந்து புதினாவையும் கொத்தமல்லியையும் சேர்த்து 3 நிமிடம் வதக்கி இறக்கவும்.
தக்காளியை தனியாக வதக்கி எடுக்கவும்.
ஆறியதும் முதலில் உளுந்து, காய்ந்த மிளகாய் தேங்காய் சேர்த்து ஒரு சுற்று சுற்றி பூண்டு வெங்காய கலவையை சேர்த்து அரைத்து கடைசியாக உப்பு மற்றும் தக்காளி சேர்த்து ஒரு சுத்து சுத்தி எடுக்கவும்.
பிறகு தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து சிட்னியில் கொட்டவும்.
வித்தியாசமான சுவையுடன் கதம்ப சட்னி தயார்.
இந்த சட்னி இட்லி தோசை, சப்பாத்தி, தயிர் சாதம், கலந்த சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

லாவண்யா
நேற்று இந்த சட்னி செய்தேன் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது.

ரீம் உங்களின் பின்னூடத்திற்கு ரொம்ப நன்றி...

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

mrs.மூர்த்தி..... கதம்ப சட்னி பார்க்க அருமை..... இன்னிக்கே செய்து பாத்துட்றேன்

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ரங்கலக்ஷ்மி சட்னி செய்தீங்களா? எப்படி இருந்தது?

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

kathaba chatini super veru ethavadhu chatini method solugalen

உங்களின் பின்னூடத்திற்கு நன்றி. இந்த லிங்கில் போய் பாருங்கள் நிறைய சட்னி வகைகள் உள்ளது.

http://www.arusuvai.com/tamil/recipes/28

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!