திரட்டுப் பால்

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கன்டென்ஸ்டு மில்க் - ஒரு டின் (400 கிராம்)
தயிர் - ஒரு மேசைக்கரண்டி (புளிக்காத கெட்டித் தயிர்)
நெய் - 3 தேக்கரண்டி


 

ஒரு மைக்ரோவேவ் அவன் பாத்திரத்தில் மேற்கண்ட மூன்று பொருட்களையும் எடுத்துக் கொண்டு நன்கு கலக்கவும்.
பிறகு அதனை சுமார் 3 நிமிடங்கள் ஹையில் மைக்ரோவேவ் அவனில் வைத்து வேக விடவும்.
வெளியில் எடுத்து நன்கு கிளறி விட்டு மறுபடியும் 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும்.
வெளியில் எடுத்துக் கிளறி விட்டால் சூடான திரட்டுப் பால் ரெடி.
மைக்ரோவேவின் பவரைப் பொறுத்து 1,2 நிமிடங்கள் கூடக் குறைய ஆகலாம்.


மைக்ரோவேவ் சமையல் - அதிகப்படியாக 2 அல்லது 3 மைக்ரோவேவ் கண்ணாடிப் பாத்திரங்களை வைத்துக் கொண்டால் எல்லாமே அதில் சமைத்து விடலாம். வெவ்வேறு வடிவங்களும், அளவுகளும் இருந்தால் நல்லது.

மேலும் சில குறிப்புகள்