பூண்டு சூப்

தேதி: October 1, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (5 votes)

 

வெள்ளைப்பூண்டு - 20 பல்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப
மிளகுப்பொடி - அரை தேக்கரண்டி
ரசப்பொடி - அரை தேக்கரண்டி


 

முதலில் மேற்சொன்ன தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
பூண்டுப் பற்களை மைக்ரோ ஓவனில் 30 வினாடிகள் வைத்து எடுக்கவும். சுலபமாக உரிக்க வரும்.
உரித்த பூண்டுப் பற்களை, குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும். அதில் ரசப் பொடியை போட்டு மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
வெந்த பூண்டுப் பற்களை, ஸ்பூனால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
அடுப்பில் கொதித்திருக்கும் கலவையில், மசித்து வைத்திருக்கும் பூண்டுகளை சேர்க்கவும். அதனுடன் நெய்யையும் சேர்க்கவும்.
சுவையான பூண்டு சூப் ரெடி. உப்பு, மிளகுத் தூள் சேர்த்து, அருந்தவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல சத்துள்ள சூப் கொடுத்திருக்கீங்க. பூண்டு ஸ்மெல் ஜாஸ்தி இருக்குமா! ட்ரை பண்ணி பார்க்கிறேன். வாழ்த்துக்கள் சீதாம்மா!

அன்புடன்
பவித்ரா

நல்ல சத்துள்ள சூப்பாகத்தெரிகிரது. பூண்டு நன்கு வெந்து விடுவதால் ஸ்மெல்
எதுவும் வரதுன்னு நினைக்கரென்.

மேடம் எனக்கு low pressure இருக்கிறது. நான் இந்த சூப் குடிக்கலாமா?

shagila

அன்புடன் சிதாலக்சுமி எப்படி இருக்கின்றீகள்.தொடர்பு கொண்டு பலநாட்களாகி விட்டது.

பூண்டு சூப் மிகவும் நல்ல ரேசப்பி கொடுத்துள்ளீர்கள்.
உடம்புக்கும் நன்மை அளிக்கக்கூடிய சூப்.செய்வதும் சுலபம்.

அத்துடன் ஒரு டிப்ஸ் ம் கொடுத்துள்ளீர்கள். நன்றியும் வாழ்த்துக்களும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சீதாம்மா, பூண்டு சூப் ரொம்ப நல்லாருக்கு. எளிமையாக, தெளிவான விளக்கப்படங்களுடன் உள்ளது. பூண்டு வாயுப்பிடிப்பு, அதிகப்படியான கொழுப்புக்கு ரொம்ப நல்லது. எங்க வீட்டுக்கு இது தினம் தேவை ;) வாழ்த்துக்கள்

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு பவி,

பூண்டு வதக்கினாலோ, பச்சையாக சேர்த்தாலோ வருகிற ஸ்மெல் விட, வேக வைக்கிறப்போ வரும் ஸ்மெல் ரொம்பக் குறைவு. அனேகமாக இல்லன்னே சொல்லலாம். செய்து பாருங்க.
மருமகளுக்கு பூண்டு சேர்க்கிறதுக்காக செய்தேன். ரொம்ப நல்லா இருக்குன்னு மருமகள் சொல்லிட்டாங்க. மட்டன் சூப் டேஸ்ட் இருக்குன்னு சொன்னாங்க.

அன்பு சித்ரா,

இளம் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது இந்த சூப். சாப்பாடு நல்லா ஜீரணம் ஆவதாலும், கொழுப்பு சத்து குறைக்க உதவுவதாலும், எடை வேகமாக அதிகரிக்காமல் இருக்கும்.

அன்பு ஷாலி,

நீங்க கேட்டிருப்பது என்னை ரொம்பவும் யோசிக்க வைத்து விட்டது. சாதாரணமாக ஹை பிரஷர் இருக்கிறவங்களுக்கு நிறைய பூண்டு சேர்க்க சொல்லி, டாக்டர்கள் சிபாரிசு செய்வதுண்டு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். பூண்டு ரத்தத்தை சுத்தப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் என்றும் சொல்லுவாங்க. இங்கே அறுசுவையில் இதைப் பற்றி வேறு யாருக்காவது தெளிவான தகவல் தெரியுதான்னு அரட்டை பகுதியில் கேட்டுப் பார்க்கிறேன்.

அன்பு யோகராணி,

நல்லா இருக்கீங்களா?
செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, நிறைய பூண்டு சேர்க்க முடிகிறது.
மைக்ரோ அவன் பல விதத்திலும் உபயோகமாக இருக்கு. முறுக்கு, தேங்குழல் போன்ற ஸ்னாக் வகைகள் லேசாக நமுத்துப் போன மாதிரி இருந்தால், அவனில் 30-40 வினாடிகள் வைத்து எடுக்கலாம். ஆனா, நேர அளவு, நாம் அனுபவத்தில்தான் தெரிந்து கொள்ள முடிகிறது.

அன்பு கல்பனா,

வாயுப் பிடிப்பு இருந்தால் இந்த சூப் ரொம்ப நல்லது. சூப் குடித்து, ஒரு 5-10 நிமிஷத்துக்கு அப்புறம் ஏப்பமாக வரும். நல்ல ரிலீஃப் கிடைக்கும்.

அன்புடன்
சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

பத்திய சூப்பா/ நல்ல இருக்கு.

ஜலீலா

Jaleelakamal

சீதாலக்ஷ்மி,
பூண்டு சூப் குறிப்பு ரொம்ப நல்லா இருக்கு.விருப்பப்பட்டியலில் சேர்த்துவிட்டேன்.குறிப்புக்கு நன்றி.மேலும் நிறைய குறிப்புகளை படங்களுடன் அனுப்புங்க,செய்து பார்க்க ஈசியா இருக்கு.

சீதாலஷ்மி... உங்க குறிப்பை சும்மா பார்த்து பின்னூட்டம் தருவேனா??? செய்தே சாப்ட்டோம். ரொம்ப ருசியா இருந்தது. ஆரோகியமான குறிப்பும் கூட. நல்ல ஒரு சூப் சொல்லி கொடுத்திருக்கீங்க.... நன்றி சீதாலஷ்மி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீதாலக்ஷ்மி அம்மா,
இப்போ தான் உங்க பூண்டு சூப் செய்தேன்.சுவை ரொம்ப நல்லா இருந்தது.செய்யவும் ஈஸியா இருந்தது.பூண்டு உரிக்க நீங்கள் கொடுத்த டிப்ஸ் சூப்பர்.தோல் அப்படியே வந்து விட்டது.அருமையான குறிப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.