குழந்தைக்கு கலர் அலர்ஜி !

தோழிகளே, என் 2 வயது பெண்ணுக்கு ஆரஞ்சு நிற உடைகள் போட்டால் பிடிக்கவில்லை. அந்த கலரில் போடும்போதெல்லாம் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள். இத்தனைக்கும் நான் உடலை உறுத்தாத மாதிரிதான் உடைகள் தேர்வு செய்து போடுவேன். இருந்தாலும் ஏன் இப்படி செய்கிறாள்? உங்கள் குழந்தைகளுக்கு இதுபோல கலர் அலர்ஜி உள்ளதா? தயவுசெய்து சொல்லுங்கள்.

கல்பனா, எப்படி இருக்கீங்க. என் பொண்ணு இப்படித்தான், 4,5 வயது வரையில் வெள்ளை நிறம்னா சுத்தமா பிடிக்காது. வெள்ளை கலரில் சட்டை போட்டு விட்டால் ஒரே அழுகைதான். நாங்களும் அந்த கலரில் போடக் கூடாது:) அவங்க அப்பா ஒரு நாள் போட்டிருந்த வெள்ளை சட்டையை கழட்டினால்தான் பேசுவேன் என்று சொல்லி விட்டாள். ஆனால் இப்ப படிப்படியாக அது மறந்து விட்டது. நீங்களும் அதை கண்டுக்காமா விட்டுடுங்க, நாளடைவில் மறந்துடுவாங்க.

//அவங்க அப்பா ஒரு நாள் போட்டிருந்த வெள்ளை சட்டையை கழட்டினால்தான் பேசுவேன் என்று சொல்லி விட்டாள்//

ஹி..ஹி.. சார் இதனாலத்தான் வேஷ்டி கட்டுறது இல்லையா.. ;-)

வெண்ணிலா, என் பதிவை பார்த்து பதில் தந்ததற்கு நன்றிப்பா.நாங்க அந்த கலர்ல எடுக்கறது இல்லைப்பா. அவளுக்கு பிறந்த நாளுக்கு வந்த டிரஸ், நண்பர்கள் வாங்கி தந்த டிரஸ்னு ஒரே ஆரஞ்சு மயமா இருக்கும். அதை வேஸ்ட் பண்ண முடியாதேன்னு அவ கவனத்தை திசை திருப்பி நிமிஷத்துல மாட்டி விட்டுடுவேன். டிரஸ் போட்டவுடன் சோகமே உருவா உட்கார்ந்திருப்பா, அப்புறம் கொஞ்ச நேரத்துல நார்மல் ஆய்டுவா. இதுதான் நடக்குது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அட்மின் அண்ணாவும் அவர் பங்குக்கு அட்வைஸ் தர்றாருன்னு பார்க்க வந்தா, நக்கல் விட வந்திருக்காரா ;))))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மறுபடியும் ஹி ஹீ..

அது வெண்ணிலா இல்லைங்க.. வின்னி என்கிற வானதி. (அது நம்ம தங்கையாச்சேங்கிற தைரியத்துலதான் நான் கிண்டல் பண்ணினேன். :-))

ஹ.ஹ.ஹா.......நான் இங்க சிரிச்சுட்டு இருக்கேன்:-) இப்பத்தான் பொண்ணுக்கு வெள்ளை கலர் பயம் போயிடுச்சே, அதனால கொஞ்சம் தைரியமா கட்டுவாருன்னு நினைக்கிறேன்;-)

கல்பனா, சாந்தினியே வெண்ணிலாங்கற பேரை மறந்துட்டாங்களாம்:-) அவங்க வெண்ணின்னு யூஸர்நேம் ஆரம்பிக்க வின்னிக்கும், வெண்ணிக்கும் ரொம்பவே கன்ஃபூஸா இருக்கு:)
இந்த கலர் குழந்தைகளுக்கு என்ன பண்ணுதுதான் எனக்கும் புரியலை. என் பொண்ணுக்கு கலர் பயம் போக ஒரு 2,3 வருஷம் ஆகிடுச்சு.

நல்லவேளை நிரஞ்ஜனாக்கு இதைமாறி அலர்ஜி ஒன்னும் இல்லை இருந்துருந்தா அவ்ளோதான்... ஹாஹாஹா. வினீக்கு ரொம்ப பிடிச்சதே வேஷ்டிதான். வேஷ்டி(முண்டு) கேரளா-ல பாரம்பரிய உடைங்கறதால ரொம்ப பிடிக்கும் எந்த விஷேசம்னாலும் அதான் அவங்க யூஸ் பன்னுவாங்க. இந்த பதிவை வினீ பாக்கனும் அவ்லோதான் செம காமெடி ஆய்ரும்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

பாவம் கல்பனா தன் குழந்தை கலர் அலர்ஜியால் கஷ்டப்படுவதை பாத்து வேதனைப்பட்டு இங்க பதிவு போட்டிருக்காங்க. அவங்களுக்கு தீர்வு சொல்ல முடியலைனாலும் பரவாயில்லை, இதக் காமடியாக்கிறாதீங்கபா நான் எதாவது தவறா சொல்லியிருந்தா மன்னிக்கவும்;(

Don't Worry Be Happy.

ச்ச உங்க பதிவை பாத்ததுக்கு அப்பறம்தான் அதைப்பத்தியே நான் யோசிச்சேன். மன்னிச்சுக்கங்க கல்ப்ஸ்... சரியான நேரத்துல எனக்கு புத்தி சொல்லிருக்கீங்க அதுக்கு நன்றிங்க ஜெயா. நீங்க தவறா சொல்லல. தப்புதான் நான் அப்படி யோசிக்காம பதிவு குடுத்ததுக்கு...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

லதா, ஆரஞ்சு கலர் என் பொண்ணுக்கு போட்டா மட்டும்தான் அழுவா, மற்றபடி வேறு யாராவது அழுது அடம் எல்லாம் பிடிக்க மாட்டாள். அழுகை கூட 5 நிமிடத்திற்கும் மிகாது. எனக்கு ஒரு சின்ன டவுட் அதனாலதான் கேட்டேன்.

//ச்ச உங்க பதிவை பாத்ததுக்கு அப்பறம்தான் அதைப்பத்தியே நான் யோசிச்சேன். மன்னிச்சுக்கங்க கல்ப்ஸ்... சரியான நேரத்துல எனக்கு புத்தி சொல்லிருக்கீங்க அதுக்கு நன்றிங்க ஜெயா. நீங்க தவறா சொல்லல. தப்புதான் நான் அப்படி யோசிக்காம பதிவு குடுத்ததுக்கு//

லதா, இதுல சாரி கேட்க ஒன்றும் இல்லைப்பா. ஏன் இவ்வளவு ஃபீல் பண்றீங்க. நான் தப்பாவே நினைக்கலை. நான் மேலே ஆரம்பித்த இழையும் சீரியசான இழை இல்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு சின்ன சந்தேகம் க்ளியர் பண்ணவே நம்ம தோழிகள் கிட்ட கேட்டேன். லதா, நீங்க ஒண்ணும் கில்டியா பீல் பண்ணாதீங்க. ப்ளீஸ்...//

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்