உப்பப்பம்

தேதி: April 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - ஒரு கப்
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றும் கலந்து - ஒரு கப்
மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

அரிசியுடன் பருப்புகளைக் கலந்து, நன்கு களைந்து, தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அதை வடிய வைத்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
உப்பு, மிளகாய்ப் பொடி, காயம் போட்டுக் கலந்து, குறைந்தது 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். அப்பொழுது தான் பஞ்சு போல் மிருதுவாக வரும்.
வார்ப்பதற்கு முன் தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
அப்பக்கல்லில் எண்ணெய் விட்டு, மிகச் சிறிய கரண்டியால் மாவை எடுத்து விட்டு பொன்னிற அப்பங்களாகப் பொரித்து எடுக்கவும்.


இது சட்னியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற மாலை நேரச் சிற்றுண்டி.

மேலும் சில குறிப்புகள்