அமெரிக்காவில் அறுசுவை தோழிகளின் நேரடி சந்திப்பு!

எல்லோரும் எல்லாத்துக்கும் ஒரு இழை போடும் போது...நாமும் ஒன்னு போடுவோமேன்னு தான்... இது நிஜம் நூறு சதவீத உண்மை!!!

அமெரிக்காவில் இருக்கிறவங்க மட்டுமில்ல யாருவேண்டுமானாலும் எந்த மூலையிலிருந்து வேண்டுமானாலும் இங்கே விசிட்டிங் வந்தவங்கன்னு எல்லோரும் பங்கு பெறலாம். ஆனால் சந்திப்பு கண்டிப்பாய் எங்க ஊருல தான் இதுல எந்த மாற்றமும் இல்ல...
யாரெல்லாம் வரப்போறீங்கன்னு வந்து பதிவு போடுங்க... இது எத்தனை நாள் தொடர்ந்தாலும் பரவாயில்லை ஒரு நாலு பேரு சேர்ந்த பிறகு கண்டிப்பாக சந்திப்புக்கான இடமும் தேதியும் முடிவு செய்யப்படும்.

நான் முன்னாடியே சொன்ன மாதிரி எல்லோரையும் கூவி கூவி அழைச்சுட்டேன்... வாங்கப்பா...

உமா, எப்படி இருக்கீங்க? நான்,வின்னீ,வாணி மூவரும் மீட் பண்ண ப்ளான் போட்டு ரொம்ப நாளாச்சு. ஆனா எதோ காரணங்களால் இன்னும் மீட் பண்ணல.ஆமா, நீங்க என்த இடம்னு சொல்லவே இல்லயே! சொன்ன அது பற்றி சீக்கிரமே யோசிக்கலாம். நான், வின்னீ விர்ஜினியா, வாணி மேரிலாண்ட். நீங்களும் சொல்லுங்க எங்கன்னு, ஓ.கே. வா?

என்னங்க உமா, கேள்வி கேட்டீங்க, பதில் போட்டா சத்தமே காணொமே?வாங்கப்பா, வந்து பதில் போடுங்க.

ப்ரியா உங்க பதிவை பார்த்து மிக்க சந்தோசம் ஆனா நான் இருப்பது west coast என்ன பண்றது?
எனக்கு கொஞ்சம் வேலை பிசி அதனால தான் இங்கே வரமுடியல!!!
நீங்க கலிபோர்னியா வரீங்களா?
வேற யாரெல்லாம் இன்னும் interested ஆக இருக்காங்கன்னு பார்ப்போம்!!!

அறுசுவைல எங்க பாத்தாலும் கெட் டுகதர் பேச்சு தான் போல. ஆனா எந்த கெட் டுகதர்லையும் என்னால கலந்துக்க முடியாது :( இந்த மாசம் நான் இந்தியா போறேன். டெலிவரிக்கு. நான் இருப்பது சிகாகோ.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

ஹலோ

நான் இருப்பது virginia தான் tysons corner பக்கத்தில் vienna ல இருக்கேன்
எனக்கு ஒரு வயதில் ஒரு பையன் இருக்கிறான்

நீங்க எல்லாம் virginiala எங்க இருகிறீங்க
Priya - நீங்க இன்னொரு thread ல கேட்டு இருந்தீங்க எங்க இருக்கின்னு
நீங்க இருப்பது பக்கம் என்றால் கட்டாயம் சந்திக்கலாம்
-விஜி

ஹலோ, உமா,விஜி எப்படி இருக்கீங்க?உமா நாம ரொம்ப தள்ளி இருக்கோம்.பரவாயில்லப்பா, இன்த வருடம் எங்களால் வர முடியாது, ஏற்கனவே குளிர் ஆரம்பிச்சாச்சு.அடுத்த வருடம் முடின்தால் பார்போம்.
விஜி, நீங்க கிட்டதான் இருக்கீங்க.நான் herndon ல தான் இருக்கேன். முடின்தால், கூடிய சீக்கிரம் மீட் பண்ணுவோம்.

மேலும் சில பதிவுகள்