இல்லத்தரசிகளின் ’ஸ்பெசல்’ அரட்டை! - 54 -

இன்னிக்கு அனேகரது ஆபிஸ் லீவுங்கறதுனால அரட்டையக் கிடப்பிலே போட்டாச்சு. தேடி கஷ்டப்பட்டு கொண்டு வந்திருக்கேன். இன்றும் நாளையும் இல்லத்தரசிகளுக்கானது. இனிதாய், பயனுள்ளதாய் அரட்டை அடிக்க வரவேட்கிறேன், வருக! வருக!......... (வருங்கால இல்லத்தரசிகளும் வரலாம்)

கல்பனா நலமா? டிபன் எல்லாம் முடிச்சி மதிய சாப்பாடும் தயார் போய் சப்பிடனும், கதி படிச்சேன் சூப்பர் பினுட்டம் அனுப்பிருக்கேன் சுண்டல் பாட்டி கதையும் அருமை படிச்சுட்டன்....... தொடர்ந்து எழுதுங்கோ ஓய்வு வேண்டாம்.
நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறேன்.

அன்புடன்
நித்யா

ஹாய் நித்யா எப்படி இருக்கீங்க ரொம்பநாளாச்சு மதியம் சாப்டாச்சா என்ன ஸ்பெசல் இன்னிக்கு

பாதிமா மேடம் நல்லா இருக்கேன் நீங்கள் நலமா? இன்னும் இல்லை ரசம் சேப்பங்கிழங்கு வறுவல், மோர். அவ்வளோதான் இன்னைக்கு. நீங்க என்ன செய்யறீங்க உங்கள் இரண்டு பெண்களும் நலமா?

அன்புடன்
நித்யா

நித்யா நான் சாப்டாச்சு மட்டன் குழம்பு, மட்டன் வறுவல்,ரசம், சீனி சோறு உங்கள் பசங்க என்ன பன்றாங்க

ஹாய் நித்யா என் பெண் நெட்டுக்கு வந்துட்டா நான் போறேன் பை பை

நாம் பேசறது இதுதான் முதல் முறை இல்லையா. ஆனா நான் உங்கப்பேரை தினமும் பத்து இருபது தடவையாவது கூப்பிட்டு இருப்பேன். ஹி ஹி என் தங்கை பேர் நித்யா:)

பயனுள்ள அரட்டையா மாத்திரலாமா;-
எங்க ஊர்ல அதாவது அஜ்மான் இப்ப கிளைமேட் சேஞ்சாயிட்டு வருது. இன்னும் ஒரு வாரத்துல கோயமுத்தூர் மாதிரி சிலு சிலுனு காத்து வீச ஆரம்பிச்சுடும்;)
ரோட்டில இருக்கிற பூங்காவில் எல்லாம் கலர் கலரா பூ பூக்க ஆரம்பிச்சுட்ம். வெள்ளை, ஊதா, சிகப்பு கலர்ல கம்பளம் விரிச்ச மாதிரி அழகா இருக்கும். பூவுல இருக்கிற தேனை சாப்பிட பூச்சி வரும் அந்தப்பூச்சிய சாப்பிட பறவைகள் கூட்ட கூட்டமா காத்துட்டு இருக்கும்.
சாய்ந்தர நேரம் ஜாலியா வாக்கிங் போகலாம். அனல் வீசின காத்து வாபஸ் வாங்கினதுனால கடல்லேர்ந்து ஜில்லுனு காத்து எல்லார் மேலேயும் பட்டு முடிய சிலிர்க்க வைக்கும்.
இனி இங்க வசந்தகாலம் தான்.............;)
கல்ப்ஸ் எப்படி இருக்கு?
நித்தி உங்க ஊர் கிளைமேட் எப்படி அங்க என்ன நடக்குது .................
அரட்டைய ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒவ்வொருத்தரும் நீங்க இருக்கிற இடத்தோட கிளைமேட் அதோட விஷேசத்தப் பத்தி சொல்லிடுங்கோஓஓஓஓஓஒ...

Don't Worry Be Happy.

நானும் வந்துட்டேன் :). கிளைமேட் பத்தி பேசணுமா சரி பேசிடுவோம்.

இந்தோனேஷியா சிங்கப்பூர் எல்லாம் நிலநடுக்கோட்டில் இருப்பதால் அதிகமா சம்மர் விண்டர்னு வித்தியாசம் இருக்காது. அதனால் மாதத்தில் எப்படியும் பத்திலிருந்து இருபது நாட்கள் மழை இருக்கும். இன்னிக்கு காலையில் சரியான வெயில். இப்போ (மாலை 5மணி) இருட்டிக்கிட்டு மழை பெய்யப் போகுது.
இங்கே பலவித பறவைகள் வரும் காக்கா மட்டும் கிடையாது :). ஒரு வீட்டில் கூட்டில் வைத்து வளர்த்துகிறார்கள் ஹாஹாஹா.

காலையில் கிச்சன் விண்டோவைத் திறந்தால் கார்டனில் நீலம் பச்சை மஞ்சள்னு பல வண்ண சிட்டுகுருவிகள்(உள்ளங்கை அளவு கூட இருக்காது ரொம்ப சிறியது) ஹெலிகோனியா பூக்களில் சிறகடித்துக் கொண்டே தேன் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் மனதுக்குள் சிலுசிலுன்னு ஒரு சந்தோஷம். அப்பா அம்மா இங்க இருக்கும் போது காலையில் வாக்கிங் போயிட்டு வரும் போது பாரிஜாத மலர்கள் பறிச்சுக்கிட்டு வருவாங்க. ஒரே ஒரு பூ அறையில் இருந்தால் போதும் அவ்வளவு வாசம் வீசும். இந்த மலருக்கும் சீசன் இல்லை. எப்போதும் பூக்கிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

குட்டித்தலை, அப்ப நீங்க இந்தோனேஷியால காக்கவ புடிக்கமுடியாதுன்னு சொல்லுங்க..;)))))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எங்காத்து கொல்லேலையும் முருங்கை மரத்துல 2 சிட்டு குருவி வரது 2 நாளா!

அணிலும் வரது ! பாக்க அழகாருக்கு! சந்தோஷமாருக்கு!

குழந்தேள் 2 பேரும் என் மருமானோட எந்திரன் பேருக்கா!

டிக்கேட் எவ்ளோ தெரியுமோ!

அதிகம் இல்லை ஜெண்டில் வுமன் ! 200 ரூபாய் மட்டுமே!

அதை கேட்டு மயங்கி விழுந்தவளை இப்போதான் மாமா பன்னீர் ஜோடா

கொடுத்து எழுப்பினார்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி, இப்படி மயங்கி மயங்கி விழுந்தா மாமா தூக்கி விடுவார்னு சும்மனாங்காட்டியும் மயங்கி விழுறா மாதிரி நடிக்கறீங்களா? மாமி.... எனக்கு தெரியாதா? மோகி மாமி சரியான கள்ளின்னு... ஹிஹிஹிஹி ;))))

மாமி, மயங்கி விழுந்தா தூக்கிவிட பக்கத்துல யாராச்சும் இருக்காங்களான்னு பார்த்து விழுங்க. அப்புறம் தத்து பித்துன்னு விழுந்து வச்சி, இதுதான்டா சாக்குன்னு அறுசுவைக்கு லீவு உட்டுடாதீங்கோ ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்