ப்ரூட் சாலட்

தேதி: October 3, 2010

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

பச்சை ஆப்பிள் - 1
சீட்லஸ் திராட்சை - 15 (தோலுரித்தது)
மாதுளம் - 1
அன்னாசி - 4 ஸ்லைஸ்
பேரீச்சம்பழம் - 5
வால்நட் - 10 (பொடியாக நறுக்கியது)
கற்கண்டு - 25 g
தேன் - 2 tbsp
சீஸ் - 100 g (mozerella)
எலுமிச்சை சாறு - 1 tsp


 

எல்லா பழம் மற்றும் பேரீச்சம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
சீஸை துருவி கொள்ளவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தேன் கற்கண்டு வால்நட் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறவும்.
சுவையான பழ சாலட் ரெடி.


சீஸ் பிடிக்காதவர்கள் அது இல்லாமலும் சாப்பிடலாம். உங்களுடைய விருப்பம் போல் எந்த பழம் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

mrs.மூர்த்தி மேடம், இதுவரை வெண்ணிலா , சாக்லேட் ஐஸ்கிரீம் மட்டும் தான் செஞ்சுருக்கேன்...... வெண்ணிலா கூட ப்ரூட் சால்ட் செய்து சாப்பிடனும்னு ஆசை.... ஆனா இப்போ பீவர்....... பிறகு இதை செய்து பாத்துட்டு எழுதுறேன்..... குரிப்பு அருமை..

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ரங்கலக்ஷ்மி உங்களின் பின்னூடத்திற்கு மிக்க நன்றி. செய்து பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். இது எங்கள் வீட்டில் அடிக்கடி இடம்பெறும் ஒரு பண்டம். எல்லா வகையான ஐஸ்கிரீமுடனும் நல்ல இருக்கும். அனால் என் சாய்ஸ் எப்பவுமே வெண்ணிலா தான்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!