கொத்து புரோட்டா

தேதி: October 3, 2010

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (7 votes)

 

புரோட்டா- 3
சால்னா- 2 தேக்கரண்டி
முட்டை-2
வெங்காயம்-2
தக்காளி-1
பச்சை மிளகாய்-1
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு- தேவைக்கு


 

எண்ணெயில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும்.

பின்னர் தக்காளி,பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து வதக்கவும்.

இந்த கலவையை ஒரு ஓரத்தில் ஒதுக்கிவிட்டு நடுவில் முட்டையை சேர்த்து கிளறவும்.

முட்டை நன்கு பொரிந்த பின் எல்லாம் சேர்த்து ஒன்றாக கிளறவும்.

பின்னர் கையால் சிறிய சிறிய துண்டுகளாக உதிர்த்திய புரோட்டாவை சேர்த்து வதக்கவும்.

பின் அதில் சால்னா ஊற்றி நன்கு வதக்கி மசாலா ஒட்டிய பின் கீழிறக்கவும்.


சால்னா இல்லையென்றால் கிரேவி,குருமா உபயோகிக்கலாம். கிரேவி என்றால் 1 கரண்டி போதுமானது. ஆறிய பின் முட்டை வாசனை வரக்கூடாது என்பதால் தனியாக ஒதுக்கி முட்டையை கிளறும்படி குறிப்பிட்டுள்ளேன். செய்ய பழக்கமில்லாதவர்கள் தனியாக பொரித்து பின் சேர்க்கலாம். காரம் தேவைப்பட்டால் கடைசியில் மிளகு தூள் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கொத்து புரோட்டா தான் குத்து புரோட்டாவா மாறிடுச்சா?// என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும்,வெள்ளிகிழமைகளில் இரவில் செய்வேன்.

ரீம் மாத்திட்டேன். நன்றி சொன்னதுக்கு. நாங்க அப்படி சொல்லியே பழகியதால் அப்படி போட்டேன்:)

நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

யார் மேலோ இருக்கிற கோபத்துல குத்து விட்டுட்டீங்கனு நினைச்சேன்;)
கொஞ்சம் வேளையா உள்ள போயிட்டு வரதுக்குள்ள ரீம் சொல்லிட்டாங்க.

நல்ல குறிப்பு ஆமினா. என் தங்கைதான் இதுல ஸ்பெசல், இனி நானும் செய்வேன்;)

Don't Worry Be Happy.

எழுதி கொடுத்த என்னவர்க்கு தான் தலையில் குத்து விட்டேன் ஜெயா :) அவர் தான் சொன்னார் அப்படி. எங்க ஊரிலும் அதே உச்சரிப்பு என்பதால் நானும் போட்டுட்டேன்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு செய்ய பழக்கமான உணவு இது தான் பா. அம்மா அடிக்கடி வாங்கி கொடுக்க மாட்டாங்க. சேர்த்து வைக்கும் பணத்தில் நானும் என் தம்பியும் இதை வாங்கி முட்டையும் வாங்கி (மற்றதெல்லாம் வீட்டிலேயே இருக்கும்) செய்வோம். ஏன்னா கடையில் 15 ரூபாய்க்கு 1 ஆள் சாப்பிடும் படி தான் செய்து கொடுப்பார்கள். நாங்க 4 புரோட்டா வாங்கி நிறையா செய்து நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வோம்.

இனி செய்து அசத்துங்க ஜெயா. உங்க அடுத்த குறிப்பு எங்கே? சீக்கிரம் அனுப்புங்க. உங்க தங்கையையும் கொடுக்க சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றாக இருந்தது

லெட்சுமி தெய்வா

செய்து பார்த்தாச்சா? மிக்க நன்றி !

இனி அடிக்கடி செய்யுங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அக்கா, நான் சமையலுக்கு புதிது கொஞ்சம் Detail விளக்கம் தேவை!
சால்னா என்றல் என்ன?
கிரேவி என்றல் என்ன?
இரண்டையும் தயார் செய்வது எப்படி Pl
முட்டை கலக்காமல் கொத்து பரோட்டா செய்வது எப்படி?

சால்னா என்றால் குழம்பு/குருமா வகை. ///http://www.arusuvai.com/tamil/node/16344// இந்த லிங்க்ல இருக்கும் பாருங்க. அதில் சிக்கனுக்கு பதிலாக உருளை,பட்டாணீ சேர்த்து செய்யலாம்.
கிரேவி என்றால் திக்காக வைப்பது. நிறையா முறையில் செய்யலாம். நீங்க சைவம் என்பதால் வெங்காயம்,தக்காளி, காளான் போட்டு
கிரேவி செய்யலாம்.

முட்டை தான் இதற்கு சுவை கொடுப்பது, அப்படி சேர்க்க விருப்பமில்லை என்றால் முட்டை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து மேலே சொன்ன அதே முறையில் செய்யலாம்.

பொதுவாக புரோட்டா செய்யும் போது நாம் ஏதேனும் குழம்பு சேர்ப்பது வழக்கம் இல்லையா? அந்த குழம்பினை கொத்து புரோட்டாவுக்கு உபயோகியுங்கள்

நன்றி பொன்மலர்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிகவும் thanks அக்கா

ஆமி,
நீங்க டிங் டிங் ஓசையோடு செய்யறதா நினைத்து கொண்டே படித்தேன்
பரோட்டா குறிப்பையும் சேர்த்து தாங்க
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா

அந்த ஓசையை கேட்கதற்காகவே கடையில் வாங்குவோம். நல்ல அனுபவமுள்ள மாஸ்ட்டர்கள் கொத்தும் போது இசையோட இருக்கும். சாதாரண கடைகளில் ஏனோ தானொன்னு கொத்திட்டு கொடுப்பாங்க. வீட்டில் நானும் அதே மாதிரி செய்து பார்ப்பேன். அப்பறம் தோசை கல் உடஞ்சுடும்னு அம்மா திட்டுவதால் பாவம்னு விட்டுடுவேன்.

ஊருக்கு போனா இல்லைன்னா என்னவர்/தம்பி செய்யும் போது புரோட்டா குறிப்பும் விளக்கப்படமா தரேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் ஆமி,
எனக்கு புரோட்டா ரொம்ப பிடிக்கும்.கடைலதான் வாங்கி சாப்பிடுவோம்.வீட்டில செய்யலாம்னு நிறைய இடத்துல தேடிப்பார்த்தேன்.செய்முறை எல்லாம் ரொம்ப பெரிசு.செய்யவும் நேரமாகும்.உங்க ரெசிபி ஷார்ட் & ஸ்வீட்டாக இருக்கு.இனிமேல் வீட்டிலயே அடிக்கடி செய்யலாம்.செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.ரெசிபிக்கு ரொம்ப ரொம்ப நன்றி,ஆமி.

அன்புடன்
நித்திலா

அன்புடன்
நித்திலா

நித்திலா

கடையில் இப்படி தான் பா சார்ட்டா செய்வாங்க. நீங்களும் செய்து பாருங்க. கண்டிப்பா ஹோட்டலில் சாப்பிட்ட சுவை கிடைக்கும். சால்னா/கிரேவி டேஸ்ட் தான் இதில் முக்கியம்.

செய்துட்டு மறக்காம சொல்லிடுங்க எப்படி இருந்ததுன்னு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா