இறால் 65

தேதி: October 4, 2010

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (5 votes)

 

இறால் -1/2 கிலோ
இஞ்சி,பூண்டு விழுது- 2 ஸ்பூன்
தயிர்- 1/4 கப்
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
எலுமிச்சை-1
முட்டை-1
அரிசிமாவு-4 ஸ்பூன்
மைதா- 2ஸ்பூன்
கான்ப்ளார்- 2 ஸ்பூன்
தனியா- 1/2 ஸ்பூன்
உப்பு- தேவைக்கு

பொரிக்க
வெங்காயம் -1
கறிவேப்பிலை-1 கொத்து
எண்ணெய்- பொரிக்க தகுந்த அளவு


 

ஒரு பாத்திரத்தில் முட்டையை நன்கு கலக்கிவிட்டு எலுமிச்சை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து 1 மணி நேரம் ஊற விடவும்

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு பொரிதெடுக்கவும்.

வேறொரு வாணலியில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை, வெங்காயம் வதக்கி இறால் மேல் சேர்க்கவும்.

அதன் மேல் எலுமிச்சை பிழிந்து பரிமாறவும்


முட்டை சேர்ப்பது பொரிக்க போடும் போது தனியாக மசாலா பிரியாமல் இருப்பதற்காக. அரை வேக்காடாக இறாலை பொரித்தெடுத்தால் போதுமானது. இல்லையேல் ரப்பர் போல் இருக்கும். தேவைப்பட்டால் கலர் சேர்க்கலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று தான் உங்கள் ரெசிபி செய்தேன் தயிர் கிடைக்காததால் 1 ஸ்பூன் வினிகர் சேர்த்தேன்.சுவை சூப்பர்.தேங்ஸ்

நிஷா தியாகு
செய்தாச்சா? மிக்க நன்றி. அடுத்த முறை தயிர் கிடைத்தால் மறக்காம செய்து பாருங்க.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக அருமை

All is well