2 இன் 1 ஃப்ளவர் பாட் ஸ்டாண்ட்

தேதி: October 5, 2010

4
Average: 4 (6 votes)

அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள் இந்த 2 இன் 1 ஃப்ளவர் பாட் ஸ்டாண்டை செய்து காட்டியுள்ளார்.

 

மூடியோடு கூடிய 10 லிட்டர் வாளிகள் - 2
பூந்தொட்டி வைக்கும் சக்கர ஸ்டாண்டு - ஒன்று
துணி - ஒரு மீ
லேஸ் - 4.5 மீ
எலாஸ்டிக் - அரை மீ
தையல் இயந்திரம்
துணிக்குப் பொருத்தமான நிற நூல்
மெஷரிங் டேப் / ஸ்கேல்
மார்க்கர்
கத்தரிக்கோல்

 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
துணியின் நடுவில் வாளியின் மூடியை வைத்து, அதை விடப் பெரியதாக துணியில் ஒரு வட்டம் வரைந்து வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வட்டத்தின் ஓரங்களை மடித்து தைத்துக் கொள்ளவும்.
வாளிகள் இரண்டையும் மூடி, சக்கர ஸ்டாண்ட்டின் மேல் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கொள்ளவும். தரையிலிருந்து மேல் மூடி வரைக்கும் உள்ள உயரத்தை அளந்து கொள்ளவும். ஸ்கர்ட் உயரத்துக்கு, இத்துடன் 3 செ.மீ (A) கூடுதலாக அளந்து கொள்ளவும்.
வாளியைச் சுற்றி வரும் அளவுக்கு எலாஸ்டிக்கை நறுக்கி இருமுனையையும் இணைத்து முடிச்சுப் போட்டு வைக்கவும்.
லேஸை மூன்று சம பங்குகளாக வெட்டி வைக்கவும்.
லேஸ் அளவை நீளமாகவும், A அளவை அகலமாகவும் கொண்டு ஒரு செவ்வக வடிவில் துணியை வெட்டி எடுக்கவும். அகலப் பக்கங்களைச் சேர்த்துக் குழாய் போல் வருமாறு பொருத்திக் கொள்ளவும்.
ஸ்கர்ட் அடிப்பக்கம் வெளிப்பக்கமாக (சாதாரணமாக ஹெம் மடிப்பதற்கு மாறாக நல்ல பக்கம் மடிக்க வேண்டும்) ஒரு சிறிய மடிப்பு மட்டும் மடித்து அதன் மேல் லேஸ் வைத்து தைத்துக் கொள்ளவும்.
படத்தில் காட்டி உள்ளவாறு அடுத்த வரி லேஸைப் பொருத்தவும். மூன்றாவது வரி லேஸையும் விருப்பமான இடத்தில் வைத்து தைத்துக் கொள்ளவும்.
ஒரு முறை வாளி அடுக்கில் துணியை பிடித்து ஸ்கர்ட் அளவைச் சரி பார்த்துக் கொண்டு அதற்கு ஏற்ப மேல் மடிப்பை தைக்கவும். மடிப்பில் இருந்து ஒரு செ.மீ இறக்கி ஒரு வரி தையல் போட வேண்டும்.
இதிலிருந்து ஒரு செ.மீ இறக்கி துணியை உட்புறமாக மடித்து, அடுத்த வரி தையல் போட வேண்டும். இரண்டு தையலுக்கும் இடையே எலாஸ்டிக் வளையம் வருமாறு வைத்து தைக்கவும்.
வாளிகளில் ஒவ்வொன்றாக நீர் நிரப்பி மூடி, ஸ்டாண்டில் அடுக்க வேண்டும். (முழுவதாக நிரப்ப வேண்டாம்.) சுற்றிலும் ஈரமில்லாமல் துடைத்து வட்டத் துணியை மூடியின் மேல் போடவும்.
ஸ்கர்ட்டை அதன் மேல் போட்டு சுருக்கங்களைச் சரி செய்து விடவும். மேலே அழகாக ஒரு தொட்டிச் செடியை வைத்து விடவும். அழகான 2 இன் 1 ஃப்ளவர் பாட் ஸ்டாண்ட் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

மிகவும் எளிமையான் முறை. என்னிடம் தையல் இயந்திரம், துணி எல்லாம் இருக்கு. ஆனால் தைக்க மட்டும் தெரியாது. ஹி. ஹி.ஹி

shagila

அழகா இருக்கு. தையல் மிஷின் இல்லையே? கையில் தைத்தால் அமைப்பு சரியாக வருமா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அழகா இருக்கு, எனக்கு தையலுக்கும் ரொம்ப தூரம். இன்னும் பல படைப்புகள் வழங்கிட வாழ்த்துக்கள்:))

அன்புடன்
பவித்ரா

இமா மேடம் நல்ல ஐடியா. க்ராப்ட் அழகா இருக்கு. எனக்கு தையல்ல ஆர்வம் அதிகம் ஆனா மிஷின் இல்ல. நீங்க வெல்வெட் துணில தான் இந்த ஸ்கர்ட் தைச்சி இருக்கீங்களா மேடம்.

அடராமா!

எங்காத்துல வாளி மட்டும் தானே இருக்கு!

அதுவும் இல்லாம நான் குட்டி பாப்பா வேர!

இமா:):):):):)

நேக்கு நீங்களே செஞ்சு அனுப்பிடுங்க்கோ!

நான் அதை பொக்கிஷமா வெச்சுக்கறேன்! ஜிஜிஜிஜி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஹை அழகா இருக்கே! ஆனா தையலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் :). ஒழுங்கா ஓரத்தை மடிச்சு தைக்கக் கூட வராது. அதனால ஐடியாவை நோட் பண்ணிக்கிட்டேன். தைக்க யாராச்சும் கிடைச்சா செய்துடறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இப்படிக்கூட பண்ணலாமா சூப்பர் ஐடியா! ஆனா தண்ணி ஊத்தி வைச்சா எங்கவீட்டு வாண்டு மோப்பம் பிடிச்சு கவிழ்க்க பாப்பா, வேற ஐடியா எதாச்சும் பண்ணி வைச்சுடுறேன். கார்னர்ல வைக்க சரியான சாய்ஸ் இதுதான்;)

ஆமினா: உங்களுக்கு ஓட்டுதையல் தெரியும்னா கையிலேயே தைக்கலாம்பா. கீழே மடிச்சு ஹெம்மிங் பண்ணி மேல தையல் தெரியாம லேஸ்வைச்சுடலாம்;)

Don't Worry Be Happy.

நன்றி அட்மின் & டீம். ;))

கருத்துச் சொன்ன ஷகிலா, ஆமினா, பவி, கவி, & ஜெயலக்ஷ்மிக்கும் எனது நன்றிகள். ;) ஆகட்டும் மோகனா. ;))

நான் பயன்படுத்தி இருப்பது 'வெட்லுக்' வினோஜா. எந்தத் துணியும் பயன்படுத்தலாம். வெல்வெட் தூசு பிடித்துக் கொள்ளும். தவிர, இதற்கெல்லாம் காஸ்ட்லி துணி தேவையா! ;) இது வீட்டில் பயன்படாமல் மீந்து இருந்த துணி.

‍- இமா க்றிஸ்

அறுசுவை நண்பர்களுக்கும்
எனது முதல் வணக்கம்
மிகவும் நன்றாக உள்ளது எவ்ளோ எளிமையா அழகா ஒரு பூச்செடி செய்துகொடுத்த
இமா அவர்களுக்கு நன்றிகள் பல.
மீண்டும் வருகிறேன்.

"smile is the way to solve problem..Silent is the Way to Avoid all the Problems"

_()_ நல்வரவு சிவா. ;))
அறுசுவைக்குள் நுழைந்ததும் முதல் கருத்து எனக்குத்தானா! ;) சந்தோஷம். மிக்க நன்றி. ;)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா ரொம்பவே அழகு. எளிமையாகவும் இடத்தை அடைக்காமலும் இருக்கு. எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிக அழகாக செய்து இருக்கீங்க இமா. தெளிவாக புரியவைத்திருக்கீங்க. செய்து பார்க்கணும்ம்!!??. நன்றி.

ரொம்ப நல்ல இருக்கு இமா இப்படி தான் தண்ணீரை ஒளித்து வைக்கனுமா?

சூப்பர் ஐடியா

ஜலீலா

Jaleelakamal

மிக்க நன்றி லாவண்யா. ;)

ப்ரியா.. அது என்ன //!!??// ;)) நன்றி. ;)

நன்றி ஜலீ. அது என்னவென்றால், இந்த வீட்டுக்கு வந்த புதிதில் அடிக்கடி தண்ணீர் வராது. காலையில் வேலைக்குப் போகும் சமயம் பிரச்சினை ஆகி விடாமல் இருக்கட்டும் என்று இப்படிப் பிடித்து வைத்தேன். பிறகு வாளிகள் பார்க்க நன்றாக இல்லை என்றுதான் இந்த ஸ்கர்ட். :)

‍- இமா க்றிஸ்

இமா... வாளி வைத்து இத்தனை பயன் உள்ள, அழகான ஸ்டாண்ட்???!!! அசத்திட்டீங்க. நீங்க வாளிக்கு தைத்த ஸ்கர்ட் சூப்பர். ரொம்ப அழகான வேலைப்பாடு இமா.... உங்கள் வேலையை பற்றி சொல்லவும் வேண்டுமா.... வழக்கம் போல் அசத்தல். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னமோ சொல்றீங்க. ம். மிக்க நன்றி வனி. :)

‍- இமா க்றிஸ்

very good idea.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta