recycleing போட்டி

தோழிகளே,
என் மகள் 1 வது படிக்கிறாள். 2 நாட்களில் recycling போட்டி உள்ளது.என்ன செய்வது என்று எனக்கு idea இல்லை.
உதவுங்கள் தோழிகளே.

அறுசுவையின் கைவினைப் பகுதிக்கு போங்க. ரீசைக்ளிங் பொருட்களைக் கொண்டு செய்யும் பல பொருட்கள் இருக்கின்றன. அதில் ஏதாவது செய்யலாமே! லைட் ஹவுஸ் ரொம்ப நல்ல சாய்ஸ்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ப்ளொசம்,

நீங்கள் என்ன விதமான பொருளை ரீசைக்கிள் செய்து காட்ட விரும்புகிறீர்கள்? வீட்டில் தூக்கிப் போடக் கூடியதாக என்ன வைத்திருக்கிறீர்கள் (ப்ளாஸ்டிக் போத்தல்கள், ஐஸ்க்றீம் கோப்பைகள் இப்படி) என்பதைச் சொன்னால் உதவ முயற்சிக்கிறேன்.
போட்டிக்கு என்று நிபந்தனைகளும் இருக்குமே, சொல்லுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்