நவாபி ஃபூல்கோபி கறி

தேதி: October 6, 2010

பரிமாறும் அளவு: 2 நபர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

காலிப்ளவர் – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி-1
இஞ்சி,பூண்டு விழுது – 1 ½ தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
கரம் மசாலா- ½ டீஸ்பூன்
பெருங்காயம்- ஒரு பின்ச்
பிரிஞ்சி இலை-2
பட்டை-1
முந்திரி – 12 எண்ணம்
கிஸ்மிஸ்-12 எண்ணம்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கொழுப்பு நீக்கிய தயிர் – 2 தேக்கரண்டி
மல்லித்தழை- சிறிது.


 

காலிப்ளவரைய் சுத்தம் செய்து சுடு தண்ணியில் போட்டு எடுக்கவும்.

வெங்காயம் , தக்காளியைய் தனித்தனியாக அரைத்து வைக்கவும்.

முந்திரி, கிஸ்மிஸ் ஒன்றாக சேர்த்து அரைத்து வைக்கவும்.

ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் அதில்பிரிஞ்சி இலை, பட்டை, இஞ்சி பூண்டு விழுது, வெங்காய விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,பெருங்காயம் போட்டு கொதிக்க வைக்கவும்.

இதில் காலிப்ளவர் சேர்த்து கிளறி மூடிபோட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

10 நிமிடம் கழித்து அதில் தக்காளி விழுது சேர்த்து கிளறி மீண்டும் மிதமான தீயிலேயே காலிஃப்ளவரை வேகவிடவும்.

காலிஃப்ளவர் வெந்ததும் கரம் மசாலா, முந்திரி, கிஸ்மிஸ் விழுது சேர்த்து இரண்டு கொதி வந்தவுடன் தயிர் சேர்த்து கிளறி உடனே இறக்கவும்.

மல்லித்தழை தூவி பரிமாறவும்.


விரும்பினால் பச்சை பட்டாணி சேர்த்தும் செய்யலாம்

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜெயலஷ்மி.. குறிப்பும் பேரும் மிக புதுமைய இருக்கு...எண்ணெய் வைத்து எதையும் வதக்காமல் எல்லாமே வேக வைத்து செய்திருப்பது மிகவும் வித்தியாசம். அதுவும் முந்திரி கிஸ்மிஸ் இரண்டையும் அரைத்து சேர்க்க சொல்லியிருப்பதும புதுமை.. டேஸ்ட் எப்படி இருக்கும் என்றே கெஸ் பண்ண முடியவில்லை.. கண்டிப்பாக நன்றாக இருக்கும். கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். நன்றி..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

fine nalla recipee

u r the best.

பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி. செய்து பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்;)

Don't Worry Be Happy.

இப்ப தான் ஜெயா செய்தேன். அருமையா இருக்கு. இனி அடிக்கடி செய்வேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாவ், செஞ்சு சாப்பிட்டாச்சா;) நன்றி நன்றி;-)

Don't Worry Be Happy.

கண்டிப்பா செய்து பாத்துட்டு சொல்லுங்க. டேஸ்ட்டும் நல்லாவே இருக்கும்.
பின்னூட்டத்திற்கு நன்றி;)

Don't Worry Be Happy.

ஜெயா..... பேரப்பாத்ததும் ஏதோ நான் அயிட்டம்னு நினைச்சுட்டேன்.....ஆனா படிச்சதுக்கப்புரம் தான் வெஜ்ன்னு தெரிஞ்சது..... நேத்தே படிச்சுட்டேன்..... இன்னக்கி தான் செஞ்சேன் சூப்பரா இருந்ததுப்பா...... டேஸ்ட் என் ஹஸ்சுக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது......

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

ஆமாம் ரொம்ப நல்லாயிருக்கும் , எண்ணெய் கம்மியா உபயோகித்தமாதிரியே தெரியாது. ரொம்ப நன்றி பின்னூட்டம் இட்டதற்கு;)

Don't Worry Be Happy.